Published:Updated:

உள்வாங்கிய தரை..! இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவர்..! மயிலாடுதுறையில் பரபரப்பு

உள்வாங்கிய தரை..! இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவர்..! மயிலாடுதுறையில் பரபரப்பு
உள்வாங்கிய தரை..! இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவர்..! மயிலாடுதுறையில் பரபரப்பு

Building Damage

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள எலந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நஜிமுன்னிசா. இவருக்குச் சொந்தமான மயிலாடுதுறை-திருவாரூர் மெயின் ரோட்டில் அகரகீரங்குடி என்ற ஊரில் ~எல்லோ காம்ளக்ஸ்’ என்ற பில்டிங் இருந்தது. இங்கு நிகழ இருந்த விபத்து முன்கூட்டியே உணரப்பட்டதால் உயிர்ச் சேதம் இல்லாமல் அனைவரும் தப்பியுள்ளனர்.  

5 வீடுகள், 2 கடைகள் கொண்ட கட்டடத்தில் என்ன நடந்தது என்பதை விசாரித்தோம், ``வயலை தூர்த்து இந்த மாடிக் கட்டடத்தை உருவாக்கியுள்ளனர். மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து நிற்கும். இதனால்தான் வீட்டின் அஸ்திவாரம் வீணாகிப் போயிருக்கும் எனத் தெரிகிறது. கனரக வாகனங்கள் ரோட்டில் சென்றாலே வீடே அதிரும். இதுபற்றி வீட்டின் உரிமையாளரிடம் நாங்கள் ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அவர் வெளிநாட்டில் பணிபுரிவதால் நான் வந்து சரிசெய்கிறேன் என்று கூறினார்.  

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 12.00 மணியளவில் கீழ்தளத்தில் வசித்த எங்களுக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டது. தரை உள்வாங்கியது. காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. அதில் ஒரு டூவீலர் சிக்கி உடைந்துபோனது. பயந்துபோன நாங்கள், எல்லோருக்கும் தகவல் சொல்லி இந்தக் கட்டடம் ஏதோ ஆகப்போகிறது, வெளியேறிவிடுவோம் என்று வீட்டின் உடைமைகளை வெளியே கொண்டுவர ஆரம்பித்தோம். விடியற்காலை தீயணைப்புத் துறைக்குத் தகவல் தந்தோம்.

அவர்கள் வந்து பார்வையிட்டு இந்த வீட்டின் அஸ்திவாரம் பழுதாகிப்போனதால், பில்டிங் இடிந்துவிழும் நிலையில் இருக்கிறது என்று கூறினார்கள். அதன்பின், மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன், வட்டாட்சியர் விஜயராகவன் ஆகியோர் வந்து பார்வையிட்டு, நாகையில் உள்ள கட்டட உறுதித்தன்மை பாதுகாப்புப் பிரிவுக்குப் பரிந்துரை செய்கிறோம். அவர்கள் பார்வையிட்ட பிறகு இக்கட்டடம் வசிப்பதற்கு ஏற்றதா? இல்லையா? என்பதை அறிவிப்பார்கள். அதன்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். நாங்கள் தற்போது, வேறு இடங்களைத் தேர்வுசெய்து குடிபெயர்கிறோம். நாங்கள் உயிர் பிழைத்தது இறைவன் அருளால்” என்றனர். 

அடுத்த கட்டுரைக்கு