Published:Updated:

களவாணிக் கூட்டம்!

களவாணிக் கூட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
களவாணிக் கூட்டம்!

களவாணிக் கூட்டம்!

களவாணிக் கூட்டம்!

களவாணிக் கூட்டம்!

Published:Updated:
களவாணிக் கூட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
களவாணிக் கூட்டம்!

பேங்க் ராபரி போன்ற heist (கொள்ளை) ஜானர் உலக சினிமாக்களைப் பார்க்கும்போது `வாவ்டா' என வாய் பிளக்கத் தோன்றும். ஆனால் நிஜத்தில் சினிமாக்களை எல்லாம் மிஞ்சும் வகையில் சில குழுக்கள் இருக்கின்றன. வித்தியாசமான முறைகளில் கோடிக்கணக்கில் பணம் திருடி போலீஸுக்கே தண்ணி காட்டும் அவர்களைப் பற்றிய மினி டேட்டாபேஸ் இது...

களவாணிக் கூட்டம்!

வைல்ட் பஞ்ச் (Wild Bunch):

19-ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவைப் பதறவைத்த கேங் இது. புட்ச் கேஸிடி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கேங்கில் மொத்தம் 19 பேர். வெள்ளைத் துணியாலான முகமூடி அணிந்துகொண்டு ஓடும் ரயில்களில் கொள்ளை அடிப்பது இவர்களின் ஸ்டைல். 1899-ல் ஓடும் ரயிலில் 60 ஆயிரம் டாலர்கள் கொள்ளை அடித்ததுதான் இவர்களின் முதல் மிஷன். அதன்பின் வரிசையாக எக்கச்சக்க ரயில்களில் கை வைத்தார்கள். குறுக்கே வரும் போலீஸ்காரர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் சுட்டுவிடுவார்கள். இனி யாராலும் நம்மைத் தொட முடியாது என்ற தைரியம் வரவே நெவாடா மாகாண தேசிய வங்கியைக் கொள்ளையடித்தார்கள். இதுதான் அவர்களின் கடைசிக் கொள்ளை. அதன்பின் ஒருவர் பின் ஒருவராக போலீஸில் சிக்க, கேங் சிதைந்து காணாமலே போனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

களவாணிக் கூட்டம்!

தி டில்லிங்கர் கேங் (The Dillinger Gang):

ஜான் டில்லிங்கர் என்பவரால் 1933-ல் தொடங்கப்பட்ட குழு இது. இந்த கேங்கின் துணைத்தலைவர் அமெரிக்காவையே நடுங்க வைத்துக்கொண்டிருந்த குழந்தை மூஞ்சி நெல்சன். (சத்தியமா பேரே அதுதான் ஜி) 1933-ல் தொடங்கி அடுத்த ஓர் ஆண்டிற்குள் 13 வங்கிகளில் கொள்ளையடித்தார்கள். மிலிட்டரி ஸ்டைல் ஆக்‌ஷன்தான் இவர்களின் வழிமுறை. நோட்டம் பார்க்க ஓர் ஆள், லாபியில் ஓர் ஆள், பணப்பெட்டகத்தில் ஓர் ஆள், வெளியே காரில் ரெடியாக ஒரு டிரைவர் எனப் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு போலீஸுக்குத் தண்ணி காட்டினார்கள். அந்த நாட்களில் அதி நவீனத் துப்பாக்கிகள், கவசங்கள் கொண்டு கொள்ளையடித்த ஒரே கேங் இதுதான். இவர்களின் ஸ்டைலைத் தழுவி ஹாலிவுட்டில் எக்கச்சக்கப் படங்கள் வெளியாகின. 1934-ல் கேங் லீடர் டில்லிங்கர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட, கேங் சிதைந்து சிதறியது.

களவாணிக் கூட்டம்!

தி ஸ்டாப்வாட்ச் கேங்:

செம ஸ்டைலிஷ் கேங் இது. பேடி மிட்சல், லியோனல் ரைட், ஸ்டீபன் ரெய்ட் என மொத்தமே மூன்று பேர்தான் இந்தக் குழுவில். மூவருமே கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் மொத்தம் 100 வங்கிகளைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். 1980-ல் பேங்க் ஆஃப் அமெரிக்காவை முற்றுகையிட்டு 2,83,000 டாலர்களை ஸ்வாஹா செய்ததுதான் இவர்களின் மிகப்பெரிய கொள்ளை. ஸ்டாப் வாட்ச் என இந்தக் குழுவிற்குப் பெயர் வர ஒரு சுவாரஸ்யக் காரணம் உண்டு. கொள்ளையடிக்கச் செல்லும் முன், ஸ்டாப் வாட்ச்சை ஆன் செய்துகொள்வார்கள். அதில் 90 விநாடிகள் ஆவதற்குள் வங்கியைக் கொள்ளையடித்துக் கிளம்பிவிடுவார்கள். இவர்களின் இந்த எக்ஸ்பிரஸ் வேகத்தால் போலீஸார் மூச்சுத்திணறினாலும் பின்னர் சுதாரித்து மூவரையும் கம்பி எண்ண வைத்துவிட்டார்கள்.

களவாணிக் கூட்டம்!

ட்ரெஞ்ச்கோட் ராப்பர்ஸ்:

ரே லீவிஸ் பெளமேன், வில்லியம் ஆர்தர் ஆகிய இரண்டே பேர்தான் இந்தக் குழுவில். ரொம்பவும் சிம்பிளான வழிமுறை இவர்களுடையது. தடாலென வங்கிகளில் நுழைவது, ஊழியர்களை மிரட்டிக் கட்டிப்போட்டுவிட்டு சரசரவென பணத்தை அள்ளிபோட்டுக்கொண்டு பறந்துவிடுவது என பிளான் பண்ணிக் கொள்ளையடித்தார்கள். 1982-ல் தொடங்கி 1998 வரை கிட்டத்தட்ட 28 வங்கிகளில் கொள்ளையடித்திருக்கிறார்கள். இவர்களின் ஆல்டைம் பெஸ்ட் 1997-ல் 4.4 மில்லியன் டாலர்கள் கொள்ளையடித்ததுதான். ஒருமுறை காரில் வேகமாகச் சென்றதாக போலீஸ் ஆர்தரை தற்செயலாகப் பிடிக்க, விசாரணையில்தான் மாட்டியது சுறாமீன் எனத் தெரிய வந்தது. இப்போது இருவரும் சிறையில்.

களவாணிக் கூட்டம்!

பிங்க் பேந்தர்ஸ்:

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கொள்ளைக்காரர்கள் என்ற பட்டத்தை ஏகபோகமாக இவர்களுக்கு வழங்குகிறது இன்டர்போல். யூகோஸ்லேவியாவைச் சேர்ந்த இந்தக் குழுவில் நூற்றுக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நகைகளைக் குறிவைத்துக் கொள்ளையடிப்பது இவர்களின் ஸ்டைல். அதற்காக நம்பமுடியாத ஸ்டன்ட்களை எல்லாம் மேற்கொள்வார்கள். ஒருமுறை துபாயில் விலை உயர்ந்த கடிகாரங்களின் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி வளாகத்தை எட்டு ஆடி கார்களால் மோதித் துளைத்து உள்ளே வந்து எட்டு மில்லியன் யூரோ மதிப்பிலான கடிகாரங்களை அள்ளிக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார்கள். இப்படி ஜப்பான், ஸ்பெயின், ஃபிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து எனப் பறந்து பறந்து வேட்டையாடுவதால் இன்டர்போலுக்கு இவர்கள் மிகப்பெரிய தலைவலியானார்கள். கஷ்டப்பட்டுப் பிடித்தாலும் ஜெயிலை உடைத்துக்கொண்டு தப்பிவிடுகிறார்கள். 1993-ல் தொடங்கி இன்றுவரை தண்ணி காட்டும் இவர்களைப் பிடித்தே தீருவது எனக் கங்கணம் கட்டித் திரிகிறது இன்டர்போல்.

- நித்திஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism