Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி
அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

மண்டே மார்னிங் புளூவா?!

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

‘‘இனியா... ‘மண்டே மார்னிங் புளூ’னு சொல்றாங்களே... அப்படீன்னா என்ன அர்த்தம்டி?’’

‘‘ம்... ‘பிரியமானவளே’ படத்துல வர்ற விஜய் மாதிரி எல்லாரும் புளூ கலர் டிரெஸ் போட்டுட்டு ஆபீஸ் போவாங்களா இருக்கும்!’’

‘‘அடியேய்... ஒரு குழப்பம்னா க்ளியர் பண்ணாம இப்டி கலாய்க்கக் கூடாது!”

‘‘அதாகப்பட்டது என்னன்னா... ஞாயித்துக் கிழமை முழுக்க ஆட்டம் பாட்டம்னு ஜாலியா இருந்துட்டு திங்கட்கிழமை காலையில ‘அய்யய்யோ, இன்னைக்கு ஆபீஸ் போகணுமே’னு மனசுல ஒரு அலறல் கேட்கும்ல... அதான் மண்டே மார்னிங் புளூ...’’

‘`அப்ப இந்த அலறல் எல்லாம் ஆபீஸ் போறவங்களுக்குத்தானே கேட்கணும்? காலேஜ் போற எனக்கும் கேட்குதே?!”

‘‘நீ அந்த அளவுக்கு அட்வான்ஸ்டா இருக்கேனு இப்போ உன்னைப் புகழணுமா அனுஷா? சரி அதைவிடு... இந்த புளூவுல இருந்து தப்பிக்க என்ன வழின்னா, எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணணும்!”

‘‘சரி சரி... அதுக்காக வடிவேலு மாதிரி எல்லாம் பேச ட்ரை பண்ணாதே. பயந்து வருது!”

‘‘நான் சொன்னா கேட்க மாட்ட... இந்த லிங்க்ல சொல்றதைப் படி புரியும்!’’

‘`அனு... எங்கக்கா வேலை தேடிட்டு இருக்கானு சொன்னேன்ல. கவர்மென்ட் ஜாப் கிடைக்க என்னவெல்லாம் செய்யணும்னு ஏதாச்சும் கைடன்ஸ் இருந்தா சொல்லேன்...”

‘‘டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள், சீருடைப் பணி யாளர் தேர்வுகள், ஆசிரியர் பணி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், சிவில் சர்வீஸ் தேர்வுகள், வங்கித் தேர்வுகள்னு பெண்களுக்கு அரசுப் பணி வாய்ப்புகள் நிறைய இருக்கு ஆதிரா. நான் அனுப்புற லிங்க்கை அக்காவுக்கு மறக்காம ஷேர் பண்ணிடு. வேலை கிடைச்சதும் நமக்கு ட்ரீட் வைக்கணும்னும் மறக்காம சொல்லிடு!”

‘‘சரி எனக்கும் டிப்ஸ் வேணும்... கிடைக்குமா?”

‘‘எது சம்பந்தமா டிப்ஸ் வேணும்னு கேட்டாதானே கொடுக்க முடியும் இனியா?!”

‘‘காதைக் கொடு... தொப்பையைக் குறைக்க!”

‘‘தொப்பைக்கு முதல் காரணம், நீ சாப்பிடுறது இல்ல இனியா. நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடாம இருக்கிறது. டயட்ல இருந்தா மட்டுமே தொப்பை குறையாது. சரியான நேரத்துல சரிவிகித உணவு சாப்பிடணும். எளிய உடற்பயிற்சிகள் செய்யணும். அப்போதான் ஃபிட்னெஸ் கிடைக்கும்...”

‘‘அட்வைஸ் போதும்... டிப்ஸ் அனுப்பு ராசாத்தி!”

‘‘இனியா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா...மேடம் தீபாவளிக்குள்ள நிஜமாவே ராசாத்திதான்!”

‘‘என்னவாம் அனு... ஆதிரா ஏதோ பில்ட்அப் கொடுக்கிறா?”

‘‘ஐபோன் 7ப்ளஸ் வாங்கப் போறாங்களாம் நம்ம ஆதிரா மேடம். அதோட விலை ஜஸ்ட் 85 ஆயிரம் ரூபாயாம்!”

‘‘என்னது... இப்பவே கண்ணக் கட்டுதே! அப்டி அந்த போன்ல என்னதான் இருக்கு?”

‘‘என்னதான் இல்லனு கேளுப்பா. ஸ்லிம் பாடி, லைட் வெயிட், வாட்டர் ப்ரூஃப், மெகா பிக்சல்னு அடுக்கிட்டே போகலாம். நான் அதோட ஃபீச்சர்ஸ் என்னனு சொல்ற ஒரு வீடியோவை அனுப்புறேன் பாரேன்...”

‘‘பாக்குறேன். பார்த்துட்டு நம்ம 85 ஆயிரம் ரூபாய் ஐபோன்  ராசாத்திகிட்ட கேட்கிறேன் ட்ரீட்!”

‘‘ஐ’யம் எஸ்கேப்!”

- கச்சேரி களைகட்டும்...


சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணைய தள முகவரியை தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

இந்த ஐபோன் 7 ப்ளஸ்ல அப்படி என்னதான் இருக்கு?
http://bit.ly/2cwkgDY

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

மண்டே மார்னிங் புளூ... தப்பிக்க வழி!
http://bit.ly/2cE7QxC

சரிவிகித உணவை சாப்பிட்டு தொப்பையைக் குறைங்க இப்படி!
http://bit.ly/2cadkkj

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

பெண்களுக்கு அரசு வேலை ரொம்பவே ஈஸி! தெரிஞ்சிக்கலாம் வாங்க!
http://bit.ly/2cvYZNZ

அடுத்த கட்டுரைக்கு