Published:Updated:

‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’

‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’

‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’

‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’

‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’

Published:Updated:
‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’

யூ-ட்யூப் ல இப்போலாம் நிறைய சினிமா விமர்சனம் பண்ண ஆரம்ப்பிச்சுட்டாங்க. விமர்சனத்தைவிட அதைப் பார்த்துட்டு வர்ற, கீழே எழுதி இருக்குற கமெண்ட் படிச்சா இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்.

‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’

ஜாக்கி சேகர் ஜாக்கி சினிமாஸ்:

மறக்க முடியாத பாராட்டு:


‘மகேஷிண்ட பிரதிகாரம்’,  ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’,  இந்த ரெண்டு படத்தோட விமர்சனமும் நிறைய பாராட்டுகளை வாங்கி குடுத்துச்சு. தமிழ்ல குறிப்பிட்டு சொல்லணும்னா `மீகாமன்’.  இயக்குநர் மகிழ்திருமேனி `you made my day ஜாக்கி’ன்னு சொல்லித் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அந்த திரைப்படத்தை ஸ்கிரீன் பண்ணுனப்போ எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

மறக்க முடியாத திட்டு:

நிறைய திட்டு வந்துருக்கு. ஆனா எல்லாமே தனிப்பட்ட திட்டாதான் இருந்துருக்கு. தலையில முடி இல்லைங்குறத விமர்சனத்தோட சேர்த்து வச்சு மண்டைக்காரனா இருக்கான்யானு சிலேடையா சொல்லிருக்காங்க.

சமீபத்துல ரொம்ப பிடிச்ச சினிமா:
`குற்றம் கடிதல்’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’

ஸ்மைல் சேட்டை ஆர்.ஜே.விக்னேஷ்:

மறக்க முடியாத பாராட்டு:

Dumbest review ல அதிகமான பாராட்டுகள் கிடைச்சதுண்ணா அது `சவுகார் பேட்டை’ படத்துக்குத்தான். ஏன்னா அதுலதான் அந்த அளவுக்குக் கழுவி ஊத்திருக்கிறதாச் சொன்னாங்க. பிரசாந்த் சார் அப்பப்போ போன் பண்ணி பாராட்டுவாங்க. ஆனா `சாகசம்’ படத்தோட ரிவியூ பார்த்தாரான்னு தெரியல. பார்த்தா கடுப்பாகி இருப்பாரு!

மறக்க முடியாத திட்டு:

`ஜோக்கர்’ படத்துக்காகவும், `கபாலி’ படத்துக்காகவும் கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சு. இப்போக் கூட `இருமுகன்’ படத்து விமர்சனத்துல ஒரு ஆள் வந்து, `காவிரில தண்ணி வரல... உனக்கு இருமுகன் விமர்சனம் கேட்குதா?’ன்னு விமர்சனத்த பார்த்துகிட்டே கமெண்ட்ட போட்ருக்காப்ள. வழக்கமா சிம்பு சார்  எங்க ஷோ எல்லாம் பார்த்துட்டு பேசுவார். ஒரு தடவை வேற ஒரு விஷயம் பேசும்போது, ‘இது நம்ம ஆளு' விமர்சனம் பார்த்தேன் ...ம்ம்ம்ம் பார்த்தேன்... அப்டின்னு ஒரு மாதிரி டோன்ல பேசுனாரு. இதெல்லாம் போக ஏதாச்சும் ஒரு படத்தைக் கழுவி ஊத்தி இருப்போம். அந்தப் படம் சம்பந்தப்பட்ட ஆர்டிஸ்ட்டையோ இல்ல... டெக்னீசியன்ஸையோ நேர்ல பார்த்தா கொஞ்சம் ச்சச்சங்கட்டமா இருக்கும்.

சமீபத்தில பிடித்த சினிமா: உறியடி

‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’

இட்ஸ் பிரஷாந்த்:

மறக்க முடியாத பாராட்டு:


`மெட்ரோ’ படத்தின் ப்ரிவியூவுக்காக அந்தப் படத்தோட இயக்குநர் அழைத்திருந்தார். படம் பார்த்துட்டு படத்தைப் பத்தின நேர்மையான விமர்சனத்தை, படம் இயல்பாக வந்திருப்பதாக சொன்னேன். அதற்கு அவர், `எல்லாம் நீங்களும் உங்கள மாதிரி விமர்சகர்களும்தான் காரணம்’னு சொன்னார்.

மறக்க முடியாத திட்டு:

`கபாலி’ படத்தின் விமர்சனத்துக்கு நிறைய எதிர்வினைகள் வந்திருதுச்சு. நைட்டு பன்னிரண்டு மணிக்கு ஒருத்தர் போன் பண்ணி மூணு மனி நேரம் பேசுனாரு, நீ எப்படி இப்படி எல்லாம் பேசலாம். நல்ல படத்த பத்தி எவன் தப்பா சொன்னாலும் நா அங்க நிப்பேன் அப்டின்னு மூணு மணி நேரம் திணற திணற அடிச்சாரு.

 ஒரு சினிமா பிரபலம் வேறொரு சினிமா பிரபலத்தோட ட்விட்டர் அக்கவுண்ட்ல இருந்து, `நீ எல்லாம் ஒரு ஆளா?' அப்டிங்குற டைப்ல ட்வீட் போட்ருந்தாரு!

சமீபத்தில் பிடித்த சினிமா: விசாரணை

பின் குறிப்பு: எல்லா விமர்சகர்களும் கடந்து வந்த ஒரே கேள்வி: ‘எங்க நீ ஒரு சினிமா எடுத்துக் காட்டுப் பார்க்கலாம்!’ என்பதாம்.

- ந.புஹாரி ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism