Published:Updated:

மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையிலும் கடமை தவறாத காஞ்சி எஸ்.பி!

எம்.குமரேசன்

ரத்தம் வழிந்த நிலையிலும் பணியாற்றிய எஸ்.பி

மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையிலும் கடமை தவறாத காஞ்சி எஸ்.பி!
மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையிலும் கடமை தவறாத காஞ்சி எஸ்.பி!

ல்வீச்சில் மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையிலும் கைக்குட்டை வைத்து பொத்திக்கொண்டு பணியாற்றிய காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 

செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி அருகே அரசுப் பேருந்துடன் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், லாவண்யா என்ற இளம் பெண் பலியானார். சாலையில் கிடந்த இளம் பெண்ணின் உடலை அப்புறப்படுத்த விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.  இதனால், செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக நின்றன. பல கிலோ மீட்ட்ர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுதது நின்றன. காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

எனினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். சிலர் போலீஸார் மீது கல்லெறிந்தனர். இதனால், போலீஸார் தடியடி நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் வீசிய கல் ஒன்று, எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி தலையைத் தாக்கியது.  அவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த மற்ற போலீஸார் பதறிப் போனார்கள். எஸ்.பி உடன் இருந்த போலீஸார்  ``மருத்துவரிடம் செல்லலாம் சார்...''' என்று எஸ்.பி- யிடம் கூறினர். அவரோ சிறிய காயம்தான் என்றவாரே தலையில் ரத்தம் வழிந்த  இடத்தில் கைக்குட்டையை வைத்துப் பொத்தியபடி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதைப் பார்த்த மற்ற போலீஸாரும் பொதுமக்களும் வியப்பும் ஆச்சர்யமும் அடைந்தனர். போக்குவரத்தை முற்றிலும் சீராக்கிய பின்னரே, காயத்துக்குச் சிகிச்சை எடுக்க எஸ்.பி சென்றார்.