எனக்கு இருட்டில் மலையேற வேண்டுமே என்ற கவலை; அவர்களுக்கோ, வழி கிடைத்த மகிழ்ச்சி. யாரும் சாப்பிடவில்லை; சாப்பிடவும் பிடிக்கவில்லை. மணி, ஆக்ஸிலரேட்டர் அழுத்தும் வேகத்தைப் பார்த்தால், ஸ்ரீநகரைத் தவிர வேறு எங்கும் நிறுத்தமாட்டார் போலிருந்தது. இரண்டு தினங்களாக சாலையில் காத்திருந்த வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தும் யத்தனத்தில் பாய்ந்துகொண்டிருந்தன. ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சுமார் 300 கி.மீ தூரம். ஜம்முவில் இருந்து செங்குத்தாக மேலேறும் மலைச் சாலையில், பட்னி என்ற இடம்தான் உயரமானது. அங்கிருந்து மீண்டும் கீழிறங்கத் துவங்கி மலைகள் பல கடந்து காஷ்மீர் சமவெளிக்குள் நுழைய வேண்டும். சாலையைத் தவிர, எல்லாமே இருட்டாகத்தான் இருந்தன. நான் மொபைலில் ஜிபிஎஸ் ஆன் செய்தேன். இருட்டில் அந்த இடங்கள் எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும், கூகுள் மேப் எப்படிப்பட்ட இடத்தில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டியது. மலைமீது ஏறத் துவங்கிய சில கிலோ மீட்டரிலேயே ஒரு பெரிய டனல் இருந்தது. அதற்குள்தான் போக்குவரத்து.

ராணுவத்தினரின் நடமாட்டம் ஆரம்பமாகி இருந்தது. ஆனாலும், போலீஸ் ஆங்காங்கே நின்று வசூல் செய்வதில் மட்டும் சுணக்கம் காட்டவில்லை. எவ்வளவு மழையானாலும் எவ்வளவு குளிரானாலும் லாரியைப் பார்த்தவுடனே கைநீட்டும் லாவகம் அவர்களுக்குக் கைவந்த கலை. பட்னி அருகே சாலையோரத்திலேயே இருந்தது போலீஸ் ஸ்டேஷன். பிளாஸ்டிக்கால் ஆன பேரிகார்டில் சாலையை மறித்து, ஒவ்வொரு லாரியாக வசூல் செய்துகொண்டிருந்தனர் சில காவலர்கள். சற்றுத் தள்ளி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினர் சிலர் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள். ஒவ்வொரு லாரியாக தண்டம் அழுதபடி நகர்கின்றன. அதில் ஒரு லாரி பணம் தராமல் ஆக்ஸிலரேட்டரை அழுத்த.... பிளாஸ்டிக் பேரிகார்டை லாரியின் முன்னே எட்டி உதைக்க... பிளாஸ்டிக்கில் மோதிய லாரி பெருஞ்சத்தத்துடன் நிற்கிறது. வசைகள் வாக்குவாதம் நடந்த பிறகு பணம் தராமல் சென்றது அந்த பஞ்சாப் லாரி. நான் ராணுவத்தினரையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் முகத்தில் சலனம் இல்லை. அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர், ‘பணம் தராதே’ எனக் குறும்பாக என்னிடம் சைகை செய்கிறார். ஆனாலும் மணிக்கு வாக்குவாதம் செய்ய விருப்பமோ, நேரமோ இல்லை. 200 ரூபாய் பணம் தந்துவிட்டு நகர்ந்தோம். பட்னி தாண்டிய பிறகு போலீஸ் இல்லை. இனி எல்லாமே ராணுவம்தான்.

தவி நதியின் இடதுகரையில் பயணம் செய்து பட்னி தாண்டிய பிறகு செனாப் நதியின் கரை வந்தது. சிறிது தூரம் இடக்கரை வழியாகச் சென்று சட்டென நதியின் குறுக்கே கட்டிய பாலத்தில் திரும்பி வலது கரையில் ஏறினோம். அருகே இருந்த நதி படிப்படியாக ஆழமாகிக்கொண்டே செல்வதை உணர முடிந்தது. சாலை சிறப்பாக இல்லை. ஆனால், என்னதான் தரமாக சாலை அமைத்தாலும் மூன்று மாதங்களுக்குத்தான் தாங்கும் என்கிறார்கள். கற்களும் பள்ளங்களுமாக இருந்த சாலையில் சரக்கு இல்லாத லாரியில் ஆடி அசைந்து தடதடவெனச் செல்வது மகா கொடுமையாக இருந்தது. இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை.

ஜம்மு - ஸ்ரீநகர் சாலையில் முக்கியமான ஓர் இடம், ஜவஹர்லால் டனல். 2.85 கி.மீ நீளம்கொண்ட இந்த டனல், போக வர இரு பிரிவுகளாக உள்ளன. ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடிந்த அகலம். ஒரே சீரான வேகத்தில் செல்ல வேண்டும்; நடுவில் நிறுத்தக் கூடாது என பலவிதமான கட்டுப்பாடுகள். ஏராளமான ராணுவத்தினர் அந்த டனலைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதைக் கடப்பதற்குள் மணிக்கு பயம் வந்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு சுரங்கத்துக்குள் எந்த இலக்கும் தெரியாமல் செல்வது போன்ற பய உணர்வை அளித்தது டனல். அதைவிட்டு வெளியேறிய பிறகுதான் மணிக்கு மூச்சே வந்தது. டனல் தாண்டி சில கிலோ மீட்டரிலேயே சமவெளி ஆரம்பமாகிவிட்டது. அங்கிருந்த டோல்கேட்டில் முத்திரை பெற்றுக்கொள்ள லாரியை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கியபோதுதான், குளிரின் உக்கிரம் எங்களுக்குத் தெரிந்தது.

அதிகாலை 6 மணி இருக்கும். ராணுவத்தினர் குழுவாக சாலையில் பல இடங்களைச் சோதனை செய்துகொண்டே செல்வது தெரிகிறது. திடீரென எங்களைக் கடந்துசென்ற ஜீப்பில், துப்பாக்கி நீட்டிய ராணுவ வீரர்கள் முன்பக்கம் பார்த்து ஒருவரும், பின்பக்கம் பார்த்து ஒருவரும் நிற்கிறார்கள். சின்ன ஊர்களைக் கடக்கும் போதெல்லாம், ஊரின் எல்லையில் புகைபோக்கி போலிருந்த கூண்டுகளில் ராணுவத்தினரின் தலை தெரிகிறது. திரும்பிய பக்கம் எல்லாம் ராணுவ வீரர்கள். புகை மூடியது போன்ற மஞ்சுப் படலம். அதில் மோப்ப நாயுடன் வெடிகுண்டு சோதனைக் கருவியுடன் தரையில் துழாவிக்கொண்டு திரியும் ராணுவத்தினரை வழிநெடுகக் காண முடிந்தது.

வழியில் இருந்த ஊர் ஒன்றில் போக்குவரத்து நெரிசலுக்காக லாரியை நிறுத்தியிருந்தபோது, எதிர்ப்புறம் நின்றிருந்த ராணுவ லாரியின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தவர், ‘‘தமிழ்நாடா... எந்த ஊர்?’’ என்று தமிழில் கேட்கவும், எங்கள் அனைவருக்குமே அப்படி ஒரு உற்சாகம். ‘‘சேலம்’’ என்றதும், ‘‘நான் திருச்சி’’ என்றார். போட்டோகிராபர் ரமேஷின் கையில் இருந்த கேமராவைப் பார்த்துவிட்டு, “பார்த்து போட்டோ எடுங்க... எங்க ஆளுங்களுக்கு நீங்க கையில வெச்சிருக்கிறது கேமராவா துப்பாக்கியானு தூரத்துல இருந்து பார்த்தா தெரியாது’’ என்றதும், ரமேஷுக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போனது. கேமராவை பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிட்டார்.

நாங்கள் செல்ல வேண்டியது ஸ்ரீநகர் அல்ல. சுமார் 50 கி.மீ தூரத்தில் உள்ள ஷோபியான் என்ற ஊர். அங்கேதான் காஷ்மீர் சமவெளியின் ஆப்பிள் மார்க்கெட் இருக்கிறது. ஜம்முவில் இருந்து உடன் வந்த தமிழக லாரிகள் ஓரிடத்தில் பிரிந்தன. அவர்களுக்கு ஆப்பிள் தோட்டத்திலேயே லோடு ரெடியாக இருக்கிறது என்றார்கள். ஸ்ரீநகர் செல்லும் பிரதான சாலையில் இருந்து இடப்பக்கம் பிரியும் கிளைச்சாலையில் திரும்பி ரயில் பாதையைத் தாண்டி, ஷோபியான் ஆப்பிள் மார்க்கெட்டில் நுழைந்தது லாரி. அங்கு ஏற்கெனவே ஏராளமான லாரிகள் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து எங்களுக்குத் திகைப்பு. நேரம் மதியம் 12 மணியைத் தாண்டியிருந்தது. ஏஜென்ட்டுக்கு போன் செய்தார் மணி. அவர், ‘இன்று ஓய்வெடுங்கள்; நாளை அல்லது மறுதினம் லோடு கிடைத்துவிடும்’ என்று சொல்லவும், எங்களுக்கு ஏமாற்றம். அடுத்து என்ன செய்வது என ஆலோசனை செய்தோம்.

திட்டமிட்ட பயணத்தில் மூன்று தினங்கள் காத்திருப்பிலேயே கழிந்து விட்டன. மேலும், இரண்டு தினங்கள் காத்திருக்க எங்கள் இருவரது உடலும் தாங்குமா என்று சந்தேகமாக இருந்தது. ஏனென்றால், இன்ஜினை ஆஃப் செய்த சில நிமிடங்களிலேயே கேபின் சில்லிட்டு விட்டது. லாரியின் எந்த உலோக பாகத்தையும் வெறும் கையால் பிடிக்க முடியவில்லை. பரமேஸ்வரன் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். ஸ்டவ்வைப் பற்ற வைத்து கேபினைச் சூடாக்கினார். அந்தக் கதகதப்பில் லாரிக்குள்ளேயே உட்கார்ந்திருந்தோம்.

எங்கள் பயணத் திட்டத்தில், மீண்டும் ஊருக்குத் திரும்ப ரயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தோம். ரயிலைப் பிடிக்க, மீண்டும் கீழே ஜம்முவுக்குத்தான் செல்ல வேண்டும் எனவே, கூடுதலாக எங்களுக்கு இருந்த மூன்று தினங்கள் காத்திருப்பதில் காலியாகிவிட்டிருந்தது. அன்று இரவு திரும்பினால்தான் ரயிலைப் பிடிக்க முடியும். எனவே, எங்கள் பயணத்தின் இறுதி நாளில் இருந்தோம். காஷ்மீரைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற எங்களது திட்டம் தவிடுபொடியாகிவிட்டது. ஸ்ரீநகர் சென்று விடுதியில் குளித்துவிட்டு, மாலையில் பஸ் மூலம் ஜம்மு செல்வது என முடிவு செய்தோம். மணியிடமும் பரமேஸ்வரனிடமும் விடைபெற்றுக்கொண்டு கார் மூலம் ஸ்ரீநகர் அடைந்து விடுதி சேர்ந்தோம். ஸ்ரீநகருக்கு வந்ததன் அடையாளம் தால் ஏரிதான். எனவே, தால் ஏரிக்குச் சென்று படகுச் சவாரி செய்துவிட்டு பஸ் பிடித்தபோது, மீண்டும் மாலையாகிவிட்டிருந்தது. வரும்போது இருந்த தடதடப்பு இப்போது இல்லை. ஆனால், சொகுசு பஸ்ஸின் இருக்கை, லாரியின் மரப்பலகை அளித்த அன்யோன்யத்தை அளிக்கவில்லை.

- (நெடுஞ்சாலை நீளும்)