Published:Updated:

``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''

``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''
பிரீமியம் ஸ்டோரி
``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''

``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''

``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''

``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''

Published:Updated:
``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''
பிரீமியம் ஸ்டோரி
``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''
``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''

`பில்லி, சூனியம் எல்லாம் பொய். எனக்கு பில்லி, சூனியம், ஏவல் மூலமாக பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்களுக்கு 50 லட்சம் பரிசு வழங்கப்படும்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதேநாளில் ஃபேஸ்புக் முதல் மீடியா வரை ரணகளப்பட்டுக்கொண்டிருந்த விஷயம் இது. `தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்’தின் அப்போதைய மாநிலத் தலைவர் பி.ஜெய்னுலாபிதீன் பில்லி, சூனியம் எல்லாமே பொய் என்பதை நிரூபிக்க இவ்வாறு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தச் சவாலை திருச்சி - சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டுப் பகுதியில் பூஜை செய்துவந்த `அகோரி' மணிகண்டன் ஏற்றுக்கொண்டதால் பரபரப்பு உண்டானது. 

01-08-2014-ல் தொடங்கி 17-09-2014 வரை 48 நாட்கள் அவருக்கு அவகாசமும் தரப்பட்டது. ஆனால் மணிகண்டன் சொன்ன எதுவும் நடக்கவில்லை. ஜெய்னுலாபிதீன் என்னை நேரில் சந்திக்காமல் ஒப்பந்தத்தை மீறியதால் சூனியம் பலிக்கவில்லை எனக் குற்றச்சாட்டும் வைத்தார்.
இரண்டு வருடங் களுக்குப் பிறகு, `இந்த அகோரி மணிகண்டன் என்ன ஆனார்?' எனத் தேடினேன். இங்கே மயானத்தில் சுற்றித் திரிந்தவர், இப்போது காசியில் பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே மண்டை ஓட்டு மாலையுடன் ரதத்தில் வலம் வருகிறார். ஃபேஸ்புக்கிலும் தன்னைப்பற்றி அவ்வப்போது அப்டேட்களைத் தெறிக்க விடுகிறார்.

``சவால்ல என்னதான் ஆச்சு?''


``சூனியம் இருக்கான்னு நிரூபிச்சா போதும்னு சொன்னாங்க. ஆனா, ஜெய்னுலாபிதீனைச் சந்திச்சப்போ `என்னைக் கொன்னாதான் சூனியம் இருக்குனு நம்புவேன்'னு சொல்லிட்டார். ஒரு மனுசனுக்குப் பிரச்னை இருந்துச்சுனா, அவங்களுக்கு ராத்திரி தூக்கம் வராது. கெட்ட கனவு வரும். சம்பந்தமில்லாம உடம்பு வலிக்கும். அப்படி பிரச்னையோட இருக்கிற ஒருத்தரைக் கூட்டிட்டு வாங்கனுதான் நான் சொன்னேன். அதை அவங்க பண்ணலை. நீங்களே இந்த மூணு பிரச்னையும் இருக்கிற யாரை வேணும்னாலும் கூட்டிக்கிட்டு வாங்களேன், இப்பவே சூனியம் உண்மைனு நிரூபிக்கிறேன்.'' (நான் ஏங்க நடுராத்திரி சுடுகாட்டுக்குப் போகணும்?)

``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சவாலுக்குப் பிறகு என்னாச்சு?''

``நான் தோத்துப் போயிட்டேன்னு சொன்னாங்க. உண்மையை விளக்கி போஸ்டர் ஒட்டினேன். அதைக் கிழிச்சாங்க. அதைப்பற்றி யாரும் செய்தி வெளியிடலை. செய்தியாளர்களைச் சந்திச்சு என் தரப்பு நியாயத்தைச் சொன்னேன். அந்தச் செய்தியும் இன்னைக்கு வரைக்கும் வெளியே வரலை. என் தரப்பு நியாயம் வெளியே தெரியாம போச்சு.''

``சூனியத்தை நிரூபிக்க மறுபடியும் 48 நாட்கள் அவகாசம் கேட்டீங்க. ஆனா ஒண்ணும் நடக்கலையே?''


``நான் 48 நாள் கேட்கலைங்க. ஒரேயொரு நாள் அவரை நான் நேரடியா பார்த்துட்டா போதும்ங்க. எனக்காக ஒரு மணிநேரம் ஒதுக்கமாட்டாரா? எல்லா பத்திரிகையாளர்களுக்கு முன்னாடியே சூனியத்தை நிரூபிச்சுக்காட்டுறேன்!'' (மறுபடியும் முதல்ல இருந்தா?)

``ஆயிரம் அகோரிகளைத் தமிழ்நாட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்து திருச்சியில் கும்பமேளா நடத்துவது, 108 காளி கோவில்கள் கட்டுறதுனு நீங்க அறிவிச்ச திட்டங்கள்?"


``அடுத்தமாசம் தமிழ்நாட்டுக்கு வந்துடுவேன். நவராத்திரி பூஜைக்காக இங்கிருந்து அகோரிகளும் என்கூட வர்றாங்க. முதலில் பத்துப் பேரைக் கூட்டி வருவேன். அவங்களை முதல்ல சமாளிக்க முடியுமான்னு பார்ப்போம். அப்புறம்தான் ஆயிரம் பேரை அழைச்சுட்டு வரணும். தமிழ்நாட்டுக் கலாசாரம் வேற இங்கே உள்ள கலாசாரம் வேற. அதனால திடுதிப்புன்னு கூட்டிவந்தா, அவங்களுக்கும் கஷ்டம், நமக்கும் கஷ்டம்!'' (இப்படி இருந்தா, ரொம்பக் கஷ்டம்!)

``அகோரிகளை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்!''

``பில்லி, சூனியம் மூலமா நல்லது பண்ணமுடியாதா?''

``பில்லி, சூனியம் கெட்டதை அழிக்கத்தானே வெச்சிருக்கோம். கெட்டதை உருவாக்கப் பயன்படுத்துறதில்லை. அகோரிகள் எல்லாம் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவங்க. தப்பு செஞ்சான்னா அவனை அழிக்கலாம். தேவையில்லாம ஒரு குடும்பத்தை அழிக்கக் கூடாது. ஒரு குடும்பம் கஷ்டப்படணும்னு இன்னொருத்தன் அந்தக் குடும்பத்துக்குக் கெட்டது பண்ணியிருக்கான்னா அதை அழிக்கிற சக்தி எங்களுக்கு உண்டு. ரெளடி அருவாளோட வரும்போது போலீஸ் குச்சியோட போனா என்னாகும்? அந்தமாதிரி. இப்போ, போலீஸ் துப்பாக்கி வெச்சிருக்காங்க. அதுக்காக, அவங்களைக் கெட்டவங்கனு சொல்லிடமுடியுமா? அதுமாதிரிதான், அசுரசக்தியை அழிக்கிறதுக்காக நாங்க மண்டை ஓட்டைக் கையில வெச்சிருக்கோம்!''

``ஆக, பில்லி சூனியம் எல்லாம் பொய்னு ஒத்துக்கமாட்டீங்க?''


``ஒத்துக்கவே மாட்டேன். ஒருத்தரைத் தொடாமலே இதை நிரூபிக்க நான் ரெடி. எந்த மதத்தைச் சேர்ந்தவரா இருந்தாலும் சரி. உடையைத் தவிர உடம்பில் வேற எந்த ஆபரணமோ, உலோகமோ, கயிறோ அணியாத ஒருத்தரை ஓம்காரத்துல நிப்பாட்டி, அவங்க சாமியை நினைக்கச் சொல்வோம். உதாரணத்துக்கு ராமசாமிங்கிற ஒருத்தரை நிப்பாட்டினோம்னு வெச்சுக்கோங்களேன்... அவரே, `நான்தான்டா முனியாண்டி வந்திருக்கேன்'னு அவரை அறியாமலே சொன்னாருன்னா...  நம்புவீங்கல்ல?''

சாமி கேட்குறார்ல சொல்லுங்க பாஸ்... நம்புவீங்கள்ல?

- கருப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism