Published:Updated:

‘ட்ரெண்ட்' பெட்டி!

‘ட்ரெண்ட்' பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
‘ட்ரெண்ட்' பெட்டி!

‘ட்ரெண்ட்' பெட்டி!

‘ட்ரெண்ட்' பெட்டி!

‘ட்ரெண்ட்' பெட்டி!

Published:Updated:
‘ட்ரெண்ட்' பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
‘ட்ரெண்ட்' பெட்டி!
‘ட்ரெண்ட்' பெட்டி!

எம்மி விருதுகள்!

HBO நிறுவனத்தின் பிரமாண்டத் தயாரிப்பில் ஒவ்வொரு வருடமும் வெளியாகி ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடரான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரையின் ஆஸ்கர் என்றழைக்கப்படும் எம்மி விருதை, இந்த ஆண்டு திரைக்கதை, இயக்கம், பெஸ்ட் டிராமா ஆகிய துறைகளில் மட்டுமே இத்தொடர் வென்றது. ஆனாலும் எம்மி விருதுகள் வரலாற்றில் இதுவரை மொத்தம் 38 விருதுகளை வென்றதன் மூலம், அதிக விருதுகளை வென்ற தொடராக இத்தொடர் புதிய சாதனை படைத்துள்ளது. இதன் எதிரொலியாக #emmys2016 #GameofThrones டேக்குகளில் லட்சக்கணக்கில் ட்வீட்கள் குவிந்தன. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நாயகி பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டது கொசுறுச் செய்தி. நீ வா சுருதி!

‘ட்ரெண்ட்' பெட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ட்ரெண்ட்' பெட்டி!

இது உள்ளூர் ஐ.பி.எல்!

 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு காலத் தடையால் ஏமாற்றத்தில் இருந்த தமிழக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகத் தொடங்கப்பட்ட தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் முழுவதும் நடைபெற்றன.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இதன் இறுதிப்போட்டியில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சென்னை சேப்பாக் கில்லீஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. தூத்துக்குடி அணியின் கேப்டனான #NammaPayaluga ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்தது. எல்லாம் சரி! சி.எஸ்.கே. தடை முடிஞ்சதும் இந்தத் தொடர் என்னாகும்?

‘ட்ரெண்ட்' பெட்டி!

சிவகார்த்திகேயனி!

‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் நடிப்பது ஊரறிந்த செய்தி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் தனது லுக்கால் பலரைக் கிறங்கடித்தார். அதிலிருந்தே இன்னும் மீளாமல் இருக்கும் ரசிகர்களைத் தற்போது, மர்லின் மன்றோ ஸ்டைலில் சிவகார்த்திகேயன் கொடுத்த போஸ் ஜொள் விட வைத்து வைரலாகியுள்ளது. நம்ம பசங்க எந்த அளவுக்கு ரசிச்சிருக்காங்கங்கிறதை #MarilynMonroeofTN டேக்கில் நீங்களும் பார்த்து மகிழலாம். படம் வந்தா சிவா என்னாகப் போறாரோ?

‘ட்ரெண்ட்' பெட்டி!

தேர்தல் நேரம்!

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசம் முழுக்க தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். சமாஜ்வாடியின் ஆட்சியில் மக்கள் அவதிப்படுவதாகவும், விவசாயிகள் தற்கொலை அதிகரித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார். #RahulSharesPainOfUP என்ற டேக்கில், ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் அவரைப்பற்றிய அப்டேட்டையும், ஆளும்கட்சி குறித்த விமர்சனங்களையும் தெறிக்க விட்டனர். அதே நேரத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாடி, சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் ராகுலுக்கு மக்கள் மீது திடீர் அக்கறை வந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

‘ட்ரெண்ட்' பெட்டி!

இரு துருவங்கள்!

சாதிய வேறுபாட்டையும் ஆணாதிக்கத்தையும் ஒழிக்கப் போராடிய தந்தை பெரியாரின் பிறந்த நாளன்று சோஷியல் மீடியா பரபரப்பாக இயங்கியது. ட்விட்டர், ஃபேஸ்புக் இரண்டிலும் #hbdperiyar டேக்கில் அவரது கருத்துகளைப் போட்டு அதிகம் பேர் பகிர்ந்ததால் இந்திய அளவில் ட்ரெண்ட் அடித்தது. அதே நாளில்தான் பெரியார் கொள்கைக்கு எதிரான மோடியின் பிறந்தநாளும்! #modibirthday டேக்கில் வாழ்த்துகளும், இப்போ எந்த நாட்ல இருக்காரோ?  என விமர்சனங்களும் ஒருசேரப் பதிவாகின. இந்தத் தேதியில் பிறந்தவங்களுக்கு பயணம் மீது தீராக்காதல் இருக்கும்னு பேசிக்கிறாங்க!

ரைட்டு!

 ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் ஒவ்வொரு ஆண்டும் `பிக் பில்லியன் டே' என்ற பெயரில் அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து பெரிய அளவில் விற்பனை செய்துவருகிறது. கடந்த ஆண்டு விற்பனையின்போது அந்நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் இந்த ஆண்டும் #BigBillionDay என்ற பெயரில் அதே ஆஃபரை அறிவித்துள்ளது. ‘நீ போனவருசம் செஞ்சதே போதும் சாமி’  என நெட்டிசன்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இதையும் மீறி அந்த விற்பனை நாள் என்ன என்று  தெரிந்துகொள்ள, ‘கடையை எப்போ சார் திறப்பீங்க!’ என சிலர் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆசையே துன்பத்திற்குக் காரணம்!

- ட்ரெண்டிங் பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism