Published:Updated:

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!
பிரீமியம் ஸ்டோரி
பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

Published:Updated:
பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!
பிரீமியம் ஸ்டோரி
பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

டிசன், ஐன்ஸ்டீனை எல்லாம் அசால்ட்டாய் தாண்டும் அறிவுஜீவி இனம் நம்மிடையே இருக்கிறது. அதுதான் பாஸ் பேச்சுலர் கூட்டம். நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் பொருட்களைக்கூட `அதுக்கும் மேல' லெவலில் பயன்படுத்தி நமக்கு ஹார்ட் அட்டாக் வர வைப்பார்கள். அப்படி பேச்சுலர் ரூம்களுக்கே உரிய சில ட்ரிக்குகள் இவை.

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

படா படா புத்தகங்கள்:

அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தினால் மின்சார மீட்டர் கேப்டன் ஸ்டைலில் தூக்கியடிக்கும் என்பதால் அதை ஷோவுக்காக வைத்திருப்பார்கள். முக்கால்வாசி ஜென்டில்மேன்கள் அயர்ன் பண்ணப் பயன்படுத்துவது ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரி சைஸில் இருக்கும் பெரிய பெரிய புத்தகங்களைத்தான். சட்டையை மடித்து இரண்டு பெரிய புத்தகங்களுக்குள் வைத்து அவற்றுக்கு மேலே வெயிட் வைத்தால் காலையில் மடிப்பு கலையா சட்டை ரெடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

நியூஸ்பேப்பர்:

மிதியடி, கார்பெட் எல்லாம் அடிக்கடி அழுக்காகும். உள்ளாடை துவைக்கவே ஒரு மகாமகம் எடுத்துக்கொள்ளும் பேச்சுலர்களால் அடிக்கடி இதைத் துவைக்க முடியுமா என்ன? எனவே நியூஸ் பேப்பரை மிதியடியாக வாசலில் போட்டு மிதிப்பார்கள். அழுக்காக அழுக்காக அடுத்த கத்தையைக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம். இங்கிலீஷ் பேப்பர் களின் தரம் கனமாக இருப்பதால், பேச்சுலர்களின் ஏகபோக ஆதரவு ஆங்கில நாளிதழ்களுக்கே!

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

ஹேர் ட்ரையர்:

ஃபேமிலி ஆடியன்ஸுக்குத்தான் இது தலை காயவைக்கும் டிவைஸ். எண்ணெய் வைக்காமல்

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

பரட்டையாய்த் திரியும் பேச்சுலர்களுக்கு அல்ல!. தவிர, இதைப் பயன்படுத்தினால் முடி கொட்டுமாம். அதனால், எப்போதாவது துவைக்கும் துணியைக் காயவைக்கும் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் இதை! பயன்படுத்திப் பாருங்களேன். சூடான காற்றில் சட்டென காணாமல் போகுமே ஈரம்!

சட்டி:

இங்கே சட்டி - பொதுப்பெயர். அது வடைச் சட்டியாகவும் இருக்கலாம். சுடுதண்ணீர் சட்டியாகவும் இருக்கலாம். ஆனால், ரெண்டுமே கண்டிப்பாக சமையலுக்குப் பயன்படப்போவதில்லை. பிறகு? உட்காருவதற்கு ஸ்டூலாகப் பயன்படுத்துவார்கள். சட்டியின் சைஸைப் பொறுத்து அது பாத்ரூம் ஸ்டூலா, பெட்ரூம் ஸ்டூலா என்பது முடிவாகும்!

வாட்டர் பாட்டில்:

எவ்வளவு நேரம்தான் சும்மாவே இருப்பது? வெளியே போக நினைத்தால் அக்னி பகவான் உக்கிரமாக முறைப்பார். எனவே வீட்டிற்குள்ளேயே கிரிக்கெட் விளையாடுவார்கள். பந்து பத்து ரூபாய்க்கு வாங்கிவிடலாம். பேட் காஸ்ட்லியான சமாசாரமாயிற்றே? எனவேதான், ஒரு லிட்டர் பாட்டில் நிறைய தண்ணீர் நிரப்பி அதைக் கொண்டு அடித்து விளையாடுவார்கள். நம்புங்க ஜி, அதை வச்சு சிக்ஸே அடிக்கலாம்!

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

தண்ணீர் வாளி:

இதுதான் இருப்பதிலேயே பெஸ்ட் ஸ்ட்ராடிஜி. வாரக் கடைசி பார்ட்டிக்குப் பணம் ரெடி பண்ணிடலாம். ஆனால் கூலிங் பியர் மட்டும் அண்டார்ட்டிகா போனாலும் கிடைக்காது. எனவே வாளி நிறைய ஜில் தண்ணீரைப் பிடித்து அதில் பாட்டில்களை மணிக்கணக்கில் ஊற வைப்பார்கள். (சரி, முறைக் காதீங்க. ஊறவைப்போம்!) கொதிக்கும் பீராக இருந்தாலும் சரியான நேரத்திற்கு குளுகுளு பீராகக் கையில் கிடைக்கும். வாட் எ சயின்ஸ்யா சாமி!

பேச்சுலர்ஸ் ஆஃப் பிராப்பர்ட்டி!

ஃப்ளிப்கார்ட் டப்பா:

பிளாஸ்டிக் டப்பாக்கள் எல்லாம் காஸ்ட்லி. அழுக்கான பின் தூக்கிப் போடவும் மனசு வராது. இதற்கும் ஒரு ஐடியா இருக்கிறது பேச்சுலர்களிடம்! விமல் படம்போல எப்படியும் மாதத்திற்கு நான்கு ஆன்லைன் ஷாப்பிங் பேச்சுலர்ஸ் ரூமில் நடக்கும். அதில் கிடைக்கும் அட்டைப் பெட்டிகளை ரகம் வாரியாகப் பிரித்து சில்லறை சேர்த்து வைக்க, துணி க்ளிப்கள் போட்டுவைக்க எனப் பயன்படுத்துவார்கள்.
 
- நித்திஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism