இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 17

ருத்துவக் காப்பீடு தொடர்பாக மக்கள் மத்தியில் எழும் பொதுவான சந்தேகங்கள் என்ன என்பது பற்றி பார்த்து வந்தோம். பொதுவாக மருத்துவக் காப்பீடு எடுப்பதே  மருத்துவ செலவுகளைத் தவிர்க்கத்தான். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது, அறுவைசிகிச்சை செய்ய ஆகும் செலவைத் தவிர்க்க மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மற்றும் கேஷ்லெஸ் பாலிசிக்கள் உதவியாக இருக்கின்றன.

மருத்துவமனையில் தங்கியிருக்கும்போது தினசரி செலவுகளை சமாளிக்க, ஹாஸ்பிட்டல் கேஷ் பிளான் இருக்கிறது. இந்த வசதியுள்ள பாலிசியை வாங்கினால், மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலத்துக்கு, தினசரி குறிப்பிட்ட தொகை அளிக்கப்படும். அதுவே, புற்றுநோய் போன்ற பாதிப்பு காரணமாக, குடும்பத்தை நடத்தவே சிரமம் ஏற்படுகிறது என்ற சூழலைத் தவிர்க்கவும் பிரத்யேக பாலிசிக்கள் உள்ளன. ‘கிரிட்டிக்கிள் இல்னெஸ்’ பாலிசி எடுக்கும்போது, அதில் இந்த வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. நோய் கண்டறியப்பட்டால் ஒரு குறிப்பிட்ட மிகப்பெரிய தொகை குடும்பத்துக்கு அளிக்கப்படும். இந்த தொகை, பாலிசியைப் பொறுத்து மாறுபடும்.குடும்பம் முழுமைக்கும் பாலிசி கவரேஜ் கிடைக்க ஃபுளோட்டர் அல்லது ஃபேமிலி ஹெல்த் பிளான் உள்ளது. முதியவர்களுக்கான பாலிசி பிரீமியம் மிக அதிகமாக இருக்கிறது. சில நிறுவனங்கள் மட்டும், கோபேமென்ட் முறையில் பாலிசிகளை அளிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 17

எவ்வளவு ரூபாய்க்கு பாலிசி எடுப்பது நல்லது?

பொதுவாக குடும்பத்தில் சர்க்கரை நோய், இருதய நோய்கள் இருக்கின்றன என்றால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு ஃபுல் மெடிக்கல் செக்கப் செய்து, அதன் அடிப்படையில் இருக்கும் நோய்களைப் பொறுத்து பாலிசிகளை எடுத்துக் கொள்ளலாம். எந்த நோயும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்றால் சுமாராக 6 லட்சம் ரூபாய்க்கு ஒரு நல்ல ஃப்ளோட்டர் பாலிசியாக இருப்பது நல்லது.

மெடிக்ளெய்ம் பாலிசி வாங்க என்ன என்ன ஆவணங்கள் தேவைப்படும்?


நம் வயதைப் பொறுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனை எடுக்கச் சொல்வார்கள். பாலிசியை  பெற்று, மெடிக்ளெய்ம் விண்ணப்பிக்கும்போது நீங்கள்தான் பாலிசிதாரர் என்பதையும், உங்கள் முகவரி, வயது உள்ளிட்டவற்றை உறுதி செய்யவும் அரசு அளித்த அடையாள அட்டை தேவைப்படும்.

ஒரு நிறுவனத்தில் பாலிசி எடுத்துள்ளேன். ஆனால், எனக்கு அந்த பாலிசி பிடிக்கவில்லை. அதை ரத்து செய்து, பிரீமியம் பணத்தைத் திரும்ப பெற முடியுமா?


பாலிசியை ரத்து செய்ய முடியும். பாலிசி எடுத்த முதல் 15 நாட்களை ‘ஃப்ரீ லுக் பீரியட்’ என்று சொல்வார்கள். பாலிசி எடுத்ததும் விதிமுறைகளை பாலிசிதாரருக்கு அனுப்புவர். அதில் திருப்தி இல்லை எனில், பாலிசியை ரத்து செய்யலாம். காப்பீட்டு நிறுவனம் ஏதேனும் மருத்துவ பரிசோதனை செய்திருந்தால், அதற்கான கட்டணம் உள்ளிட்ட சிலவற்றை பிடித்தம் செய்துகொண்டு மீதி பணத்தை அளித்துவிடும். அதன்பிறகு பாலிசியை ரத்து செய்ய முடியாது. அப்படியே நாம் ரத்து செய்தாலும், பணத்தை திரும்பப் பெற முடியாது.

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 17

மருத்துவ பாலிசி வைத்துள்ள நிறுவனத்தின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை. வேறு காப்பீட்டு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றிக்கொள்ளமுடியுமா?

நிறுவனத்தை மாற்றிக்கொள்வது பாலிசியை புதுப்பிக்கும் காலத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதற்கு பாலிசி புதுப்பிப்பதற்கு 45 நாட்களுக்கு முன்னதாக, எந்த நிறுவனத்துக்கு பாலிசியை மாற்ற வேண்டுமோ, அந்த நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

மருத்துவக் காப்பீடு வாங்க சரியான காலக்கட்டம் என்று ஏதும் உள்ளதா?

எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு சீக்கிரம் வாங்குவதுதான் இந்த கேள்விக்கான பதில். இளம் வயதில் பாலிசி வாங்கினால், பிரீமியமும் குறைவாக இருக்கும். வயது அதிகரித்தப்பிறகு, ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டபிறகு வாங்கும்போது பிரீமியமும் அதிகம். எனவே, விபத்து, மருத்துவ பிரச்னை வரும்வரை காத்திருக்க வேண்டாம்.

- முற்றும்

தொகுப்பு: பா.பிரவீன்குமார்

நியாயமான க்ளெய்மைக்கூட காப்பீட்டு நிறுவனம் நிராகரிக்கிறது என்று கருதினால் யாரிடம் புகார் செய்வது?

பாலிசிதாரர்களின் புகார்களை விசாரித்து  உரிமையை நிலைநாட்ட, ‘இன்டகிரேட்டட் கிரிவன்ஸ் மேனேஜ்மம்ட் சிஸ்டம் (Integrated Grievance Management System (IGMS)) என்ற அமைப்பை காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ)’ உருவாக்கியுள்ளது. எனவே, பாலிசிதாரர் இதுதொடர்பான புகாரை முதலில் தங்களுடைய பாலிசியை அளித்த நிறுவனத்தில் பதிய வேண்டும். அங்கு பிரச்னை சரிசெய்யப்படவில்லை எனில், ஐ.ஜி.எம்.எஸ்-ஐ அணுகலாம். இதற்காக, 155255 என்ற டோல் ஃப்ரீ எண் உள்ளது.  complaints@irda.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சலும் செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism