Published:Updated:

ஜிக்கா கில்லாடி!

ஜிக்கா கில்லாடி!
பிரீமியம் ஸ்டோரி
ஜிக்கா கில்லாடி!

ஜிக்கா கில்லாடி!

ஜிக்கா கில்லாடி!

ஜிக்கா கில்லாடி!

Published:Updated:
ஜிக்கா கில்லாடி!
பிரீமியம் ஸ்டோரி
ஜிக்கா கில்லாடி!

புதுசு புதுசா ஏதாவது பண்றதுல ஜப்பான்காரங்களை அடிச்சுக்க முடியாது. அப்படி சமீபத்தில் ஜப்பானிய ஆர்க்கிடெக்ட் ஒருத்தர் வடிவமைச்ச வீடு ஒண்ணு செம்ம வைரல். அப்படி என்ன ஸ்பெஷல்?

ஜிக்கா கில்லாடி!

`ஹாரிபாட்டர்' படத்தில் ஒரு சீன் வரும். அதில் கூடாரத்துக்குள் ஹீரோ நுழைவார். உள்ளே நுழைஞ்சா, ஏகப்பட்ட வசதிகளோட பிரமாண்ட மாளிகையே இருக்கும். அந்த கான்செஃப்ட்லதான் இந்தக் கட்டடத்தை வடிவமைத்திருக்கிறார் இஸ்சி சுமா என்ற வடிவமைப்பாளர்.

இரண்டு முதியவர்கள், தங்களது ஓய்வைக் கழிக்கவும் உதவியாளர்களுடன் தங்குவதற்காகவும் இந்தக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஷிசோகா மலைத்தொடரில் வெறும் நூறுமீட்டர் பரப்பில் இது அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்குள் சுழல் வடிவ நீச்சல்குளம் உள்பட அழகான உட்புற வடிவமைப்பில் நவீன வசதிகள் உள்ளன. ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மொத்தம் ஐந்து தனித்தனி அறைகளும் உள்ளன.

சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத வகையில் நவீனத் தொழில்நுட்ப வசதியோடு இதை வடிவமைத்துள்ளதாக இஸ்சி சுமா தெரிவிக்கிறார். இவர் இதற்கு `ஜிக்கா' எனப் பெயரிட்டுள்ளார். ஜப்பானிய மொழியில் `ஜிக்கா' என்றால் வீடு எனப் பொருளாம்! (இதுக்கா சுத்தல்ல விட்டாய்ங்க!)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அடப் போங்க பாஸ். எங்க ஊர்ல ரிட்டயர்டான பெரியவங்க, ரெண்டு சேரை மடக்கிப்போட்டு சாய்ஞ்சு உட்கார்றதுதான் ஃபேஷனே!

- கருப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism