Published:Updated:

பார்லர் சென்று பெடிக்யூர் மெனிக்யூர் செய்பவரா நீங்கள்..?!

பார்லர் சென்று பெடிக்யூர் மெனிக்யூர் செய்பவரா நீங்கள்..?!
பார்லர் சென்று பெடிக்யூர் மெனிக்யூர் செய்பவரா நீங்கள்..?!

ருவரின் நகத்தைப் பார்த்தே அவர்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனில், உங்கள் நகங்கள் எப்படி? நகத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் (மெனிக்யூர், பெடிக்யூர்) எளிய வழிமுறைகளை வழங்குகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

ல்ஃபா கெரட்டின் (Alpha-keratin) எனப்படும் புரதப்பொருளால் ஆனது, நகம். மெனிக்யூர் செய்கிறவர்களுக்குக் குறைபாடு இருக்காது. எமரி போர்டு அல்லது மெட்டல் ஃபைல் போன்றவை கடைகளில் கிடைக்கும். டயபட்டீஸ் இருப்பவர்களுக்கு, எமரி போர்டைப் பயன்படுத்த முடியாது. அவர்களுக்கு, எமரி போர்டு ஏற்றது. ஆனால், இவற்றைப் பயன்படுத்தும்போது நகத்தில் மேலும் கீழுமாக ஃபைல் பண்ணக்கூடாது. ஒரே பக்கமாக ஃபைல் செய்யவேண்டும். அப்போதுதான் நகம் உடையாமல் இருக்கும். ஓரத்திலிருந்து நடுபுறமாக இரண்டு பக்கங்களிலும் செய்யவேண்டும். இதனால், நகம் வலுவாக இருக்கும்.

நகம் வலுப்பெற, டயட் மிகவும் முக்கியம். டயட்டிலும் குறிப்பாக, புரோட்டீன் ரிச் டயட் எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளை டாட் அல்லது ஏதாவது கோடுகள் நகத்தில் இருந்தால், அவர்களுடைய உடலில், புரோட்டீன் குறைவாக இருக்கிறது என அர்த்தம். மீன், பைன் நட், கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். கீரையில் இரும்புச்சத்தும் புரதச்சத்தும் இருப்பதால், நகத்துக்குத் தேவையான கால்சியமும் புரோட்டீனும் கிடைக்கும்.

கியூட்டிகல் (Cuticle) என்பது, நகத்தைச் சுற்றியுள்ள தோல். அது, சில சமயம் தனியாக தூக்கி நிற்கும். அந்தச் சமயத்தில் பலரும் அதனைக் கத்தரித்துவிடுவார்கள். அது தவறு. அதற்குப் பதில், அதனை புஷ் செய்ய வேண்டும். 'கியூட்டிகல் புஷ்ஷர்' எனக் கடைகளில் கிடைக்கும். அதன்மூலம் அந்தத் தோலை அழுத்திவிடலாம். அல்லது, கடைகளில் கிடைக்கும் 'ஆரஞ்சு வுட்ஸ்டிக்' பயன்படுத்தி புஷ் செய்யலாம். எந்தக் காரணத்தாலும் பற்களால் கடித்து இழுக்காதீர்கள்.

கத்தை எப்போதும் ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது. உதாரணமாக, நகத்தால் டப்பாவைத் திறக்கக் கூடாது. நகத்துக்கு அழுத்தம் கொடுக்க கொடுக்க வலுவிழந்துவிடும்.

பையோட்டீன் (Biotin), நக ஆரோக்கியத்துக்கும் முடி வளர்ச்சிக்கும் ஏற்றது. சோயா, முட்டை போன்றவற்றிலேயே இந்த வகை பையோட்டீன்கள் உள்ளன. அதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிலருக்குச் சத்தான உணவைப் பெறமுடியாத சூழலில், மருத்துவரிடம் கேட்டுவிட்டு பையோட்டீன் மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

ரமான நக பாலீஷையே பயன்படுத்த வேண்டும். பேஸ் கோட், டாப் கோட் என இரண்டு கோட்டிங் போட வேண்டும். ஏனெனில், தரம் குறைந்த பாலீஷ், நகத்தை மஞ்சளாக மாற்றிவிடும். வலுவிழக்கவும் செய்துவிடும்.

கத்துக்கு வலு சேர்க்கும் பாலீஷ்கள் கிடைக்கின்றன. அவை வண்ணமில்லாமல் இருக்கும். அதில், பி காம்ளெக்ஸ் மருந்துகள் கலந்திருக்கும். ஆனால், அவை நம்மூரில் சில கடைகளில் மட்டுமே கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கும் நகத்துக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கலாம். ஆனால், நக வலிமைக்கு அதிகத் தண்ணீர் குடிப்பது அவசியம். வாரம் ஒருமுறை இயற்கையாகவே பெடிக்யூர், மெனிக்யூர் செய்துகொள்ளலாம்.

வீட்டிலேயே செய்வதற்கு...

கத்தை வெட்டிய பிறகு, ஃபைல் செய்து ஷேப் செய்துகொள்ளவும். பிறகு, ஒரு பவுலில், லிக்யூடு சோப்பு அல்லது ஷாம்புவை தண்ணீர் சேர்த்து கரைத்து, கைகளை அதில் ஊறவிட்டு எடுக்கவும். காய்ந்த பிறகு, நகத்துக்காகக் கிடைக்கக்கூடிய கிரீம் அல்லது சருமத்துக்கான ஏதாவது ஒரு கிரீமை, நகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.

திகமாக நகம் உடைகிறது என்பவர்கள், சிறிதளவு ஆலிவ் ஆயிலில் நகங்களை முக்கியெடுத்து வந்தால், வலிமைபெறும்.

துணி துவைக்கும்போது கைகளில் கிளவுஸ் அணிந்து துவைப்பது நலம். அதனால், நக இடுக்குகளில் கெமிக்கல் சென்று பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.