Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

Published:Updated:
ஆஃப் த ரெக்கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் த ரெக்கார்டு!
ஆஃப் த ரெக்கார்டு!

• திரைப்பட விழா ஒன்றில் ``தகுதி இருந்தாதான் ‘நடை’ நடிகர் மாதிரி நடந்துக்கணும்'' எனத் தயாரிப்பாளர் ஒருவர் விமர்சித்தார். இதைக் கேள்விப்பட்ட ‘வெற்றி’ நடிகர் தயாரிப்பாளரைப் பற்றி தன் நண்பர்களிடம் சொல்லி, திட்டித் தீர்த்து வருகிறார்.

•  பேய்ப் பெயர் கொண்ட படத்தின் நாயகி ஏற்கெனவே ஒரு சில படங்களில் நடித்திருந்தாராம். தற்போது பெரிய படங்களில் வாய்ப்புகள் வருவதால், ஏற்கெனவே நடித்த சிறுபட்ஜெட் படங்களின் புரமோஷன்களில் கலந்துகொள்ளாமல், அப்படங்களின் தயாரிப்பாளர்களைச் சுத்தவிட்டுக்கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• காமெடி ஹீரோவின் காரை `பெரிது' நடிகை பயன்படுத்துவதும், அந்த நடிகையின் வீட்டுத் திருமணம் ஒன்றில் ‘பட்டுவேட்டி’ கட்டி காமெடி ஹீரோ கலந்து கொண்டதும், நடிகரின் மனைவிக்கு பயத்தை விதைத்துள்ளதாம்! 

•  உச்ச நடிகரின் மகள் விவாகரத்து, மில்க் நடிகை விவாகரத்து என எல்லா விஷயத்திற்கும் தான்தான் காரணம் என வேண்டாதவர்கள் விஷ வதந்தி பரப்பி வருவதால், வருத்தத்தில் இருக்கிறாராம் ஒல்லி நடிகர்!

• சர்ச்சைக்குத் திரி கிள்ளிய பாடல் லீக் ஆனபோது, தனக்கு எதிராகக் கொடி பிடித்த மகளிர் அமைப்புகளை கடுமையாகத் தாக்கி தன் `ஏ' படத்தில் வசனங்கள் வைத்திருக்கிறாராம் வாலு! 

• `கையேந்தி' படத்தைத் தமிழில் இயக்கிய இயக்குநரையே இந்தியிலும் இயக்கச் சொல்லிக் கேட்டாராம் இசை நாயகன். `நான் ரீமேக் பண்ண மாட்டேன்' என இயக்குநர் மறுக்க, தானே இயக்க முடிவெடுத்துக் களமிறங்கிவிட்டாராம் இசை.

• முந்தைய படங்கள் ஓடாதபோதே ‘மதுபான’ நடிகர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து டபுள் ஃபேஸ் படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டார் தயாரிப்பாளர். விமர்சனத்தில் உருட்டி எடுக்கப்பட்டாலும், வசூலில் ஹிட். எனவே, இன்னும் அதிகமாக சம்பளம் கேட்கிறாராம் மதுபான நடிகர்! 

• இனிஷியல் இசையமைப்பாளரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்த இயக்குநர், அவரை ஹீரோவாக வைத்துப் படம் இயக்க, கால்ஷீட் கேட்டுப் போனாராம். `நான் ரொம்பப் பிஸி. 2 வருடம் கழிச்சு வர்றீங்களா?' என ஷாக் கொடுத்து அனுப்பிவிட்டாராம் இனிஷியல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism