Published:Updated:

ஷாப்பிங்... இது எங்க ஏரியா!

ஷாப்பிங்... இது எங்க ஏரியா!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாப்பிங்... இது எங்க ஏரியா!

செலிப்ரிட்டி கார்னர்

"நாமளும்தான்  ஷாப்பிங் போறோம், இந்த சினிமா, டி.வி நடிகைகள் போடுறமாதிரி யுனீக்கான அயிட்டம்ஸ் ஒண்ணுகூட கண்ணுல மாட்டலியே"னு புலம்பறீங்களா? இதோ, உங்களுக்காகவே ஸ்டார்களோட பெர்சனல் அண்ட் ஃபேவரைட் ஷாப்பிங் இடங்களைப் பத்தி சல்லடையில் சலிச்சு வாங்கின செக் லிஸ்ட்...

ஷாப்பிங்... இது எங்க ஏரியா!

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஷாப்பிங்கைப் பொறுத்தவரை எனக்கு ரொம்ப பிடிச்ச இடம் மும்பைதான். ஷாப்பிங் மால்னு இல்லாம, பிடிச்ச அயிட்டம் கண்ணுல பட்டா அது ரோடு சைடு கடையா இருந்தாலும் வாங்கிடுவேன். சென்னையில் பெசன்ட் நகர்ல நிறைய ஷாப் பண்ணுவேன். அங்க அக்ஸசரீஸ், ஸ்லிப்பர்ஸ் யுனிக்கா கிடைக்கும். ஜுவல்ஸ்லாம் பாண்டி பஜார், நாராயணா பேர்ல்ஸ்ல வாங்கிப்பேன். அங்க நிறைய எத்னிக் அயிட்டம்ஸ் கிடைக்கும்.

புடவைன்னா என்னோட ஆல்டைம் ஃபேவரைட் உப்படா சில்க்ஸ்தான். எங்க வீட்டுக்கே கொண்டு வந்து விக்கிறவர்கிட்ட வாங்குவேன். நுங்கம்பாக்கத்துல மோன்சானு ஒரு ஷாப் இருக்கு. அங்கதான் சல்வார்ஸ் அதிகமா வாங்குவேன். கே பொட்டிக்ல டிசைனர் சாரீஸ் வாங்குவேன்.
ஒரு சாரியோ, சல்வாரோ எப்படி வேணும்னாலும் இருக்கலாம். ஆனா, மேக்கப் ஸ்கின்னுக்கு யூஸ் பண்றதால... அதுக்கு கணக்கு பார்க்காம காஸ்ட்லியான ஒன்லி பிராண்டட் அயிட்டம்தான் வாங்குவேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரியங்கா

நான் பெரிய ஷாப்பிங் ஃப்ரீக்லாம் இல்லை. ஆனாலும், ஓரளவுக்கு பிடிச்ச இடங்கள் ஷாப்பிங் லிஸ்ட்ல இருக்கு. சல்வார், குர்தியெல்லாம் காதர்நவாஸ்கான் ரோடுல இருக்கற ஸ்டைல் (styl) ஷாப்லதான் வாங்குவேன். கேஷுவல் டாப்ஸ்லாம் லைஃப் ஸ்டைல். சில சமயம், மங்காராம்ல துணியெடுத்து ஸ்டிச் பண்ணிக்கூட போடுவேன். பெங்களூருல என் கசின்ஸ் இருக்கறதால, அங்க போகும்போது எல்லாம் ஒரே ஷாப்பிங்தான்.

ஷாப்பிங்... இது எங்க ஏரியா!

புடவைன்னா காஞ்சிபுரம் பட்டுதான் ரொம்ப பிடிச்சது. காஞ்சிபுரத்தில் இருந்து சாரீஸை என் வீட்டுக்கே  ஒருத்தர் கொண்டு வருவார். அவர்கிட்டயும் வாங்குவேன்.

அக்ஸசரீஸ் பெரும்பாலும் ஜில்-மில்லதான் வாங்குவேன். ஹேண்ட் மேட் ஜுவல்லரீஸ், டெரகோட்டா, சில்க் த்ரெட்லாம் இப்போ என் ஃப்ரெண்ட் ஒருத்தி மூலமா யூஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். ஸ்லிப்பர்னா... சென்னை ஃபவுண்டன் பிளாஸாதான் என்னோட ஃபேவரைட் இடம்.

வாணி போஜன்

ஷாப்பிங்னாலே குர்தீஸ்தான் என் ஃபர்ஸ்ட் சாய்ஸ்.   அது வாங்காம ஷாப்பிங் பண்ண திருப்தியே இருக்காது.  குர்தீஸ், டாப்ஸ் பெரும்பாலும் ஃபேப் இண்டியா, லைஃப் ஸ்டைல், ஃபேண்டலூன்ஸ். குளோபஸ்லதான் எனக்கு ஃபிட்டா இருக்கும்.

ஷாப்பிங்... இது எங்க ஏரியா!

சில்க் சாரீஸ்னா நல்லி, டிசைனர் சாரீஸ்னா நுங்கம்பாக்கம் மன் மந்திர். வெஸ்டர்ன் டிரெஸ்னா ஷாரா ஷாப்ல வாங்குவேன்.

அக்ஸசரீஸ்ல குட்டி ஜிமிக்கி எனக்கு ரொம்ப பிடிக்கும். குட்டிகுட்டியா, எல்லா ஷாப்லயும் வாங்கிடுவேன். சில்வர் ஜிமிக்கில்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது. மேக்கப் அயிட்டம்ஸ் `மேக்' பிராண்ட்தான் எப்பவும்.

ரக்‌ஷிதா

நான் பெங்களூருல இருக்கறதால ஷாப்பிங் ஃபுல்லா அங்க இருக்கும் ‘கமர்ஷியல் ஸ்ட்ரீட் லதான்.  டிரெஸ்னா... ஜியார்ஜெட் சல்வார்ஸ், காட்டன்  சாரீஸ் ரொம்ப பிடிக்கும். ஜுவல்லரின்னாஆன்டிக் நகைகள் சிம்பிளா, கிளாஸியா கிடைச்சா எங்கிருந்தாலும் வாங்கிடுவேன்.

ஷாப்பிங்... இது எங்க ஏரியா!

நான் பெரும்பாலும் சென்னையில அதிகமா ஷாப்பிங் பண்றதில்லை. சென்னைல ரொம்ப அவசரமா ஷாப் பண்ணியே தீரணும்னா, என்னோட சாய்ஸ் நல்லி மற்றும் சென்னை சில்க்ஸ்தான்.

 பா.விஜயலட்சுமி