Published:Updated:

`உயர்தர' உய்யலாலா!

`உயர்தர' உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
`உயர்தர' உய்யலாலா!

`உயர்தர' உய்யலாலா!

`உயர்தர' உய்யலாலா!

`உயர்தர' உய்யலாலா!

Published:Updated:
`உயர்தர' உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
`உயர்தர' உய்யலாலா!

ஒரு விஷயத்தைக் காப்பி அடிச்சு அப்படியே புதுசா ஒண்ணை உருவாக்குகிற காப்பிகேட் சமாச்சாரம் நமக்கு ஒண்ணும் புதுசு கிடையாது. ஆப்பிள்-சாம்சங் அளவுக்குக்கூட நாம போக வேண்டியதில்லை. ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஒரு சேனல்ல ஹிட்டானா, உடனே பத்துப் பதினைஞ்சு சேனல்கள்ல அதே மாதிரி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். இந்தப் பாரம்பரியம் ஹோட்டல்களில் எப்படியெல்லாம் தொட்டுத் தொடருதுனு தெரியுங்களா?

`உயர்தர' உய்யலாலா!

• `உயர்தர சைவ உணவகம், பவன், விலாஸ், பவனம்' இதுல ஒண்ணுகூட கடையோட போர்டுல இல்லாட்டி, நிஜம்மாவே இது வெஜிடேரியன் கடைதானாங்கிற குழப்பம் நமக்கு வந்துரும். உள்ளே போகவே பயப்படுவோம்ல? அந்த அளவுக்கு மைண்ட் செட்ஆகிருச்சு. #அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பிள்ளையார் கோயில் தெருங்கிறதை மட்டும் அடையாளமா சொன்னா, அந்த ஏரியாவைத் தேடுறது எவ்வளவு கஷ்டமோ அதே மாதிரிதான் திருநெல்வேலியில் `சாந்தி' அல்வாக் கடையை லேண்ட் மார்க்கா சொல்றதும்! இந்தப் பெயரில் மொத்தம் எத்தனை கடைகள் இருக்குனு கணக்கெடுக்க ஆரம்பிச்சீங்கன்னா, அந்த லிஸ்ட் மதுரை வரைக்கும் நீளும். #அமைதிக்குப் பெயர்தானே சாந்தி!

• `செட்டிநாடு ஹோட்டல்'னு பேர் இருக்கும். ஆனா உள்ள போய் கேட்டீங்கனா எல்லா செட்டிநாட்டு ஸ்பெஷல் ஐட்டங்களும் காலி ஆயிட்டதா காத்துவாக்குல சொல்வாங்க. வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க! அசைவ ஹோட்டல்ங்கிற ஒரே காரணத்துக்காக இப்படிப் பேர் வெச்சு டகால்டி காட்றதெல்லாம் ரொம்ப ஓவரு பாஸ்.

• அப்புறம் அசைவ உணவகம்னாலே ரொம்ப டெர்ரரான பேர் இருக்கணும்கிறது பொதுவான விதி. பேரைப் பார்த்தே கதிகலங்கிப் போய் உள்ளே நுழைஞ்சவங்க அதிகம். இதேமாதிரி, அரேபியன் கடைகளோட பெயர்ப்பலகை அரபு மொழியிலேயே தொங்குறதைப் பார்த்து, தப்பித்தவறி துபாய் வந்துட்டோமானு கிள்ளிப்பார்த்துதான் கன்ஃபார்ம் பண்ணிக்கணும். #பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

`உயர்தர' உய்யலாலா!

• அடுப்படி வைக்க இடமில்லைகிறதுக்காக யாரோ ஒரு கடைக்காரர் அடுப்பை வெளியே வைக்கப்போய்... ஹோட்டல்கள்ல வாஸ்துப்படி அடுப்பு வாசல்லதான் இருக்கணும்னு அப்படியே பதிவாகிருச்சு போல. கடைக்குள்ள நுழையும்போதே வடச்சட்டியில் வறுபட்டு வர்ற புகையால, நாம இருமிக்கிட்டே நுழைய வேண்டியிருக்கு. #கொஞ்சம் நகர்த்துங்க பாஸ்!

• விதவிதமா பேர் வெச்சு, டெக்கரேசன் பண்றதில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்படி முதலிடத்தில் இருப்பது பாஸ்ட்ஃபுட் கடைகள்தான்! `இடிஅமீன் திடீர் உணவகம்', `போட்டுத்தாக்கு ஃபாஸ்ட் ஃபுட்', `திரும்பிப்பார் டிபன் சென்டர்', `செம்ம பசி ஹோட்டல்' இதெல்லாம் சமீபத்தில் நான் பார்த்த ஹோட்டல் பெயர்கள். #என்னா ரைமிங்ல!

- கருப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism