Published:Updated:

டெஸ்ட்டிங்கில் புதிய சான்ட்ரோ... என்ன எதிர்பார்க்கலாம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டெஸ்ட்டிங்கில் புதிய சான்ட்ரோ... என்ன எதிர்பார்க்கலாம்?
டெஸ்ட்டிங்கில் புதிய சான்ட்ரோ... என்ன எதிர்பார்க்கலாம்?

டெஸ்ட்டிங்கில் புதிய சான்ட்ரோ... என்ன எதிர்பார்க்கலாம்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சான்ட்ரோ... கடந்த 1998-ம் ஆண்டு அறிமுகமான இந்த கார்தான், சென்னையில் தனது கார்களை உற்பத்தி செய்யும் கொரிய நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில் முதல் தயாரிப்பு! ஷாரூக்கான் இந்த காரின் விளம்பர மாடலாக இருந்தார் என்றாலும், சான்ட்ரோவின் டால் பாய் டிசைன்தான், இந்த காரை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. உயரமான சீட்டிங் பொசிஷன் காரணமாக, வெளிச்சாலை தெளிவாகத் தெரிந்தது. மேலும் எளிதான ஓட்டுதலைத் தரும் பவர் ஸ்டீயரிங் இருந்ததால், முதன்முறை கார் வாங்குபவர்களின் ஏகோபித்த வரவேற்பை சான்ட்ரோ பெற்றது. இதனுடன் அதிக ஹெட்ரூம், கேபின் இடவசதி, நம்பகத்தன்மை ஆகியவை போனஸாக வந்ததால், மினி ஃபேமிலிகளின் காராகவும் இது அறியப்பட்டது. அதாவது `ஹேட்ச்பேக்கின் அம்பாஸடர்'.

இந்த காரில் இருந்த 1.0 லிட்டர் Epsilon, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, ஸ்மூத்தாக இயங்கியதுடன் அதிக டார்க்கையும்கொண்டிருந்தது. பிறகு, 2003-ம் ஆண்டில் பேஸ்லிஃப்ட் கண்ட இந்த கார், `சான்ட்ரோ ஜிங்' எனப் பெயர் மாற்றம் கண்டது. கூடவே மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் திறன்மிக்க 1.1 லிட்டர் Epsilon, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு இருந்தது. இதே தோற்றத்தில்தான், சான்ட்ரோ தனது கடைசிக்காலம் வரை தொடர்ந்தது. நல்ல டிமாண்டு இருந்தாலும், புதிய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக, இந்த காரின் உற்பத்தியை 2014-ம் ஆண்டின் இறுதியில் நிறுத்தியது. ஆனால், இப்போதும் யூஸ்டு கார் மார்க்கெட்டில், குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்குபவர்களில் முதல் சாய்ஸாக இருப்பது சான்ட்ரோதான். மேலும் இந்தியாவின் பல பகுதிகளில், இந்த கார் டாக்ஸியாக இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.  

ஹூண்டாயின் புதிய ஹேட்ச்பேக் எப்படி இருக்கும்?

இயான் மற்றும் கிராண்ட் i10 ஆகிய கார்களுக்கு இடையே பொசிஷன் செய்யும்விதமாக, `AH2' என்ற புனைபெயரைக்கொண்ட புதிய ஹேட்ச்பேக் ஒன்றை, தீபாவளி நேரத்தில் களமிறக்கும் முடிவில் இருக்கிறது ஹூண்டாய். சென்னை மற்றும் டெல்லியில் தீவிரமாக டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த காரை கோத்தகிரியில் படம்பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகரான பத்ரி. மாருதி சுஸூகி செலெரியோ, ரெனோ க்விட் 1.0, டாடா டியாகோ ஆகிய கார்களுக்குப் போட்டியாக வரப்போகும் இந்த காரை,  `Family Design Concept' பாணியில் வடிவமைத்திருக்கிறது ஹூண்டாய். எனவே, சிறிய ஹேட்ச்பேக்காக இருப்பினும், டால் பாய் தோற்றத்துடன் இது போதுமான சிறப்பம்சங்களுடன் அதிக இடவசதியையும்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இதை `சான்ட்ரோ' என்ற பெயரிலேயே இந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஆனால், இந்தியச் சந்தைக்கு எனப் பிரத்யேகமான மாடலாக இருப்பினும், முதல் தலைமுறை i10 காரின் PA பிளாட்ஃபார்மில் இது தயாரிக்கப்படும் என்பதால், பாதுகாப்பு வசதிகளும் இடம்பெறும் என நம்பலாம். எனவே, 2019-ம் ஆண்டில் வரவிருக்கும் க்ராஷ் டெஸ்ட் விதிகளின்படி வடிவமைப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், குறைவான அளவில் விற்பனையைக்கொண்டிருக்கும் இயான் காருக்கு மாற்றாகவும் இது வெளிவரலாம் எனத் தெரிகிறது. இதில் இயானில் இருக்கும் 1.0 VTVT பெட்ரோல் இன்ஜின் அல்லது சான்ட்ரோவில் இருந்த 1.1 லிட்டர் Epsilon பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என தகவல்கள் வந்துள்ளன. இரண்டுமே BS-VI விதிகளுக்கு ஏற்ற டியூனிங்கைக்கொண்டிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு