Published:Updated:

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

காலேஜ் கலாட்டா!

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

காலேஜ் கலாட்டா!

Published:Updated:
##~##

ளும் கட்சிக்குக் கொண்டாட்டம், மற்ற கட்சி களுக்கு மானாவாரித் திண்டாட்டம் என்று உள்ளாட் சித் தேர்தல் முடிவுகள் வந்திருக்கும் நிலையில், இன்னும் விலகவில்லை தேர்தல் ஃபீவர். ''காலேஜ் எலெக்ஷனுக்கு என்ன வாக்குறுதிகளை அள்ளி வீசுவீர்கள்?'' என்ற கேள்வியுடன் அணுகிய இடம்  திருவண்ணாமலை கம்பன் கல்லூரி.

 வாட்டர் பாட்டில், கேன்டீன் ஸ்நாக்ஸ், கிளாஸ் ரூம் சென்டிமென்ட்ஸ் என்று அதகள அதிரடி வாக்குறுதிகள் வந்து இறங்க... அடேங்கப்பா, அரசியல் வாதிகள் தோத்தாங்க போங்க! முதலில் 'அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே’ என்று மைக் பிடித்தது இரண்டாம் ஆண்டு மாணவி நிகிதா.

''அன்பார்ந்த தோழிகளே! அரியர் பேப்பர்ஸை ஈஸியாகக் கிளியர் பண்ண, கேன்டீனில் ஃப்ரீயா பர்கரும் பப்ஸும் சாப்பிட, அட்டென்டன்ஸ்பற்றிக் கவலையே படாமல் எக்கச்சக்க லீவு போட, எக்ஸாமில் பிட் அடிக்க, காலேஜ் பஸ்ஸில் ஃபுட்போர்டு அடிக்க வாக்களிப்பீர் இரண்டாம் ஆண்டு நிகிதாவுக்கே! நான் மட்டும் ஜெயிச்சா வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன படங்களோட சி.டி. சண்டே அன்னைக்கே ஃப்ரீ!'' என்று 'காசா, பணமா’ வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த நிகிதா, அடுத்து வீசியது அணுகுண்டு சென்டிமென்ட்.  

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

''ஃபர்ஸ்ட் இயர் கத்துக்குட்டி... ஃபைனல் இயர்  நாளைக்குப் போறவங்க. ஆனா, நாங்க ஒரு வருஷம் கஷ்ட நஷ்டத்தை அனுப வித்து, எதெது எப்படி எப்படி எல்லாம் இருந்தா சூப்பரா இருக்கும்னு பெரிய லிஸ்ட்டே போட்டு வெச்சிருக்கோம்'' என்றார் நிகிதா (அடடடடா... அப்பப்பா)!

'அடுத்து முதலாம் ஆண்டு பிரியாவை ஆதரித்துப் பிரசாரம் செய்யப்போகிறவர் பிரசார பீரங்கி சவுண்டு சரோஜா’ என்று ஆரவாரமாகக் களம் இறக்கிவிடப்பட்டார் சரோஜா. ஆனால் அவரோ, ''பரம்பரைக்கே உட்கார்ந்து சாப்பிட வசதி இருந்தாலும், ஃபாஸ்ட் ஃபுட்ல நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும். இன்னிக்கு செத்த மீன் நாளைக்குக் கருவாடு ஆகும். ஆனால், இன்னிக்கு வெச்ச மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டுக் குழம்பா மாறாது. கோலமாவில் கோலம் போடலாம். ஆனா, கடலை மாவில் கடலை போட முடியுமா? ஆகவே, சீனியர்ஸை நம்பி ஏமாறாதீர் கள். நீங்கள் வாக்களிக்க வேண்டியது, முதலாம் ஆண்டு முத்து, எங்கள் சொத்து. இளைஞிகளில் இளைஞி பிரியா.. பிரியா... பிரியாவுக்கே!'' என்று மொக்கை ஜோக்குகளால் ஒரு 'சிறப்புரை’யை (ஐயோ முடியலைடா சாமி) ஆற்றினார்.

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு அதிரடிப் பிரசாரத்தை முறியடிக்கக் களத்தில் குதித்தார் மூன்றாம் ஆண்டு மாணவி மாலதி. தன் கேங்குடன் நேராகச் சென்று லெக்சரர்களிடம் காலில் விழாத குறையாக ஓட்டு கேன்வாஸிங் செய்ய, ''ஓட்டு கீட்டுனு எங்களைத் தொல்லை பண்ணினீங் கன்னா, பக்கம் பக்கமா அசைன்மென்ட் எழுத வேண்டியிருக்கும் பரவாயில்லையா?'' என்று அதிரடியாக மிரட்டினார்கள் ஆசிரியர்கள். அப்புறம் எங்கே அங்கு நிற்கப்போகிறார்கள் மாண்புமிகு மாணவிச் செல்வங்கள்?  

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

நேரடியாக மாணவிகளிடமே பொன்னான வாக்குறுதியை அள்ளி வீசத் தொடங்கினார் மாலதி. ''வாக்குறுதி ஒண்ணு, எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாணவர்களுக்கு அசைன்மென்ட்ஸ் கொடுக்கக் கூடாதுனு காலேஜ் விதியைக் கட்டாயமாகத் திருத்துவோம். நம்பர் டூ, ஃபைனல் இயர் ஸ்டூடன்ட்ஸுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி அமெரிக்காவுல ஒபாமாவுக்கு நிகரான வேலை வாங்கித் தரப்படும். வாக்குறுதி மூன்று, எல்லா மாணவிகளுக்கும் மேக்கப் கிட் ஃப்ரீ!'' என்று அளந்துகொண்டு இருக்கும்போதே, ''ஒபாமா ஆகறது எல்லாம் இருக்கட்டும்... அடுத்த செமஸ்டர்ல அரியர்ஸ் வைக்காம பாஸ் பண்ணுங்க'' என்றபடி பி.டி. மாஸ்டர் ஜெரினா  வர... மொத்தக் கூட்டமும் எஸ்கேப்!

- யா.நபீசா