Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

‘’ஃபாஸ்ட் ஃபுட் உலகம்ல... அதான் அதுலயும் ஃபாஸ்ட்!”

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

‘’ஃபாஸ்ட் ஃபுட் உலகம்ல... அதான் அதுலயும் ஃபாஸ்ட்!”

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

‘‘அனுஷா... என்னடி தனியா சிரிச்சுட்டு இருக்கே!”

‘‘ம்... அஸ்ட்ராலஜி பார்த்துட்டு இருக்கேன்!”

‘‘மொபைல கையில வெச்சுக்கிட்டு அஸ்ட்ரா லஜியா?!”

“யெஸ். இது கொஞ்சம் டெக்னலாஜிக்கல் விளையாட்டு. ஆன்லைன் இன்ட்ராக்‌ஷன் ஒண்ணுல கலந்துகிட்டேன். அதுல நாம யூஸ் பண்ற கேட்ஜெட்ஸ் வெச்சு நாம அஜித், விஜய், ரஜினினு... யாருக்கு மேட்ச் ஆகுறோம்னு சொல்றாங்க!”

‘‘கைரேகை பார்த்து, நாடி பிடிச்சு ஜோசியம் சொல்றதுதான் வழக்கம். இது என்னம்மா புதுசா இருக்கு?!”

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

‘‘நான் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவீங்களா ரெண்டு பேரும்?! இது ஜஸ்ட் ஒரு கேட்ஜெட் இன்ட்ராக்‌ஷன் கேம். கேட்ஜெட்ஸ் பத்தி சும்மா ஜாலியா தெரிஞ்சுக்கத்தான் இந்த கேம். நீங்க கேக்கிறதுக்குள்ள நானே ஷேர் பண்ணிட்டேன். டோன்ட் ஸ்கோல்டு மீ செல்லம்ஸ்!”

‘‘ஆனாலும், இந்த அனுஷா கையில போன் இருந்தா போதும்... அம்பால குறிபார்க்கும்போது அர்ஜுனனுக்கு கிளியோட கண்ணு மட்டும் தெரிஞ்ச மாதிரி, உலகமே சுத்தி நின்னாலும் அவ கண்ணுக்கு அந்த போன் மட்டும்தான் தெரியுது. யூஸ்லெஸ் ஃபெலோ!’’

‘‘நான் மொபைல் அடிக்ட்னு சொல்றதுக்கு புராணம், இதிகாசத்தை எல்லாம் ஏன் இழுக்குறே இனியா? நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் வெட்டி இல்ல. ஃப்ரீ டைம்ல யூஸ் அண்ட் த்ரோ கப் வெச்சு தோரணம் செஞ்சிருக்கேன் தெரியுமா?”

‘‘ஒரு நிமிஷம் இரு... நாங்க ரெண்டு பேரும் கிள்ளிப் பாத்துக்கிறோம். எப்டி இதெல்லாம்?!”

‘‘அதுவும் கேட்ஜெட்ஸ் பாக்கியத்துல கிடைச்ச ஐடியாதான். இந்திராணி பாட்டியைப் பத்தி ஆன்லைன்ல படிச்சேன். அப்பதான் என் சோம்பேறித்தனம் சுருக்குனு குத்துச்சு. டக்குனு பண்ணிப் பாத்தேன். சக்சஸ். உங்களுக்கும் லிங்க் அனுப்புறேன். சுறுசுறுப்பா இருங்க ஃப்ரெண்ட்ஸ்!’’
‘‘என்ன இன்னைக்கு இந்த அனுஷா பொண்ணு ஓவர் ஸ்மார்ட்டாகி நம்மளை போட்டுத் தாக்கிட்டு இருக்கா?”

‘‘ஆதிரா... அவ ஸ்மார்ட்னு ஸீன் போட்டுட்டே இருக்கட்டும். என் மொபைல்ல இந்த போட்டோஸ்லாம் பாரு... இதுல இருக்கிறது யாருனு சொல்லு பார்ப்போம்!”

‘‘ஹேய்... இந்தப் பொண்ணை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே இனியா!”

‘‘என் சித்திப் பொண்ணு மைத்ரா!”

‘‘அவளா இவ?! ரெண்டு வருஷத்துக்கு முன்ன பார்த்தது... அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டாளா?”

‘‘வளர்ந்துட்டா... ‘வந்துட்டா.’ ’’

‘‘ஓ! ஆமாப்பா... இப்போ எல்லாம் கேர்ள்ஸ் ரொம்ப சீக்கிரமே ஏஜ் அட்டெய்ன் பண்ணிடறாங்கள்ல?”

‘‘ஃபாஸ்ட் ஃபுட் உலகம்ல... அதான் அதுலயும் ஃபாஸ்ட்!”

‘‘சாப்பாட்டுக்கும் ப்யூபர்ட்டிக்கும் என்ன சம்பந்தம் ஆதிரா?”

“சம்பந்தம் இருக்கு! இந்த ஆர்ட்டிகிள படி... அதைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்குவே!”

‘‘ஆமா இனியா... நான்கூட அந்த ஆர்ட்டிகிளை படிச்சுட்டேன். மிஸ் பண்ணாம நீயும் படி. சாப்பாடு, பழக்கவழக்கம்னு சின்னச் சின்ன மாற்றங்கள் நம்ம ஹெல்த்துக்கு ரொம்ப முக்கியம்.”

‘‘ஹெல்த் வேணும்தான். ஆனா, இப்போ எனக்கு கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் வேணும். சினிமா சாட் ஆரம்பிக்கலாமா?”

‘‘நான் ‘ரெமோ’ ட்ரெய்லர் பார்த்து அசந்துட்டேன்மா. வெயிட்டிங் ஃபார் ரெமோ!”

“யெஸ் யெஸ். இந்த சிவகார்த்தியேன்... சான்ஸே இல்ல! லவ் யூ டா பேபி!”

‘‘அனுஷா... மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டே!”

“ஈஈஈஈஈ!”

- கச்சேரி களைகட்டும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

திவிரைவில் பூப்படையும் சிறுமிகள்! பெற்றோர்கள் கவனத்துக்கு!
http://bit.ly/2cDrquI

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

ஜித்,விஜய், ரஜினி...கேட்ஜெட்ஸ் விஷயத்தில் நீங்கள் யார்?
http://bit.ly/2dbYk2S

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

யூஸ் அண்ட் த்ரோ பொருட்கள் கொண்டு கலக்கும் இந்திராணி பாட்டி சூப்பர்ல!
http://bit.ly/2dbVrzo

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

ச்சச்சோ பாத்துட்டா...பாத்துட்டா..! ரெமோ ட்ரெய்லருக்கு!
http://bit.ly/2cCQaEw

அனுஷா... ஆதிரா... இனியா! - டிஜிட்டல் கச்சேரி

சத்தலான செய்திகளையும் வீடியோக் களையும் படித்துப் பார்த்து மகிழ
www.vikatan.com என்னும் விகடன் இணைய தள முகவரியை தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

ந்த இதழில் வெளியாகியுள்ள `டிடி’ - அவள் வாசகிகள் சந்திப்பை வீடியோவாக youtube.com/cinemavikatan-ல் காணலாம்.

`மாற்றம்’ விவாத நிகழ்வை வீடியோவாக www.vikatan.com-ல் காணலாம்.