Published:Updated:

கேம்வெறி அனிருத்!

கேம்வெறி அனிருத்!
பிரீமியம் ஸ்டோரி
கேம்வெறி அனிருத்!

கேம்வெறி அனிருத்!

கேம்வெறி அனிருத்!

கேம்வெறி அனிருத்!

Published:Updated:
கேம்வெறி அனிருத்!
பிரீமியம் ஸ்டோரி
கேம்வெறி அனிருத்!

ஃபேஸ்புக் லைவ் ஆப்ஷன் வந்ததிலிருந்து ஆளாளுக்குப் பாட்டுப்பாடியும், தத்துவம் பேசியும், வீடியோ போட்டும் பயமுறுத்திக்கொண்டிருக்க, இங்கே ஒருவர் அதிலேயே நேரலையாக `சொல்லுக்கு துட்டு' என்ற கேம்ஷோ நடத்துகிறார். ஒரு மெசேஜ் தட்டி, ஆளைப் பிடித்தேன்.

``மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு அந்தத் துறையில் ஆர்வம் இல்லாமல் மீடியா பக்கம் கவனத்தைத் திருப்பினேன். மீடியாவில் கேமராவுக்கு முன்பு எத்தனை வருடம் இருக்க முடியுமோ அத்தனை வருடம் நின்னுட்டு அதில் வாய்ப்புகள் குறையும்போது கேமராவுக்குப் பின்னாடி டெக்னீஷியனாக வொர்க் பண்ணணும்னு இப்பவே ப்ளான் பண்ணி வெச்சுருக்கேன். ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சாப் போதும். அதை நூலாப் பிடிச்சு வளர்ந்துருவேன் ப்ரோ...'' என உற்சாகம் மின்னப் பேசுகிறார் அனிருத். (இவரு... வேற அனிருத்!)

``வீடியோ ஜாக்கியாக ஃபேம் தமிழ் (FameTamil) பேஜ்ல நான் புரோகிராம் பண்ணிட்டு இருந்தேன். ஃபேம் தமிழ் கமர்ஷியலாகச் சில சறுக்கல்களைச் சந்திச்சதால அதில் நான் பண்ணின புரோகிராமை நிறுத்திட்டாங்க. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுனு தெரியாமல் யோசிச்சுட்டு இருந்தேன். அப்போதான் ஃபேஸ்புக் லைவ் ஆப்ஷன் புதுசா வந்திருக்கிறதைப் பார்த்துட்டு இதை வெச்சே நாம ஏன் கேம்-ஷோ பண்ணக் கூடாதுனு யோசிச்சேன். சோதனை முயற்சியா ஒரே ஒரு ஷோ பண்ணிப் பார்க்கலாம்னு என்னோட பேஜ்ல போஸ்ட் போட்டுட்டு ஒருநாள் நைட் ஒன்பது மணிக்கு ஆரம்பிச்சோம். முதல் ரெண்டு வாரத்துக்கு நானே கைப்பட படங்களை வரைஞ்சுதான் இந்த நிகழ்ச்சியை நடத்தினேன். பிறகு, வீடியோமேக்கிங் செய்யும் நண்பர்கள் என் நிகழ்ச்சிக்கான படங்களை ஸ்லைடுகளாகவே பண்ணிக் கொடுத்தாங்க. அதற்குப் பிறகு புரோகிராம் இன்னும் கலர்ஃபுல்லா மாறியிருக்கு.''

கேம்வெறி அனிருத்!

``ஃபேஸ்புக் லைவ் ஆப்ஷனை இப்படிப் பயன்படுத்தலாம்னு எப்படித் தோணிச்சு?''

``இதுவும் நேயர்களை யோசிக்க வைக்கிற கேம். டி.வி-யில் நடத்தப்படும் இந்த மாதிரி ரியாலிட்டி கேம்-ஷோக்களில் எல்லோரும் கலந்துக்க முடியாது இல்லையா? இதையே நாம் ஃபேஸ்புக்ல பண்ணும்போது இதில் ஆர்வம் இருக்கிற எல்லோருமே எளிமையாகப் பங்கேற்கலாம். இதுக்காகவே, வேலைக்குப் போய்ட்டு வர்றவங்களும் ஃப்ரீயாகிற நேரத்தில் வார இறுதி நாட்களில் ஒன்பது மணிக்கு இந்த புரோகிராமைப் பண்றோம்.''

``உங்களின் இந்தப் புதிய முயற்சிக்கு வரவேற்பு எப்படி இருக்கு?''

``கமர்ஷியலாக இப்போதைக்கு எந்த லாபமும் இல்லை. நான் வீடியோ ஜாக்கியாகப் பண்றதுக்காக எல்லா டி.வி. சேனல்களின் படிகளிலும் ஏறி இறங்கியிருக்கேன். வாட்ச்மேன்களே என் ரெஸ்யூமை வாங்கி வெச்சுட்டுப் போகச் சொல்லிடுவாங்க. பெரும்பாலும், வீ.ஜே-வாகப் பெண்களைத்தான் தேர்ந்தெடுக்கிறாங்க. இப்படிச் சமூக ஊடகங்களில் என்னோட நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு எந்த சேனலிலாவது அவர்களின் நிகழ்ச்சிக்கு நான் பொருத்தமாக இருப்பேன்னு கூப்பிடுவாங்களாங்கிற நப்பாசைதான். யாராவது நிச்சயமாக் கூப்பிடுவாங்கனு காத்துக்கிட்டு இருக்கேன்.

இப்போ ஃபேஸ்புக்கில் எல்லோருக்கும் இந்த முயற்சி பிடிச்சிருக்கு. என்னை அதிகளவில் ஊக்குவித்துக்கொண்டிருக்கும் என் நண்பர்களுக்குத்தான் நன்றி சொல்லணும். வீட்டிலேயும் படிச்ச இன்ஜினீயரிங் துறையிலேயே வேலைக்குப் போகச் சொல்லாமல், பிடிச்ச வேலையைப் பண்ணட்டும்னு ஃப்ரீயா விட்டுட்டாங்க. நேயர்களை ஈர்க்கிறதுக்காக வெற்றி பெறுபவர்களுக்கு டாப்-அப் பண்றோம். இதுக்கும் இனிமேல் ஸ்பான்சர்கள் கிடைக்கப் போறாங்க. கிஃப்ட் வவுச்சர்களாகக் கொடுக்கலாம்ங்கிற எண்ணம் இருக்கு. அப்படி நடந்தால் அவங்களுக்கும் எனக்கும் லாபம் தரும் முயற்சியாக இருக்கும்.''

``நீங்க நிகழ்ச்சி பண்ணும்போது திரைக்குப் பின்னால் நடந்த காமெடிகள்?''

``கேம் ஷோவை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ரொம்பநேரம் நான் வீடியோ ஜாக்கி ஃபீல்லயே மொக்கை போட்டுக்கிட்டு இருப்பேன். அதைப் பார்த்துட்டு எப்பதான்டா நீ ஆரம்பிப்பேன்னு மனசாட்சியே இல்லாம கமென்ட்லேயே பொசுக்குனு கேட்டுட்டாரு ஒருத்தர். இன்னொருத்தர், நான் ஒன்பது மணிக்கு நடத்துற லைவ் நிகழ்ச்சியை நடுராத்திரி ஒரு மணிக்குப் பார்த்துட்டு பதில்களையெல்லாம் கமென்ட் போட்டுக்கிட்டு இருந்தார். இதுல அப்பப்போ, நாந்தான்டா மொதல்ல ஆன்சர் சொன்னேன். என் பேரைச் சொல்லுடானு வேற கத்திக்கிட்டு இருக்கார். இப்படி தினந்தினம் பல காமெடிகள் நடந்துக்கிட்டிருக்கு.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேம்வெறி அனிருத்!

``கேம் ஷோ நடத்தும் போது சொதப்பலான சம்பவம் ஏதாவது நடந்திருக்கா?''

``என்னது... நடந்திருக்காவா? அதெல்லாம் அடிக்கடி அல்டிமேட் சொதப்பலா நடக்கும் ப்ரோ. லேப்டாப்பைத் திருப்பி வெச்சு பவர்பாய்ன்ட்ல ஸ்லைடு ஷோ போட்டு நடத்திட்டு இருக்கும்போது ராங்கான பட்டனை அழுத்தப்போய் அடுத்த கேள்விக்கான பதிலும் சேர்ந்து தெரிஞ்சிடுச்சு. அதைப் பார்த்துட்டுப் பதறிப்போய் லேப்டாப்பை எடுத்து மறைச்சு... அதுக்குள்ள லைவ் கமென்ட்ஸ்ல எல்லோரும் கலாய்ச்சு... அய்யய்யோ அந்தக் கொடுமையை ஏங்க கேக்குறீங்க?''

``நீங்க பண்றதை விடவா ப்ரோ...'' என நைஸாக நழுவினோம்.

நீங்களும் அனிருத் கூடச் சேர்ந்து லைவ்வாக கேம் விளையாட ஒன்பது மணிக்கு இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க... https://www.facebook.com/aniiruth

- விக்கி, படம்: உ.கிரண்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism