Published:Updated:

என் ஊர்!

காந்தி கலாட்டாவில் சம்பாதித்த பெரிய மனிதர்கள்...

என் ஊர்!

காந்தி கலாட்டாவில் சம்பாதித்த பெரிய மனிதர்கள்...

Published:Updated:
##~##

''ஊர் குறித்துச் சொல்ல ஒவ்வொருவருக்கும் நிறைய  உண்டு என்றாலும், எல்லோருடைய நினைவுகளும் ஒன்று போலவே இருக்காது'' என்று பீடிகையோடு தொடங்கிய நாடக இயக்குநர் பிரளயன், தன் ஊரான திருவண்ணாமலைபற்றி சொல்லத் தொடங்கினார்.

 ''எங்கள் வீடு அண்ணாமலையார் கோயிலின் தெற்கு வாசலில் இருந்தது. திருமஞ்ஞனக் கோபுர வீதி என்று எங்கள் தெருவுக்குப் பெயர். கோயிலின் நான்காவது பிராகாரத்தில் அம்மணியம்மன் கோபுரம் அருகேதான் பையன்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். எது பவுண்டரி லைன் என்பதில் அடிக்கடி தகராறு வரவே, ஒரு சிதிலமான பிள்ளையார் சிலையைக் கொண்டுவந்து நிறுத்தி, அதைத் தாண்டி பந்து போனால் ஃபோர் என்று கணக்கு வைத்துக் கொண்டோம். பின்னாளில் அது 'பவுண்டரி பிள்ளையார்’ என்று பிரசித்தி பெற்றது. இப்போது எல்லாம் ஊருக்குச் சென்றால், அந்தப் பிள்ளையாரைக் காண முடிவதில்லை.

திருவிழாக்களின்போது ஊரே களைகட்டி இருக்கும். லக்ஷ்மி பீடி, டி.ஏ.எஸ். பட்டணம்பொடி தயாரிக் கும் நிறுவனங்கள், அவற்றின் விற்பனைக்காக கதைப் பாடல், கதைச்சிந்து, கொலைச்சிந்து போன்ற 'ழிஷீனீணீபீவீநீ tலீமீணீtக்ஷீமீ’ எனப்படும் நாடகக் கலை வடிவங்களில் தங்கள் பொருட்களின் பெருமைகளை விளம்பரப்படுத்துவார்கள். குடும்ப ஒழுக்கத்தை வலியுறுத்துவதாக இருக்கும் அந்த நாடகங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு எதிரானதாக இருக்கும்.

என் ஊர்!

திருவண்ணாமலை நகரில் உற்பத்தி என்று பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. கோயிலால் வரும் வருமானம் அதிகம். என் சிறு வயதில் திருவண்ணாமலையில் மூன்றே மூன்று பள்ளிக்கூடங்கள்தான் இருந்தன. நான் படித்த நகராட்சிப் பள்ளிக் கட்டடத்தைக் கல்லூரிக்காக எடுத்துக்கொண்டது அரசாங்கம். அதனால் நாங்கள் ஒரு கொட்டகையில்தான் படித்தோம். எந்த ஊருக்கும் இல்லாத வகையில் எங்கள் ஊருக்குத்தான் கார்த்திகை தீபம் என்றால் 10 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அப்படியான ஒரு விடுமுறை முடிந்து, நாங்கள் வந்து பார்த்தபோது பன்றிகள் எங்கள் பள்ளிக்கூடக் கொட்டகையில் குடியேறி இருந்தன. கோபம் அடைந்த மாணவர்கள் சிலர் அந்தக் கொட்டகையைக் கொளுத்திவிட்டனர். அதன் பின், சுடு காட்டுக்கு அருகே ஈசான்ய மண்டபம் என்று அழைக்கப் படும் இடத்தில் நாங்கள் எங்கள் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தோம். இப்படிப்பட்ட மோசமான நிலையில் இருந்த திருவண்ணாமலையில் இப்போது நிறைய தனியார் கல்லூரிகள் வந்துவிட்டன.

காந்தியின் மரணத்துக்குப் பின்னர் இந்தியா முழுக்க எங்குமே கலவரங்கள் நடந்ததாகப் பெரிய அளவில் பதிவு கள் இல்லை. ஆனால், 'காந்தியைக் கொன்றது ஒரு இஸ்லாமியர்தான்’ என்று வதந்தி பரவியதும், திருவண்ணாமலையில் சிறுபான்மையினருக்கு எதிராக மிகப் பெரிய கலவரம் நடந்தது. திருவண்ணாமலை நகரின் பெரிய மனிதர்கள் என்கிற அடையாளத்தோடு உலா வந்தவர்களை 'இவர் காந்தி கலாட்டாவில் சம்பாதிச்சவர்’ என்று மக்கள் கூறுவதைச் சிறு வயதில் நானே என் காதாரக் கேட்டிருக் கிறேன்.

என் ஊர்!

இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் துறவுபூண்டு மிச்ச காலத்தைக் கழிக்கவும், வறுமை காரணமாகவும் இங்கே வருவது உண்டு. விசிறி சாமியார் என்று அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமார் அப்படி ஒருவராக திருவண்ணாமலைக்கு வந்தவர்தான்.

இப்போது நான் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், சிறு வயது ஞாபகங்கள் என்று வரும்போது திருவண்ணாமலை அதில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது!''

- கவின்மலர், படங்கள்: பா.கந்தகுமார்