Published:Updated:

`கலை'சாட்சி

`கலை'சாட்சி
பிரீமியம் ஸ்டோரி
`கலை'சாட்சி

`கலை'சாட்சி

`கலை'சாட்சி

`கலை'சாட்சி

Published:Updated:
`கலை'சாட்சி
பிரீமியம் ஸ்டோரி
`கலை'சாட்சி
`கலை'சாட்சி

லைக்கூடம் என்றால் பத்துக்குப் பத்து அடி அளவுள்ள ஓர் அறைக்குள் அரைவெளிச்சத்தில் இருக்கும் என்றொரு பிம்பம் நம் பலருக்கும் உண்டு. ஆனால் உலகின் மிக நீளமான கலைக்கூடம் என வரலாற்றாசிரியர்கள் அழைக்கும் இடம் எவ்வளவு பெரியது தெரியுமா? அமெரிக்காவின் உடா மாகாணத்தில் உள்ள செவ்விந்தியர்கள் வாழ்ந்த பகுதியான ஒன்பது மைல் பள்ளத்தாக்குதான் அது!

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் இங்கு இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. உண்மையில் இந்தப் பள்ளத்தாக்கு நாற்பது மைல் நீளம் கொண்டது. இங்கே ஓடிய ஒன்பது மைல் க்ரீக் என்ற ஆற்றின் பெயரால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. கி.பி. 300-ல் தொடங்கி இப்பகுதியில் பூர்வகுடியான செவ்விந்தியர்கள் வாழ்ந்து வந்ததற்கான அடையாளம் உள்ளது. கி.பி. 950 முதல் கி.பி. 1250 வரை இந்தப் பாறை ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளதாக `கார்பன் டேட்டிங்' முறையில்  கணக்கிட்டுள்ளனர். வீடு முதல் வளர்ப்புப் பிராணிகள் வரை அனைத்தும் இங்கு பாறை ஓவியங்களாகக் காணப்படுகின்றன.

`கலை'சாட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கையாலும், இங்கு பார்வையிட வரும் பயணிகளாலும் தூசிபடிந்து பல பாறை ஓவியங்கள் சிதிலமடைவதாகத் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அமெரிக்க அரசு, இங்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எந்த மக்களை நாகரிகமற்றவர்கள் என அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த வெள்ளை இன மக்கள் ஒதுக்கினார்களோ... அவர்கள் பல காலம் முன்பே நாகரிகத்தில் மேம்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்த இடம் இன்றும் சாட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது!

- கருப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism