Published:Updated:

கானுயிர்க் காதலி!

கானுயிர்க் காதலி!
பிரீமியம் ஸ்டோரி
கானுயிர்க் காதலி!

கானுயிர்க் காதலி!

கானுயிர்க் காதலி!

கானுயிர்க் காதலி!

Published:Updated:
கானுயிர்க் காதலி!
பிரீமியம் ஸ்டோரி
கானுயிர்க் காதலி!

“ஒரு இடத்துக்குப் போறதுக்கு யார்கிட்டயும் அட்ரஸ் கேட்காம நம்மளால போக முடியல. ஆனா ஒவ்வொரு வருஷமும் ரஷ்யாவில இருந்து எந்த ஜிபிஎஸ் மேப்பும் இல்லாம பறவைகள் இந்தியா வருதுங்க.  மனிதப்பிறவிதான் எல்லாத்துலயும் உயர்ந்ததுனு நாம நெனச்சுக்கிட்டு இருக்கோம். ஐந்தறிவுனு சொல்லிட்டு இருக்கிற இந்தப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கோபமும் இருக்கு, பாசமும் இருக்கு, நம்மளவிட அதிகமாவே அதுங்களுக்குள்ள ஒற்றுமையும் இருக்கு!'' - உற்சாகமாகப் பேசுகிறார் ராதிகா ராமசாமி. இந்தியக்காடுகளில் வலம்வரும் நம்ம ஊர் தேனி பெண். தற்போது டெல்லியில் வசித்துவரும் இவர் இந்தியாவின் முதல் பெண் கானுயிர் புகைப்படகலைஞர் (wildlife photographer). இவர் எடுத்த புகைப்படம் ஒன்றை wwf (world wild fund )நிறுவனம் 2017ம் ஆண்டுக்கான காலண்டரில் அட்டைப்படமாக அலங்கரிக்க உள்ளது.

கானுயிர்க் காதலி!

“படிச்சது இன்ஜினீயரிங், சின்னவயசுல இருந்தே கேமராவும் கையுமாதான் இருப்பேன். 2004க்குப் பிறகுதான் முழுநேரமா கேமராவோடு சுத்த ஆரம்பிச்சேன். பறவைகளோடும் விலங்களோடும் பயணிப்பது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்குப் போயிருக்கிறேன். தமிழ்நாட்டுல வால்பாறை ரொம்பப் பிடிக்கும். இந்த வேலையில ஆண், பெண் எனத் தனித்தனியாக சவால்கள் எதுவும் இல்லை. சவால்கள் எல்லோருக்கும் பொதுதான்!

இந்த வேலைனு இல்ல, எந்த வேலையா இருந்தாலும் வேலைனு நெனைச்சு செய்யாம, காதலிச்சுப் பண்ணினாத்தான் திருப்தியா செய்ய முடியும்.

இந்தப் பயணத்துல கத்துக்கிட்டது ஒண்ணுதான். இயற்கையை நாம நேசிச்சா இயற்கை நம்மை நேசிக்கும். இந்தக் காடுகளையும்  உயிரினங்களையும் சார்ந்துதான் நாம இருக்கோம். நம்மள நம்பி இயற்கை கிடையாது... காடுகள் நல்லா இருந்தாத்தான் நாம நல்லா இருக்க முடியும்.'' புன்னகையில் மிளிர்கிறார் ராதிகா ராமசாமி!

தன் மனதுக்கு நெருக்கமான சில புகைப்படங்களை, அதன் நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கானுயிர்க் காதலி!

சர்ப்ரைஸ் சந்திப்பு: ``அது ஒரு டிசம்பர் குளிர்காலம். புலி பார்க்கப் போகலாம்னு ஜிம்கர்னெட் பார்க் போயிருந்தோம். மூணு நாளா புலி கண்ணுலயே படல. சரி அவ்வளவுதான் போல நமக்கு கெடைச்சதுனு கிளம்பப் போறப்ப ஒரு ஓடை மறைவிலிருந்து புலி வர ஆரம்பிச்சது. அந்தப் புலிக்கு இணையாக மானும் நின்னுட்டு இருந்துச்சு. எப்படியும் மான் வேட்டை இருக்கும்னு காத்துக்கிட்டே இருந்தேன். ஆனா புலி அப்படியேதான் நின்னுச்சு. இப்படி எதிரும்புதிருமான இரு விலங்குகளை ஒரே ஃப்ரேமுக்குள்ள கொண்டுவந்ததுக்காவே இந்த போட்டோ எனக்கு ரொம்ப ஸ்பெஷல்''

கானுயிர்க் காதலி!

எல்லைதாண்டிய பயங்கரவாதம்: ``பரத்பூர் காட்டில் எடுத்த படம் இது. டார்ட்டர்ஸ் பறவைகள் இவை. இந்தப் புகைப்படத்தைப் பார்ப்பதற்கு இரண்டு டார்ட்டர் பறவைகளும் சந்தோஷமா நடனமாடுவதைப் போலத்தான் இருக்கும். ஆனா இது அப்படி இல்லை. நாம சண்டை போட்டுக்குவோம்ல இது என்னோட ஏரியா அது உன்னோட ஏரியான்னு... அது மாதிரி ஆற்றில் மீன் வேட்டையின்போது இரண்டு டார்ட்டர் பறவைகளும் சண்டை போட்டுட்டு இருந்தப்போ எடுத்த போட்டோ இது. இந்த போட்டோதான் தற்போது wwfன் காலண்டருக்காகத் தேர்வாகியுள்ளது!''

கானுயிர்க் காதலி!

  தாயின் கோபம்:  ``குழந்தை வளர்ப்பு மனிதர்களுக்கு மட்டுமா? தாய்ப்பாசம் எல்லாருக்கும் பொதுவானதுதானே! இந்தப் பல்லிகள் சோம்பேறிகள்.இவை மரப்பொந்துகளில் உள்ள முட்டைகளைத்  திருடிக்கொள்பவை.ஒரு சாயங்கால நேரத்துல ஓடையில் குளித்துக்கொண்டிருந்த வாத்துகளைப் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் `சடசட'வென சத்தம் வந்ததைக் கேட்டு திரும்பிப் பார்த்தா, இந்தக்கிளி சண்டை போட்டுக்கிட்டு இருந்துச்சு. அதுஒரு தாயின் கோபம், ஆபத்திலிருந்து தன் பிள்ளைகளைக் காப்பாற்ற பெத்தவங்க எடுக்குற முயற்சி. இப்பச் சொல்லுங்க, மனுஷங்களைவிட இந்த உயிரனங்கள் எந்த விதத்துல குறைஞ்சு போயிட்டாங்க?''

கானுயிர்க் காதலி!

நண்பேண்டா: ``இந்தப் போட்டோவைப் பார்த்தா இரண்டு பறவைகளும் காதல்ல இருக்குற மாதிரி இருக்கும். ஆனா அது தான் இல்ல. இந்தப் போட்டோ மஹாராஷ்ட்ரால எடுத்தது. ஆந்தைகள் இரவுநேரத்துல மட்டும்தானே வெளில தெரியும். ஆனா குளிர்காலத்துல மரப் பொந்துகளில் இருக்கிற ஈரப்பதம் காரணமா வெளில வந்து குளிர்காய ஆரம்பிக்கும். தன்னைத்தானே சுத்தம் செஞ்சுக்கிறதைப் `ப்ரீச்சிங்'னு சொல்லுவாங்க. ஆனா யாராலயும் முழு உடம்பையும் தனக்குத்தானே சுத்தம் செஞ்சுக்க முடியாது இல்லையா? அதனால ஒரு ஆந்தை இன்னொரு ஆந்தைக்கு சுத்தம் செஞ்சுவிடும். நட்பு எல்லா உயிர்களிடத்திலும் இருக்கு!''

கானுயிர்க் காதலி!

`குட்டி' ராஜாங்கம்:  ``தன்னோட குட்டிக்கு தாய்ப்புலிதான் எல்லாமே பழக்கிக் கொடுக்கும். அதேநேரத்துல ஒரு புலிக்கும் இன்னொரு புலிக்கும் இடையே வசிப்பிடம் குறைஞ்சது இரண்டு கிலோமீட்டர்னு அதுவே எல்லை தீர்மானிச்சுக்கும். அதனால ஒரே நேரத்துல இப்பிடி சேர்த்துப் புலியைப் பார்க்கிறதுங்கிறது அபூர்வம். அதுவும் அவை ஆறுமாசக் குட்டிகள்! என்னோட ஃபேவரைட்!'' 

 - ந.புஹாரி ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism