Published:Updated:

தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்

சென்னை, பிப். 26-2011:தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு; உதயசூரியன் சின்னத்தில் போட்டி
 
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.  இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை அறிவாலயத்தில் நடந்தது. துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர். பாலு ஆகியோருடன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சுமூக தீர்வு காணப்பட்டது.
 
இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.   இதற்கான ஒப்பந்தம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுவது, தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.