Published:Updated:

டெக்னோஃபோபியா!

டெக்னோஃபோபியா!
பிரீமியம் ஸ்டோரி
டெக்னோஃபோபியா!

டெக்னோஃபோபியா!

டெக்னோஃபோபியா!

டெக்னோஃபோபியா!

Published:Updated:
டெக்னோஃபோபியா!
பிரீமியம் ஸ்டோரி
டெக்னோஃபோபியா!
டெக்னோஃபோபியா!

ந்த நேரம் பார்த்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சகல ஆன்லைன் சமாச்சாரங்களிலும் அப்டேட்டாக இருக்கும் டெக்னாலஜி யூத்துகளுக்கு ஏற்படும் பலவகை ஃபோபியாக்களும் அவற்றின் அறிகுறிகளையும் கொஞ்சம் பார்த்துட்டுப் பாதுகாப்பா இருக்கப் பழகிக்கலாமா?

 லைக்கோஃபோபியா:
 
ஃபேஸ்புக் யூஸர்களுக்குப் பரவலாகத் தொற்றும் இந்த வியாதி ஒருகட்டத்தில் முற்றிப்போய் பார்க்கிற எல்லா போஸ்ட்களுக்கும் லைக் பட்டனை அழுத்தி அழுத்தி விரல் அரை இஞ்சுக்கு அமுங்கிப்போய்விடும். நெட் பேக் போடாமல் இருக்கும்போதுகூட ஏற்கெனவே வந்த பதிவுகளுக்கு சும்மாவே லைக் போட்டு விளையாடும் அளவுக்கு இந்த வியாதியின் தாக்கம் இருக்கக்கூடும். #டிஸ்லைக்.

 கமென்ட்கேலியா:

எல்லா நண்பர்களுக்கும் கமென்ட் பண்ணாத நாட்களில் கை அரிப்பு ஏற்படும். ஒரு வரி ஸ்டேட்டஸ் போட்டால்கூட ஒரு பக்கக் கட்டுரையாய் கமென்ட் செய்யும் உடல்வலிமையும் மனவலிமையும் ஏற்பட்டாலும் இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. ஒன்றுமே தோணாத நேரங்களில் ஸ்டிக்கர் கமென்ட்களைக் கொட்டும் எண்ணங்கள் தோன்றினால் நல்ல சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். #கமென்ட் மொமென்ட்.

 ஷேரோக்ரெடியா:

ஒரு காலத்தில் நல்ல பதிவுகளைப் பார்த்துப் பார்த்து ஷேர் செய்து, நாளடைவில் `குட் மார்னிங் ஃப்ரெண்ட்ஸ்', `மதி மயங்கும் மாலை வணக்கம் சகோ' போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போஸ்ட்களையெல்லாம் ஷேர்செய்து நேரத்தை ஓட்டவேண்டிய கட்டாயம் ஏற்படும். இன்னும் கொஞ்சநாளில், பூப் படம், குழந்தைப் படம் போட்ட ப்ரொஃபைல் பிக்சரையெல்லாம் ஷேர் செய்யத் தொடங்குவதற்குள் பார்த்து ஏதாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளவும். #ஷேர்லாக்.

 அன்ஃபிரண்டோமேனியா: 

சும்மா கையை வெச்சுருக்க முடியாமல் லைக் போடாத ஐ.டி-களையும், ஃபேக் ஐ.டி-களையும் தேடிப் பிடித்து லிஸ்ட்டிலிருந்து தோண்டியெடுத்துத் தூக்குவதாகக் கையில் கடப்பாரையுடன் ஃபேஸ்புக்கைச் சுற்றிச்சுற்றி வலம் வருவார்கள். ஃபேக் ஐ.டி-களைத் தூக்குறேன்னு கடைசியில் ஒரு லைக் போடக்கூட ஆளில்லாமல் திரியும் அவலநிலைக்குத் தள்ளப்படுவார்கள். திடீர் திடீர்னு உருளுதாம். சரியுதாம். #ப்ளாக்.

 ரெக்வெஸ்ட்கரேனாஹே:

இது வழக்கமாக, ஐ.டி தொடங்கிய ஆரம்பகாலங்களில் உருவாகும் தொற்று. சமந்தா, ஸ்ரேயா போட்டோக்களை வைத்திருக்கும் ஆண் ஐ.டி-களையும் மனம், ஜொள்ளு விட்டபடியே பின்தொடரும். ப்ரியா ஸ்வீட்டி, செல்லா ப்யூட்டி போன்ற பெயர்களைப் பார்த்தால்கூட சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து ஓட்டமாய் ஓடி ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இடம் பிடிப்பார்கள். இது ஓரளவு குணப்படுத்தக்கூடிய வியாதிதான். #ப்ளீஸ்.

 ஆன்லைனாஸ்டியா:

டேட்டா பேக் ஆக்டிவில் இல்லைனாலும் நோட்டிஃபிகேஷன் சத்தம் காதில் கேட்டுக்கொண்டே இருந்தால், ஆன்லைனாஸ்டியா அட்டாக்கில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். தூங்கிக்கொண்டிருக்கும்போதுகூட உங்களை டேக் செய்து ஒரு ஃபிகர் போட்டோ போட்டமாதிரியான கனவுகள் வந்தால் உஷாரா இருங்க. கடைசி லெவல்ல இருக்கீங்க. #ஆஃப்லைன்.

இன்னும் ட்விட்டரில் முங்கிக் கிடப்பவர்களுக்கு 'ரீட்வீட்போட்டியா', `ஃபாலோப்ஸி'னு பலப்பல வியாதி வைரஸ்கள் கூடிக் கும்மியடிக்குதாம். இந்தத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க மொபைல் போனை சார்ஜ் செய்யாமல் மாதக்கணக்கில் விட்டுவிட்டால் போதும். தப்பிச்சீங்க!

- விக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism