Published:Updated:

சுதா ரகுநாதன் ஹெல்த் சீக்ரெட்ஸ்

சுதா ரகுநாதன் ஹெல்த் சீக்ரெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுதா ரகுநாதன் ஹெல்த் சீக்ரெட்ஸ்

அளவான டயட் தினசரி வொர்க்அவுட் அப்பப்போ ஷாப்பிங்...

சுதா ரகுநாதன் ஹெல்த் சீக்ரெட்ஸ்

அளவான டயட் தினசரி வொர்க்அவுட் அப்பப்போ ஷாப்பிங்...

Published:Updated:
சுதா ரகுநாதன் ஹெல்த் சீக்ரெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
சுதா ரகுநாதன் ஹெல்த் சீக்ரெட்ஸ்
சுதா ரகுநாதன் ஹெல்த் சீக்ரெட்ஸ்

திரைத்துறையில் வலம்வரும் கர்னாடக இசைப்பாடகிகளில் முக்கியமானவர் சுதா ரகுநாதன். ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘அனல் மேலே பனித்துளி’ பாடல்தான், இன்றும் பல ஜென்-Z இளைஞர்களின்  பிளேலிஸ்ட்டில் இருக்கும் ஃபேவரைட் பாடல். பரபரப்பாக வெளிநாடுகளில் கச்சேரி, அவ்வப்போது சினிமா பாடல் எனப் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் சுதா ரகுநாதனின் ஹெல்த் மந்திரத்தை அறிய, அவரைச் சந்தித்துப் பேசினோம்.

“என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியம் என்பது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது மட்டுமல்ல; அது மனதையும் சார்ந்திருக்கிறது” என, தன் கனிவான குரலில், அழுத்தம் திருத்தமாகக் கூறத் தொடங்கினார், சுதா ரகுநாதன்.

“காரம், புளிப்பு, குளிர்ச்சியான உணவுகளை முடிந்த அளவுக்குத் தவிர்த்துவிடுவேன். சிலவற்றை எல்லாம் எடுத்துக்கிறது இல்லை. எங்களைப் போன்ற பாடகிகளுக்குக் குரலும் உடலும் ரொம்ப முக்கியம். கர்னாடக சங்கீத கச்சேரிகளில் பாடும்போது, அடிவயிற்றிலிருந்து குரல் எடுத்துப் பாட வேண்டி இருக்கும். இதனால், நான் எப்போதும் அளவாகத்தான் சாப்பிடுவேன்!

சில வேளைகளில் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், வயிற்றில் இருக்கிற அமிலம்  நெஞ்சிலேயே நின்று எதுக்களிக்கும். அதனால், குரல் வளையில் புண் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அது குரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அடிக்கடி வரும் ஏப்பம்  தொந்தரவு தரும். முக்கியமாக இரவு நேரக் கச்சேரியில் பாடமுடியாது போகும். அதனால என்ன சாப்பிடுறோம், எப்போ சாப்பிடுறோம், எவ்வளவு சாப்பிடுறோம் என்பதில் கவனமா இருப்பேன்.”

சுதா ரகுநாதன் ஹெல்த் சீக்ரெட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்னெஸ்

“நம்ம ஊரில் இருக்கும்போது ஜிம்முக்குப் போய் சில உடற்பயிற்சிகளைச் செய்வேன். வெளிநாடுகளுக்குப் போகும்போது, ஜிம்பயிற்சி செய்ய முடியாது. அதனால் அங்கே முழுக்க முழுக்க நடைப்பயிற்சிதான்.

ஒவ்வொரு நாளும் எண்ணெய் தேய்ச்சு ஊறவைச்சுட்டுதான், தலைக்குக் குளிப்பேன். வீட்டில் இருந்தால் கடலைமாவு பயன்படுத்துவேன். சோப் பயன்படுத்தமாட்டேன். இதுவே, வெளியூருக்கு கச்சேரிகளுக்குப் போகும்போது, வெஜிடபிள் ஆயிலால் ஆன மைல்ட் சோப்பை பயன்படுத்துவேன்.  தூங்குவதற்கு முன், முகத்தை நன்கு கழுவி, மறக்காமல் கிரீம் தடவுவது என் வழக்கம். அது தவிர, உடல் உஷ்ணம் போக்க அடிக்கடி வெந்நீரில் சீரகம் கலந்து சீரகத்தண்ணீர் அருந்துவேன். 15 நாட்களுக்கு ஒருமுறை உடல் எடையைக் கண்காணிப்பேன். அதைப்பொருத்து என்னுடைய டயட், வொர்க்அவுட் பிளானிங் இருக்கும். இது தான் என்னோட ஃபிட்னெஸ் சீக்ரெட்!”

ஸ்ட்ரெஸ் பஸ்டர்


“பாடகிகளுக்குக் குரல் மட்டும் நல்லாயிருந்தால்  போதும்னு பலர் நினைக்கிறாங்க. ஆனால் உடல் எடை, சாப்பிடும் உணவு, பருகும் நீர், ஆகாரம் ஆகியவை நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், மன அழுத்தம் இல்லாம இருப்பது முக்கியம்.

எனக்குப் பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டரே ஷாப்பிங் போறதுதான். வெளிநாடு களுக்குக் கச்சேரிக்குப் போறப்பவும் சரி, வீட்டில் இருக்கும்போதும் சரி... மார்க்கெட்ல புதுசா என்ன வந்திருக்குனு போய்ப் பார்த்துடுவேன். புதிய பொருட்களைத் தேடித் தேடிப் பார்க்கும்போது ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போயிடும். அதுவும் ஷாப்பிங் போகும்போது, என் பசங்க, கணவர் எல்லாம் என் கூட  இருந்தாங்கன்னா அந்த நாளே செம ஜாலிதான்! அடுத்து, பயணங்கள் போகும்போது ஹிந்துஸ் தானி மற்றும் கர்னாடக இசை கேட்பது  மனசை ரொம்ப லேசாக்கிடும். ஃபிளைட்ல போறப்ப, சினிமா பார்க் கிறது செம இன்ட்ரெஸ்ட்டிங்கான விஷயம். எப்போதுமே என் பொழுது போக்கு   இசையோடு தொடர்புடை யதாகத் தான் இருக்கும்” எனப் புன்னகை மிளிர, தனது ஹெல்த் சீக்ரெட்களை சொல்லி முடித்தார், சுதா ரகுநாதன்.

அந்த சந்திப்பும் ஒரு நல்ல மெலடி போலவே இனிமையாக இருந்தது. அதுதான் சுதா ரகுநாதன்!

- ம.மாரிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism