Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

விவசாயி மகன் விவசாயி ஆகக் கூடாதா?!

``இந்த வாட்ஸ்அப்பை திறந்தாலே, டென்ஷன் ஆகுது..’’

``என்னதான் பிரச்னை அனு உனக்கு?’’

``ஒண்ணு ரெண்டில்ல... குறைஞ்சது 200 குரூப்லயாவது கோத்துவிட்டு கடுப்பேத்துறாங்க. இதனால, நண்பரோட நண்பருக்கு எல்லாம் என் போன் நம்பர் ஈஸியா தெரிஞ்சுடுது இனியா. என்ன பண்றதுனே புரியலை.’’

``சிம்பிள்பா. நான் என்னோட கான்டாக்ட்ஸுக்கு மட்டும் என் டி.பி தெரியுற மாதிரி வெச்சிருக்கேன். வாட்ஸ்அப் பெயர் பதிவுலகூட என்னோட பெயரை பதிவு செய்யலை. இந்த டெக்னாலஜி யுகத்துல சில விஷயங்களைத் தொலைக்கவோ, தொல்லையா தோள்ல சுமக்கவோ முடியாது.’’

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

``சமீபத்துல என் வாட்ஸ்அப்ல வந்த வீடியோவை எதேச்சையாக க்ளிக் பண்ணினா... கண்ணெல்லாம் கலங்கிருச்சு. இறந்துபோன தன் மனைவியைப் புதைக்கக்கூட காசு இல்லாம அரசாங்கத்திடம் அமரர் ஊர்தி கேட்டிருக்கார் ஒருத்தர். ஆனா, அந்த நேரத்துலகூட அவருக்கு கருணை காட்டப்படல. மகள் ஒரு பக்கம் அழுது துடிக்க, இன்னொரு பக்கம் இறந்துபோன தன் மனைவியைத் துணியில சுத்திட்டு 10 கிலோ மீட்டர் வரைக்கும் தோள்ல தூக்கிட்டே நடந்து போயிருக்கார்.

இதையெல்லாம் பார்க்குறப்போ, மனிதாபி மானம் கொஞ்சம் கொஞ்சமா செத்துப் போயிட்டு இருக்கிறதை உணர முடியுது.’’

``மனிதாபிமானம் இல்லாத இந்த யுகத்துல பொண்ணுங்க பஸ்லகூட நிம்மதியா போக முடியல. அடுத்த வாரம் திண்டுக்கல்லுக்குப் போகணும். ட்ரெயினா, பஸ்ஸானு குழப்பமா இருக்கு.''

``பேரன்ட்ஸ்கூடதானே போற?’’

``இல்ல  இனியா. அவங்க ரெண்டு பேருக்குமே ஆபீஸ் இருக்கு.’’

``டோண்ட் வொர்ரி ஆதிரா? நான் ட்ராவல் டிப்ஸ் லிங்க் ஒண்ணு அனுப்புறேன்... படிச்சுட்டுப் போ.''

``கொஞ்சம் டேக் டைவர்ஷன் போகலாமா? அனு... உன் டிரெஸ் சூப்பர். என்ன திடீர்னு புது டிரெஸ்..?’’

``ஹேய்... நல்லாருக்கா? என் சித்தப்பா பையன் வெங்கி வாங்கிக் கொடுத்தது!’’

``யாரு நாலாவது படிக்கிற வெங்கியா? கதை விடாதப்பா!’’

``நம்புங்க... சித்தப்பா அவனுக்கு கொடுத்த பணத்தை க்யூட்டா சேமிச்சு 'அக்கா என்னோட கிஃப்ட்'னு இந்த டிரெஸ்ஸை கொடுத்தான்!’’

``காலேஜ் படிக்கிற எனக்கு சேமிக்கும் பழக்கம் இல்லப்பா...’’

``ரொம்ப ஃபீல் பண்ணாத இனியா. ஒரு லிங்க் அனுப்புறேன். படிச்சா கூடிய சீக்கிரம் நீயும் பில்கேட்ஸ்தான்.’’


``ம்க்கும்... தோட்டத்தை வித்து இன்ஜினீயரிங் படிக்க வெச்ச அண்ணனுக்கே இன்னும் வேலை கிடைக்கலை. இதுல பில்கேட்ஸாம் பில்கேட்ஸ்..!’’
``இப்படி தோட்டம், வயல், வரப்புனு வித்துட்டு இருக்கிறதுக்கு, விவசாயம் பார்த்து நிறைய சம்பாதிக்கலாம்...’’

``அதானே?! டாக்டர் பையன் டாக்டர் ஆகணும், வாத்தியார் பையன் வாத்தியார் ஆகணும், வக்கீல் பையன் வக்கீல் ஆகணும்... ஆனா, விவசாயியோட பையன் மட்டும் விவசாயி ஆகாம மத்த எல்லாமுமா ஆகணும்னு நினைச்சா அப்புறம் யார்தான் விவசாயம் பண்ணுவா? எதிர்காலத்துல சாப்பாட்டுக்கு என்னதான் பண்ணுவோம்?’’

``நல்ல கேள்வி. விவசாயத்தின் மகத்துவத்தை அழகா எடுத்துச் சொல்ற இந்தக் குறும்படத்தைப் பார்த்துட்டு இப்போ  கிளம்பலாம்..’’

``ஓகே ... டீல்!''

- கச்சேரி களைகட்டும்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மெகா பரிசுப் போட்டி

6.9.16 தேதியிட்ட அவள் விகடன் இதழில் வெளிவந்த மெகா பரிசுப் போட்டியான குறுக்கெழுத்து போட்டியின் 9 மற்றும் 10-ம் எண்ணுக்கான கட்டம் விடுபட்டுள்ளது. தவறுக்கு வருந்துகிறோம். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் அந்த இரண்டு வினாக்களுக்கான மதிப்பெண் வழங்கப்படும். போட்டி முடிவு அடுத்த இதழில் வெளியாகும்.

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

யிலில் பயணம் செய்யும் முன்பு... இதைப் படிங்க முதல்ல!
http://bit.ly/2bSWuCo

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 6 நிதி பாடங்கள்!
http://bit.ly/2chfcra

னைவியின் சடலத்தை தோளில் சுமந்த கணவர்...நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ!
http://bit.ly/2bEaHXC

விவசாயி மகன் விவசாயி ஆக கூடாதா?! - கேள்வி கேட்கும் குறும்படம்!
http://bit.ly/2cbbbRL

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணைய தள முகவரியை தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.