Published:Updated:

‘ட்ரெண்ட்' பெட்டி!

‘ட்ரெண்ட்' பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
‘ட்ரெண்ட்' பெட்டி!

‘ட்ரெண்ட்' பெட்டி!

‘ட்ரெண்ட்' பெட்டி!

‘ட்ரெண்ட்' பெட்டி!

Published:Updated:
‘ட்ரெண்ட்' பெட்டி!
பிரீமியம் ஸ்டோரி
‘ட்ரெண்ட்' பெட்டி!
‘ட்ரெண்ட்' பெட்டி!

ஆஸ்கரில் விசாரணை!

சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான `விசாரணை' திரைப்படம் இந்தியா சார்பாகப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே தேசிய விருது, வெனிஸ் திரைப்பட விருது உள்பட ஏழு முக்கிய விருதுகளை வென்றுள்ள இத்திரைப்படம், ஆஸ்கரையும் வெல்லும் எனத் திரையுலகினர் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக #oscar #visaaranai போன்றவை தேசிய ட்ரெண்ட்டில் இடம்பிடித்தன. வெல்லட்டும் இன்னொரு ஆஸ்கர்!

‘ட்ரெண்ட்' பெட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெற்றி இயக்குநர்கள்!

இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அட்லி ஹிட் மேல் ஹிட் கொடுத்து கோலிவுட்டில் டாப் இயக்குநர்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இருவரும் தங்களது படங்களைப் பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கினாலும், தயாரிப்பாளர்களுக்குப் பெரும் லாபத்தையும் சம்பாதித்துத் தருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த வாரத்தில் தங்களது பிறந்தநாளைக் கொண்டாடினர். அப்புறமென்ன? பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சொன்ன வாழ்த்துகளால் #happybirthdayarmurugadoss #hbdtheriatlee ட்ரெண்ட்டில் இடம்பெற்றது. வாழ்த்துகள் ப்ரோஸ்!

‘ட்ரெண்ட்' பெட்டி!

இஸ்ரோவின் மற்றுமொரு சாதனை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, கடந்த வாரத்தில் இரு மகத்தான சாதனைகளைப் புரிந்துள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் மூலம் இந்தியாவின் மூன்று செயற்கைக்கோள்கள் உள்பட மொத்தம் எட்டுச் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய ராக்கெட் ஒன்று முதன்முதலாக இரண்டு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தியுள்ளது.  பி.எஸ்.எல்.வி. வரலாற்றில் மிக அதிக பயண நேரம் கொண்டதாகவும் இது அமைந்தது. இந்தச் சாதனைகளுக்காக குடியரசுத் தலைவர் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்ததில் #pslv35 #scatsat1 ஆகியவை ட்ரெண்டில் கலக்கின. சல்யூட்!

‘ட்ரெண்ட்' பெட்டி!

சிம்பு தாத்தா!

`அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' டைட்டிலுக்கேற்ப சிம்பு இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் இதில், அஸ்வின் தாத்தா என்ற கேரக்டரில் 60 வயதான முதியவர் வேடத்தில் சிம்பு நடிக்கிறார் என பெட்ரோல் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது படக்குழு. தாதாவாகவும், தாத்தாவாகவும் நடித்து சாதனையா? என ரசிகர்களும் மீம் வெறியர்களும் #strasashwinthaatha #ashwinthatha ஹேஷ் டேக்குகளில் அட்டகாசம் செய்தனர். இன்னொரு புறம் `அச்சம் என்பது மடமையடா' படத்தின் `தள்ளிப்போகாதே' பாடல் யூடியூபில் இரண்டு கோடி பார்வையாளர்களைக் கடந்து சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ளது. படம் எப்ப சார் சாதனை படைக்கும்?

‘ட்ரெண்ட்' பெட்டி!

அட! ஆச்சர்யக் காவலர்!

பெங்களூரு கிழக்கு மண்டலக் கூடுதல் காவல் ஆணையராகப் பதவி வகிப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஹரிசேகரன். காவிரிப் பிரச்னையில் பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியவர் இவர். ஆனால் வேறொரு காரணத்திற்காக இவரது பெயரான Hari shekaran ட்விட்டர் ட்ரெண்டில் இடம்பிடித்தது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாய் ஒன்று சாலையைக் கடப்பதற்காக, ஒரு ட்ராஃபிக் போலீஸ் உதவும் வீடியோவைப் பதிவிட்டார். ச்சே இப்படியும் போலீஸ் இருக்காங்களா? கிரேட்! என அந்த வீடியோ வைரலானது. இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால்... அந்த வீடியோ சென்னையில் பதிவானது என்பதுதான்! பார்றா!

‘ட்ரெண்ட்' பெட்டி!

அசத்தல் 500!

1932 -ம் ஆண்டு தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பயணம் தற்போது முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கான்பூரில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது 500-வது டெஸ்ட் போட்டியை விளையாடியது இந்தியா. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இது இந்திய அணி பெறும் 130-வது டெஸ்ட் வெற்றி ஆகும். டெஸ்ட் போட்டியில் வேகமாக 200-வது விக்கெட்டைக் கைப்பற்றிய இந்தியர் என்ற பெருமையை இதே போட்டியில் அஸ்வின் பெற்றார். சும்மாவே ஆடுவோம். 500-வது போட்டினா கேட்கவா வேணும்? டெஸ்ட் போட்டி நடந்த ஐந்து நாட்களும் #500thtest ட்ரெண்டில் முன்னிலை பெற்றது. கலக்கல்!

- ட்ரெண்டிங் பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism