Published:Updated:

கிராண்டான ஆடைகள், நகைகள்... இனி வாடகைக்கு எடுக்கலாம்!

''இந்த ரெண்டல் உங்களை பலவித லுக்கில் காட்டி அசத்துவதுடன் பணத்தையும் சேமிக்கும்'

கிராண்டான ஆடைகள், நகைகள்... இனி வாடகைக்கு எடுக்கலாம்!
கிராண்டான ஆடைகள், நகைகள்... இனி வாடகைக்கு எடுக்கலாம்!

பெண்கள் பலருக்கும் தங்கள் ஆடையின் மீது அதிக அக்கறை இருக்கும். என்னதான் விதவிதமான ஆடைகளை வாங்கி அணிந்தாலும், 'தொலைக்காட்சியில் வரும் அந்த நடிகை அணிந்திருப்பதுபோல இல்லையே' எனப் புலம்புபவர்கள் அதிகம். 'அந்த நிகழ்ச்சிக்கு அப்படி ஆடை அணியணும்; இந்த நிகழ்ச்சிக்கு இப்படி ஆடை அணியணும்' என அதிக விலையில் நாம் எடுக்கும் ஆடைகள், அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, வார்ட்ரோப்பில் அலங்காரமாக மட்டுமே தொங்கிக்கொண்டிருக்கும்.

'அப்போ, நிகழ்ச்சிக்கு எப்படித்தாங்க கிராண்டா ரெடி ஆகறது?' என்ற உங்க மைண்ட் வாய்ஸுக்கு விடை தரவே அறிமுகமாகிறது, டிசைனர் ரென்டல் ஆடைகள். 

''இந்த ரெண்டல் உங்களை பலவித லுக்கில் காட்டி அசத்துவதுடன் பணத்தையும் சேமிக்கும்'' என்கிறார், ஆன்லைன் மூலம் ஆடைகளை வாடகைக்குத் தரும் 'லிபரென்ட்' (liberent)  நிறுவனத்தின் உரிமையாளர், சயுஜ்யா ஸ்ரீநிவாஸ். இந்த ரென்டல் ஆடைகள் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

''நான் மதுரையில் பிறந்த மிடில் கிளாஸ் பொண்ணு. பலரை மாதிரி ஷாப்பிங் பண்ணும்போதெல்லாம் எனக்கும் கிராண்டான ஆடைகளைப் பார்த்து ஆசையா இருக்கும். பட்ஜெட் பிரச்னையால் அரை மனசோடு விட்டுட்டு வருவேன். இன்ஜீனியரிங் முடிச்சதும், ஒரிசாவின் தனியார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால், எனக்குச் சுயதொழில் செய்யவே ஆர்வம். நிறைய ஐடியா பண்ணி, கடைசியில் ஆடைகளை வாடகைக்கு விடும் தொழிலில் இறங்கினேன்'' என அறிமுகப் புன்னகையுடன் தொடர்கிறார் சயுஜ்யா ஶ்ரீநிவாஸ்.

''இது ஆன்லைன் பிஸினஸ்தான். ஆனால், இதில் வாடிக்கையாளருக்குச் சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்கும். நிறைய ஸ்டைலிஸ்கள், டிசைனர்களை என்னுடைய லிபரென்ட் பக்கத்தில் இணைச்சிருக்கேன். வாடிக்கையாளர்கள் பிஸினஸ் பக்கத்துக்குள் வந்து, விரும்பிய ஆடைகளைத் தேர்வுசெய்யலாம். திருமணம், பார்ட்டி, ப்ரீ வெட்டிங் போட்டோ சூட்டுக்கு என நிறையப் பிரிவுகளின் கீழ் ஆடைகள் வடிவமைக்கப்பட்டு, தனித்தனியாக பார்வைக்கு இருக்கும். அதில், தேவையானதைத் தேர்வுசெய்யலாம். சில வாடிக்கையாளர்களுக்கு எந்த மாதிரியான ஆடைகள், தங்களுக்குப் பொருத்தமாக இருக்கும், எந்த நிகழ்ச்சிக்கு எந்த ஆடையைத் தேர்வுசெய்யறது எனக் குழப்பம் இருக்கும். அவங்களுக்காக, லைவ் சேட் வசதியும் இருக்கு. அதைப் பயன்படுத்தி, எங்களின் ஸ்டைலிஸ்டிடமோ அல்லது டிசைனரிடமோ ஆலோசனை கேட்கலாம்.

எங்கள் ஆன்லைன் பக்கத்தில் நாங்கள் வெளியிட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆடையில், எந்த ஆடையை வேண்டுமானாலும் தேர்வுசெய்யலாம். அவர்களின் உயரம், அளவுக்கு ஏற்ப மாற்றியமைத்து அவர்களின் முகவரியில் டெலிவரி செய்வோம். ஆடைக்கு ஏற்ற அணிகலன்களையும் எங்களிடம் தேர்வுசெய்யலாம். சிலருக்கு, 'வாடகை ஆடை அணிந்தால் அலர்ஜி வருமோ?' என்ற பயமும் சந்தேகமுமிருக்கும். நாங்கள் ஒவ்வோர் ஆடையையும் வெந்நீர், ஆன்டி-செப்டிக் லோசன்கள் பயன்படுத்தி துவைத்தே கொடுக்கறோம்'' என்கிறார் சயுஜ்யா ஶ்ரீநிவாஸ்.

எந்த நிகழ்ச்சிக்கு என்ன மாதிரியான ஆடைகளை வாடகைக்கு எடுக்கலாம் எனச் சொல்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டைலீஷ், தீப்தி.

நிறையப் பெண்கள் புதுசா என்ன ட்ரண்ட் வந்திருக்கோ, அந்த டிரஸ்ஸையே எல்லா நிகழ்ச்சிக்கும் பயன்படுத்தறாங்க. அப்படி இல்லாமல், நிகழ்ச்சிக்குத் தகுந்த மாதிரி அணிந்தால், பெர்பெக்ட் லுக்கில் கலக்கலாம்.

பார்டிக்கு: பாடி காஸ் ஆடைகள், ஸ்லிட் வைத்த ஆடைகள், டபுள் ஷேடட் டிரஸ்கள், லாங் கவுன் அணிந்து சிம்பிலான நகை அணியலாம்.

திருமணத்துக்கு: டார்க் கலர் வெட்டிங் கவுன்ஸ் அணிந்து வொயிட் கோல்ட் அணிகலன்கள் அணியலாம். கொஞ்சம் டிரடிஷனலான ஆடை அணிய விரும்புபவர்கள், பட்டுப்புடவை அணிந்து, அதற்கு கான்ட்ராஸ்டான கலரில், லாங் ஸ்லிவ் டிசைனர் பிளவுஸ் அணியலாம். அல்லது லெஹெங்கா அணிந்து டிசைனர் அணிகலன்கள் அணியலாம்.

மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு: மைல்டு கலர் ஆடைகள்தான் எப்பவும் பெஸ்ட். மேலும், அதற்கு ஏற்ப வொயிட் ஸ்டோன் பதித்த சிம்பிள் அணிகலன்களை அணியலாம்.

அலுவலகத்துக்கு: காட்டன் குர்தி, பலோஸோ பேன்ட்- கிராப் டாப், காட்டன் சர்ட் -பேன்ட் போன்றவை அலுவலகத்துக்கு அழகு சாய்ஸ்.