##~##

னிதர்களின் இயல்பான வாழ்வியலையும் அவர்களின் யதார்த்தங்களையும் புதிய கோணங்களில் கேமராவில் பதிவுசெய்வது ஈரோடு சுரேஷ்பாபுவின் பழக்கம். இவர் தன்னுடைய நண்பர் களுடன் சேர்ந்து 'தமிழில் புகைப்படக் கலை’ என்று இணையத்தில் ஒரு வலைப்பூ நடத்திவருகிறார்!

 இதில் புகைப்படக் கலை சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களும் தமிழில் கிடைக்கின்றன. ''ஒரு புகைப்படத்தில் ஆயிரம் விஷயங்களைச் சொல்ல முடியும். நாம எடுக்கும் புகைப்படங்கள் ஒவ்வொரு கோணத்துலயும் ஒவ்வொரு விதமா நமக்குப்படும். எனக்கு மனிதர்களின் வாழ்வியலைப் படம் பிடிக்கணும்கிறது ஆர்வம்.

ஒரு முறை கொட்டுற மழையில் நனைஞ்சுக் கிட்டுப் வண்டியில போயிட்டு இருந்தேன். அப்ப ஒரு பெரியவர் மழைனுகூடப் பார்க்காம வயக்காட்டுல வேலை பார்த்துட்டு இருந்தார். உழைப்போட உன்னதத்தை இதைவிட அழகியலாக படம் எடுக்க முடியுமா? ஒரு கடும் கோடையில் மைதானத்தில் விளையாடிட்டு வந்த சிறுவன், குழாயில சொட்டிக்கிட்டு இருந்த தண்ணியை வாயைத் திறந்துக் குடிச்சான். தாகத்தை இதைவிட அருமையாப் படம் பிடிக்க முடியுமா?

பெரும்பாலும் யாரைப் படம் எடுத்தாலும் அதை அவங்க உணராதபடிதான் எடுப்பேன். அப்புறம் போய் சொல்லிடுவேன். ஏன்னா அவங்களோட அனுமதி வேணும் இல்லையா? 2010-ம் ஆண்டு 64 ஆயிரம் புகைப்படங்கள் கலந்துகிட்ட 'பெட்டர் போட்டோகிராஃபி’ போட்டியில் இரண்டாவது பரிசு வாங்கினேன். 'எட்சன் போட்டோகிராஃபி ப்ரின்டர்’ நிறுவனம் நடத்திய மாதாந்திரப் போட்டியில் முதல் பரிசு வாங்கி இருக் கேன். மொத்தத்துல கேமரா என்னுடைய மூன்றாவது கண்'' என்கிறார் பெருமையாக!

- கி.ச.திலீபன்

இது மூன்றாவது கண்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு