Published:Updated:

மீம் புடிக்கலாம் வாங்க!

மீம் புடிக்கலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
மீம் புடிக்கலாம் வாங்க!

மீம் புடிக்கலாம் வாங்க!

மீம் புடிக்கலாம் வாங்க!

மீம் புடிக்கலாம் வாங்க!

Published:Updated:
மீம் புடிக்கலாம் வாங்க!
பிரீமியம் ஸ்டோரி
மீம் புடிக்கலாம் வாங்க!

`ஏதாச்சும் பண்டிகையா..? போட்றா மீம்!’, `புடிச்ச ஹீரோ படம் புடிக்காத ஹீரோ படம் ரிலீஸா?’, ‘சென்னைல வெள்ளமா?’ ‘இதோ இருக்கு மீம்!’ -இப்படி ஃபேஸ்புக் எங்கும் மீம் மயம். நீங்க பார்த்து சிரிக்கிற, ரசிச்சுப் பார்க்கிற பாதி மீம்ஸ்களுக்கு சொந்தக்காரர்களோடு ஒரு மினி சாட். மீம் கிரியேட்டர்கள் பேசும்போதே ஒவ்வொரு வார்த்தையிலும் `மீம்’ புடிக்கின்றனர்.

மீம் புடிக்கலாம் வாங்க!
மீம் புடிக்கலாம் வாங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விக்னேஷ்வரன் (VR Memes):  `வி.ஆர் மீம்ஸ்’ என்ற வாட்டர் மார்க்கோடு வலம் வந்துகொண்டிருக்கும் மீம்களுக்கு சொந்தக்காரர். பிறந்தது சென்னை, வளர்ந்தது நாகப்பட்டினம். இப்போ இஞ்சினீயரிங் படிச்சுட்டு திரும்பவும் சென்னையிலேயே வேலை தேடிக்கிட்டு இருக்கார்.
``ஒரு மாசத்துக்கு ஆறு ஜிபில இருந்து எட்டு ஜிபி வரைக்கும் டேட்டா செலவாகிட்டு இருந்துச்சு. இப்போலாம் மீம்ஸ் HDல இல்லைனா கோவிச்சுக்கிறாங்க. HD பிரின்ட்டா பார்த்து டவுன்லோடு செஞ்சு மீம் போடுறதால மாசத்துக்கு பத்து ஜிபி வரைக்கும் செலவாகுது. இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேல மீம் போட்ருக்கேன். மாசம் இதுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகுது.

எங்க வீட்டுக்கெல்லாம் நான் இந்த மாதிரி பண்றேன்னு தெரியாது. அண்ணனுக்குத் தெரியும். அவனும் ஏதோ ஃபேஸ்புக்ல பண்றான்னு நெனச்சுக்கிட்டு ஒண்ணும் சொல்றது இல்ல. நிறைய தடவை மீம் போட்டது போதும்னு நெனச்சுருக்கேன். ஆனா மீம் எனனைய விட்ட மாதிரி தெரில.
`ஆபீஸ்ல பயங்கர டென்ஷன்ல இருந்தேன். உங்க மீம் பார்த்ததும் குபுக்னு சிரிச்சுட்டேன். ரிலாக்ஸா இருந்துச்சு நண்பா’னு சிலபேரு சொல்லுவாங்க. அது உண்மையா பொய்யானு தெரியாது. ஆனா கேட்க நல்லா இருக்கும். அதுதான் இன்னும் விடாம புடிச்சுகிட்டு இருக்கு. ஐ லவ் மீம் கிரியேட்டிங்!’’ 

ஃபயாஸ் முகமது: (faiz): இவரோட மீம் வேற ரகம். வார்த்தை விளையாட்டுக்குள்ள இருந்து மீம் புடிக்கிற மனுஷன். சொந்த ஊரு திருநெல்வேலி.

மீம் புடிக்கலாம் வாங்க!

‘‘சிவில் இன்ஜினீயரா இருக்கேன். எப்போ ஆரம்பிச்சேன்னு தெரிலை. ஆனா எப்டியோ ஆரம்பிச்சுட்டேன். கல்யாணம் ஆகிருச்சு பாஸு! காக்கைச்சித்தர் மாதிரி என் பொண்டாட்டி திட்டாத நாளே இல்ல. `மாயி’ படத்துல வெளக்க மாத்தோட கோவை சரளா நிப்பாங்களே... அந்த

மீம் புடிக்கலாம் வாங்க!

டெம்ப்ளெட்ட வச்சு  `ஏழு கழுதை வயாசாயிருச்சு... இன்னும் மீம் போட்டுகிட்டு இருக்கே’ன்னு என் பொண்டாட்டியே எனக்கு மீம் போடுற அளவுக்கு நடந்துருக்குன்னா பார்த்துக்கங்களேன். இதைத் திட்டுனும் சொல்லமுடியாது. கோபம்னும் சொல்ல முடியாது. இது ஒரு கோபம் கலந்த அக்கறை கலந்த பாசம்! ஒரு தடவை வீட்டுச் சாமான் வாங்கிட்டு வரச் சொன்னாங்க. `வேற எதுவும் வாங்கணுமா?’ன்னு கேட்டேன். அவுங்க மனசுக்குள்ளேயே `வேற வேற’ன்னு ஒவ்வொண்ணா யோசிச்சுகிட்டு இருந்தாங்க. வாசலுக்கு வந்து `வேற வேற வேற லெவல்’னு மீம் பாஷை பேசிட்டு ஓடிட்டேன்.

ஒரு சிலர் இருப்பாங்க. எந்த மீம் போட்டாலும் `already came bro’னு டைப் பண்ற ஆளுங்க. இப்படித்தான் ஒரு தடவை ப்ரொஃபைல் போட்டோ போட்டேன். அதுக்கும் already came broனு கமெண்ட் போட்டுட்டு போயிட்டாங்க.

நான் மீம்ஸை இவ்ளோ லவ் பண்றதுக்குக் காரணம்... முதல் பார்வையிலே காதல், மத்தவங்க சிரிப்புல இறைவனைக் காணலாம்... இப்படிலாம் சொல்வேன்னு சத்தியமா நெனைக்காதீங்க. `ஜிகர்தண்டா’ படத்துல அசால்ட்டு சேது சொல்ற மாதிரி இது ஒரு சூர போதை. கமெண்ட்ல ‘lol, rofl, lamao, Keep doing good job, அடிப்பொலி, கலக்கல் மீம்’னு கமெண்ட் வர்றதெல்லாம் பார்த்து இன்னும் இன்னும் செய்யணும்னு தோணும் ப்ரோ!’’

கோகுல் ராஜ் (gokul kosaksi): வைஷ்ணவா கல்லூரி விஸ்காம் மூன்றாமாண்டு மாணவர். பக்கா சென்னைப் பையன்.

மீம் புடிக்கலாம் வாங்க!
மீம் புடிக்கலாம் வாங்க!

‘‘மீம்ஸ்ல ஏதாச்சும் வித்தியாசமா பண்ணணும்னு தோணுச்சு. என் ஃப்ரெண்டு ரொம்ப நாளா 360 டிகிரில வச்சு மீம் பண்ணச் சொல்லிட்டே இருந்தான். ஒரு வாரமா உட்கார்ந்து யோசிச்சி 360 டிகிரில போடலாம்னு போறப்போ அதுக்குள்ள யாரோ அதே டெக்னிக்ல போட்டுட்டாங்க. அவங்க ஒரு போட்டோ மட்டும்தான் போட்டாங்க. அடுத்த 14 மணி நேரத்துல ஒவ்வொரு  படத்துலயும் முக்கியமான காட்சிகளில் வடிவேலு நடிச்சுருந்தா எப்படி இருந்துருக்கும்னு கான்செப்ட் பிடிச்சு காலேஜுக்கு லீவு போட்டு ஒரு மீம் சீரிஸே பண்ணி அப்லோடு பண்ணிட்டேன். அது என்னோட நூறாவது மீமும்கூட. ஆயிரத்துக்கும் மேல ஷேர் இருந்துச்சு. பல மீடியா க்ரூப்ல ஷேர் ஆகி இருந்துச்சு!

எடிட்டிங், டிசைனிங்ல எல்லாம் ரொம்ப ஆர்வம். அதனாலதான் விஸ்காம் எடுத்துப் படிச்சேன். வீட்ல திட்டிட்டே இருப்பாங்க. இருபத்துநாளு மணி நேரமும் போனும் கையுமா திரியிறேன்னு. எல்லாருமே தன்னோட பங்க்குக்கு ஒரு மீம்ஸ் ஆவது போட்டுடுறாங்க. மீம்ஸ் ஒரு கடல் பாஸ். கொஞ்சம் டேட்டா கொஞ்சம் ரசனை இருந்தாப் போதும் யாருனாலும் மீன் புடிச்சுரலாம்.

 அட ஆமா!

பின் குறிப்பு: டைம்பாஸ் புக்கை மனசுல வெச்சு இந்த மீம் பாய்ஸ் போட்ட மீம்கள் இங்கே இருக்கு!

- ந.புஹாரி ராஜா
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism