Published:Updated:

றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!
பிரீமியம் ஸ்டோரி
றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

ஹேப்பி ஷாப்பிங்!தொகுப்பு: செ.சங்கீதா படங்கள்: க.மணிவண்ணன்

றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

ஹேப்பி ஷாப்பிங்!தொகுப்பு: செ.சங்கீதா படங்கள்: க.மணிவண்ணன்

Published:Updated:
றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!
பிரீமியம் ஸ்டோரி
றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

தினசரி பயன்பாட்டுக்கான மிதிவண்டிகள்

றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

காஸ்மிக் கலர்ஸ் ரெட் - ரூ.4,222

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விண்கலம் ஏறி விண்ணிலே வலம் வரும் வாய்ப்பும் இன்றைய பெண்களுக்கு உண்டு. எனினும், எல்லா பெண்களும் முதன்முதலாக பறக்கப் பயில்வது என்னவோ சைக்கிளில்தானே? இடம் விட்டு இடம் நகர எளிதில் வாய்ப்பளிக்கும் வாகனம் என்பதையும் தாண்டி, ஓர் உடற்பயிற்சி வாகனமாகவும் மாறியிருக்கிறது சைக்கிள். அதோடு, மோட்டார் சைக்கிள்களோடு போட்டி போடும் அளவுக்கு சைக்கிள்களும் ஸ்டைலாகவும் ஸ்மார்ட்டாகவும் மாறி வருகின்றன. பல நூறு பயன்களை அள்ளித்தரும் லேட்டஸ்ட் சைக்கிள்களின் ஊர்வலம் இதோ ஆரம்பம்!

 
காஸ்மிக் கலர்ஸ் ரெட்

கல்லூரி மாணவிகளுக்கு ஏற்ற வகையில், முன்புறம் பேக் வைக்க அழகிய ஸ்டீல் கேரியருடன் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் காட்சியளிக்கிறது காஸ்மிக் கலர்ஸ் சைக்கிள். 5 கி.மீ. வரை சட்டென செல்ல இதுதான் ஃபிட்.

ஓரம்போ... ஓரம்போ... ருக்குமணி வண்டி வருது!

ஹீரோ மிஸ் இந்தியா

றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

உயரத்துக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் ஹீரோ மிஸ் இந்தியா சைக்கிளில் ஏறும் அனைத்து பெண்களும் மிஸ் இந்தியாக்கள்தான்! பின் இருக்கையில் நட்புக்கும் இடம் கொடுத்து ஊர் சுற்றலாம். தினசரி உபயோகத்துக்குப் பயன்படுத்தியே சைக்கிளுடன் நட்பாகிவிடலாம்.

புறாவுக்கே பெல் அடிப்போம்ல!

காஸ்மிக் கலர்ஸ் பிங்க்

றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

பெண்கள் என்றாலே நினைவுக்கு வரும் பிங்க் கலர் காஸ்மிக் கவனம் ஈர்க்கிற சைக்கிள். பக்கத்துக் கடை என்றாலும், பக்கத்து ஊர் என்றாலும் சைக்கிளை எடுத்துச் சிட்டெனப் பறக்கலாம். வசதியான பயணத்துக்காக பிவிசி இருக்கையுடன் காத்திருக்கிறது வண்டி.

இந்த டூ-வீலருக்கு ஹெல்மெட் தேவை யில்லை மக்களே!

சைக்கிள் அழுத்தினால் கால்வலி போகும்’ என்ற காலம் போய் ‘கால்வலிக்காக சைக்கிள் வாங்கும் கால’த்தில் தத்தளிக்கிறோம். இனி வரும் சைக்கிள்கள்... பயண விரும்பிகளுக்கும் உடற்பயிற்சியை உயிராக நினைக்கும் ஃபிட்னஸ் பிரியர்களுக்குமான அதிவேக மிதிவண்டிகள். முக்கியமாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக... இதை மிடில் ஏஜ் மக்கள் பயன்படுத்தக் காரணம் உடலை வலிமைப்படுத்தவும் மனதை மகிழ்ச்சிப்படுத்தவும்தான். இவ்வகை சைக்கிள்களில் லாங் ட்ரைவ் கூட லாவகமாகச் செய்யலாம்.

லேடிபேர்டு பிரீஸ்

றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

பிஎஸ்ஏ நிறுவனத்தின் மேலும் ஓர் அழகிய படைப்பு லேடிபேர்டு பிரீஸ். `பளிச்’ வண்ணங்களில் பளபளக்கும் இந்த சைக்கிள், அந்தக் காலத்திலிருந்தே பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆல் டைம் ஃபேவரைட். பிரீஸில் பறந்தால் `என்றும் பதினாறு’ ஃபீலிங்தான்.

சைக்கிளுக்கு வாடகை எப்போ தருவ? திரும்ப விடும்போது! தருவேயில்ல... ஏமாத்தப்பிடாது!

ஃபயர்பாக்ஸ் டெய்ல்விண்ட்

றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

இயற்கை எழிலை ரசித்தவாறே பயணம் செய்ய விரும்பும் உங்களுக்கான வண்டி இது. மண் ரோடுகளையும், காடு மலைகளையும் சகதிகளையும் தாங்கும் வலுவான டயர் கொண்டிருக்கிறது. அட்வென்ஜருக்குத் தயாரா?


சைக்கிள்லேயே அமெரிக்கா போலாமா..? ஆனா, பெட்ரோல் நீங்கதான் போடணும்!

மவுன்டைன் சைக்கிள்

றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

உங்கள் பட்டாளத்துடன் வாரத்தின் இறுதி நாட்களைக் கழிக்க வேண்டுமா? அதுவும் உடலுக்கு நன்மை தரும் வகையில் வேண்டுமா? எடுங்கள் மவுன்டைன் சைக்கிளை! உடற்பயிற்சி நண்பனாகவே மாறிவிடும் இது. அதோடு, இனியவர்களுடன் இயலும் வரை ஜாலி ரைடு செல்லலாம்!

இது சைக்கிளா... இல்ல, வரிக்குதிரையா? இந்த வேகம் போகுது!

ஃபயர்பாக்ஸ் கர்மா

றெக்க கட்டி பறக்குது யூத் சைக்கிள்!

ஒலிம்பிக் வீராங்கனைகளை உருவாக்கக் காத்திருக்கிறது ஸ்லிம் டயர் ஃபயர்பாக்ஸ் கர்மா சைக்கிள்ஸ். அலாய் பாடி... லைட் வெயிட்... வண்டியை ஓட்டுவது போலவே தெரியாது. ஆகவே, அடுத்த நான்கு ஆண்டுகளில் நீங்களும் ஆகலாம் சிந்து!

ஏ... வருது வருது... நீ விலகு விலகு!

மாடல்:மு.கௌதமி

சைக்கிள் உதவி: Just buy cycles, ஆர்.எஸ் புரம், கோவை-2.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism