Published:Updated:

உன்னை நம்புறோம் முருகா!

இது உள்ளாட்சி ஆச்சர்யம்...

உன்னை நம்புறோம் முருகா!

இது உள்ளாட்சி ஆச்சர்யம்...

Published:Updated:
##~##

ரு வழியாக உள்ளாட்சித் தேர்தல் கலாட்டாக்கள் எல்லாம் முடிந்து, அமைதியாகி இருக்கிறது தமிழ்நாடு. கள்ள ஓட்டு, பூத் சேஸிங் அதிரடிகளுக்கு நடுவில் சில ஆச்சர்யங்களும் பூக்கத்தான் செய்தன இந்தத் தேர்தலில். அதில் ஒன்றுதான், கோவிந்தாபுரம் ஊராட்சியின் தலைவர் நியமனம்.

 கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே இருக்கிறது கோவிந்தாபுரம் ஊராட்சி. என்.மேட்டூர், கோவிந்தாபுரம் என்று இரண்டு கிராமங்களைக் கொண்ட இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக, போட்டியாளர் யாரும் இன்றி ஒருமனதாகத் தேர்வாகி இருக்கிறார் 27 வயதே ஆன முருகன்!  

உன்னை நம்புறோம் முருகா!

தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அத்தனை முக்கிய கட்சியினரும் இங்கே இருந்தும் யாரும் முருகனை எதிர்த்துப் போட்டியிடவில்லை. அவர்களிடம் கேட்டால், 'நல்ல மனுஷன். வந்துட்டுப் போகட்டும். கட்சிகளைத் தாண்டி மக்களோட நலனில் அக்கறைகொண்டவர் அவர்’ என்கிறார்கள்.

''சின்ன வயசுல இருந்தே சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்தா கொதிச்சுப் போயிருவேன். இதுபத்தி ஊர் மக்கள்கிட்ட அடிக்கடி பேசுவேன். அவங்களுக்கு நிறைய உதவியும் செஞ்சிட்டு வந்தேன். 2006-ம் வருஷம் உள்ளாட்சித் தேர்தல்ல இந்த ஊராட்சி மன்றம் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுச்சு. அப்போ எனக்கு வயசு 22. எதுவோ ஒரு சக்தி என்னை உந்தித் தள்ள... எலெக்ஷன்ல குதிச்சேன். அப்போ தி.மு.க-வுக்கும் தே.மு.தி.க.வு-க்கும் செம ஃபைட்டு. அரசியல் அனுபவம் உள்ள அந்த வேட்பாளர்களுக்கு நடுவுல நான் பிரசாரத்துக்கு போனப்ப, 'சின்னப் பையன் வெள்ளாமை வூடு வந்துச் சேராது’னு கட்சிக்காரங்க கேலி

உன்னை நம்புறோம் முருகா!

பேசுனாங்க. உடனே நான், 'இத் தனை நாளு பெரியவங்களுக்கு வாய்ப்பு கிடைச்சு என்ன சாதிச்சாங்க? இளம் தலைமுறையை நம்புங்க’னு வீடு, வீடாகப்போய் பேசினேன். கட்சி கவர்ச்சிக்கு நடுவுல என் பேச்சையும் நிதானமா கேட்டாங்க என் ஊர் ஜனங்க. கடைசியில 35 ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சேன். அப்ப தமிழ்நாட்டுலேயே இள வயசு பஞ்சாயத்து தலைவர் நான்தான்.

துறுதுறுன்னு வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன். எங்க ஊர்ல பல வருஷமா முதியோர் உதவித்தொகை கிடைக்காம நிறைய பேர் இருந்தாங்க. அப்படி வயசான 100 பேரைத் திரட்டிக்கிட்டு அதிகாரிகளிடம் போய் போராடி, ஒரே நாளில் 100 பேருக்கும் முதியோர் உதவித் தொகை வாங்கிக் கொடுத்தேன். ஸ்கூலுக்கு ஆறு லட்சத்துல கட்டடம் கொண்டாந்தேன். அங்கன்வாடி கட்டுனேன்; 24 மணி நேரமும் வாட்டர் சப்ளைக்கு ஏற்பாடு செஞ்சேன். நூலகம், மயானம் எல்லாம் என் முயற்சியில ஊருக்குள்ள வந்துச்சு. மளமளன்னு போர்வெல்களை போட்டுக் கொடுத்தேன். ரெண்டு வருஷத்துலேயே இம்புட்டு வேலைகளையும் முடிச்சிப்புட்ட என்னை ஊர்க்காரங்க ஆச்சர்யமா பார்த்தாங்க.

உன்னை நம்புறோம் முருகா!

ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இதுல ஆச்சர்யம் ஒண்ணும் இல்லை. பஞ்சாயத்து தலைவர்களுக்கு இது மாதிரி நிறைய அதிகாரங் கள் இருக்குது. ஒரு அடி முன் வெச்சாப் போதும். அத்தனையும் ஈஸியா நிறைவேத்திப் புடலாம். அதனாலதான் இந்த முறை தலைவர் பதவிக்கு என்னை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் பண்ணலை. 'உன்னை முழுசா நம்பு றோம் முருகா’னு  என்னை தலைவர் பதவியில உட்கார வெச்சுப்போட்டாங்க...'' - வெள்ளந்தியாக சிரிக்கிறார் அன்னப்போஸ்ட் தலைவர்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்