Published:Updated:

‘எல் போர்டு’ சாமியார்!

‘எல் போர்டு’ சாமியார்!
பிரீமியம் ஸ்டோரி
‘எல் போர்டு’ சாமியார்!

‘எல் போர்டு’ சாமியார்!

‘எல் போர்டு’ சாமியார்!

‘எல் போர்டு’ சாமியார்!

Published:Updated:
‘எல் போர்டு’ சாமியார்!
பிரீமியம் ஸ்டோரி
‘எல் போர்டு’ சாமியார்!

சுருட்டு சாமியார், பீடி சாமியார் தெரியும்.... எல் போர்டு சாமியார் தெரியுமா? ‘நான் இன்னும் முழுமையான சாமியாரா மாறவில்லை’ என்று தனது கழுத்தில் `L போர்டு' வாசகத்தை மாட்டிக்கொண்டு திரிந்து, தஞ்சை மக்களை `கெக்கேபிக்கே' என்று சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதோடு விட்டாறென்றாலும் பரவாயில்லை, மனிதர் தனது கையில் சதா சர்வகாலமும் ஒரு விசிறியை வைத்துக் கொண்டு, தஞ்சைக்கு வரும் அரசியல் தலைவர்களுக்கு மேடையில் வைத்து விசிறிவிட்டு, `என் அப்பன் முருகனின் அருள் காற்று உங்க மீது படட்டும்’ என்று அவர்களை வைத்து ‘சிரிச்சா போச்சு’ ரவுண்ட் நடத்திக்கொண்டிருக்கிறார். சாமியாரின் பெயரும் முருகன்தான்.

‘எல் போர்டு’ சாமியார்!

தஞ்சை ராணிவாய்க்கால் தெருவில் வாசம்புரியும் விசிறி சாமியாரை சந்தித்தேன். கடந்த ஒரு வருடமாக, மதுவிலக்கு அமலுக்கு வர வேண்டி அறுபடை வீடுடையானான முருகனை வேண்டி மௌன விரதம் இருந்து வருகிறாராம் (அட ராமா, இது வேறயா?!). ‘எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது’ என்ற குணா கமல் கணக்காக, `விஷயத்தைச் சொல்ல நினைக்கையில் மௌன விரதம் தடுக்குது’ என்று தனது சாமியார் வாச வரலாற்றை(?!) பேப்பரில் எழுதிக் கொடுத்தார்.

“முருகனின் பக்தர்ங்கிறதைத் தவிர பெருசா நமக்கு ஒண்ணும் வரலாறு இல்லை தம்பி. எனக்கு மகேஸ்வரிங்கிற மனைவி இருக்காங்க. இரண்டு பையன்கள், இரண்டு பொண்ணுங்கன்னு மாவோசி மரவோசியா குடும்பம் நடத்துற ஆள் நான். சிற்பம் செய்றது, கலசம், தஞ்சாவூர் கலை தட்டுக்கள் செய்றதுன்னு பொழப்பைப் பார்த்துதான் குடும்பத்தை ஓட்டுறேன். என் அப்பன் முருகன் என்னைத் தனது ஏஜெண்டாக நியமித்ததால நான் சாமியாரா இருக்கேனேயொழிய, ஊரை ஏய்ச்சு உலையில போட இல்லை” என்று காமெடி பாதி சீரியஸ் மீதியுமாக தொடங்கியிருந்தவர், தன்னைப் பற்றி மேற்கொண்டு எழுதியிருந்தவை பின்வருமாறு...

“கடந்த 2000 வருடம் வரை நான் சாதாரண நபர்தான். ஆனால், முருகன் மீது ஈடுபாடு உண்டு. இந்தச் சூழலில்தான், திடீரென என் கனவில் தோன்றிய முருகப்பெருமான், `எலேய் முருகா, என் ஒருத்தனால இந்த உலகத்தை காபந்து பண்ண முடியலை. அதனால், என் பவர்ல பாதியப் பிரிச்சு உனக்குத் தாறேன். அதோட, உன்னை எனது ஏஜெண்டா நியமிக்கிறேன். உலகத்து மக்கள்ல நீ பாதி மக்களை கவனிச்சுக்க’ன்னு என்மேல பாரத்தை சுமத்திட்டு மறைஞ்சுட்டார். என் அப்பன் முருகன் பேச்ச தட்ட முடியுமா? அதான், சாமியாரா அவதாரம் எடுத்தேன். அதற்காக, மத்த சாமியார் போல இதை வச்சு காசு சம்பாதிக்கப் பார்க்கலை. இதையே முழுநேர பொழப்பா வச்சுக்கல. ஆசிரமம் அமைக்கலை. நடிகைகளோட சல்லாபத்தில் ஈடுபடலை. என் பொழப்ப மெயினா பார்த்துட்டு, பார்ட் டைம் வேலையா தான் சாமியார் வேலையை பார்க்குறேன். ஆனால், இன்னமும் நான் முழுமையான சாமியாரா மாறலை. அதனால்தான், என் கழுத்துல எல் போர்டு அட்டையை மாட்டி இருக்கேன்.

நான் சாமியாரா அவதாரம் எடுத்த சில நாட்களிலேயே என் கனவுல மறுபடியும் வந்த முருகப்பெருமான், `விசிறி மூலமா எல்லோரையும் விசுறு. அதில் இருந்து வரும் காத்து மூலமா மக்களுக்கு நான் அருள்பாலிக்கிறேன்’ன்னு சொன்னார். அதான் விசிறி வச்சு எல்லோருக்கும் விசிறிவிடுறேன். வாரத்திற்கு ஒரு தடவை சைக்கிள்ல போய், தஞ்சை நகரத்தில் உள்ள சந்துபொந்தெல்லாம் ரவுண்ட் அடிச்சு விசிறியால விசிறி விடுவேன். இதனால், தஞ்சையில பெருசா பொல்லாப்பு ஏதும் ஏற்படுறதில்லை. தனிப்பட்ட மனிதனுக்கு விசிறி விடுறதை விட, இந்தத் தமிழ்நாட்டை காபந்து பண்ண அரசியல்ல இருக்கும் அரசியல்வாதிகளுக்கு விசிறி விட்டா, அதன்மூலமா மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்னு அரசியல்வாதிகளுக்கு மேடை யில் வச்சு விசிறிவிடுறேன். கூடவே, முருகப் பெருமான் காலடியில் வச்சு பூஜை பண்ணின சால்வைகளைப் போர்த்தி விடுறேன்.

சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த பிரேமலதாவுக்கு விசிறி விட்டேன். ஜி.கே.வாசனுக்கு விசிறி விட்டிருக்கிறேன். தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் அஞ்சுகம் பூபதி, இந்திய கம்னியூஸ்ட் கட்சி முத்தரசனுக்கு விசிறி விட்டிருக்கிறேன். இவர்களைத் தவிர, தி.மு.க தலைவர் கலைஞர், வைகோ, தொல்.திருமாவளவன், தா.பாண்டியன், கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், சினிமா இயக்குநர்கள் டி.ராஜேந்தர், பி.வாசுன்னு பலருக்கும் விசிறிவிட்டிருக்கேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘எல் போர்டு’ சாமியார்!

சில தினங்களுக்கு முன்பு தஞ்சையில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக விவசாயச் சங்கங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் வைகோ கலந்துகிட்டார். நானும் கலந்துகிட்டதோடு வைகோ உள்ளிட்ட எல்லோருக்கும் விசிறி விட்டேன். இப்படி விசிறி விடுவதால், எல்லோரும் என்னைப் பத்தி விசாரிச்சு சிரிப்பாங்க. முதல்வர் ஜெயலலிதாவுக்கு விசிறி விட போயஸ்கார்டனே போனேன். முடியலை. கோட்டைக்குப் போனேன். அங்கேயும் என்னை உள்ளே விடலை. ‘நான் முருகனின் ஏஜெண்ட்’ன்னு சொல்லியும், விடலை. வேற வழி இல்லாம வெளியிலே நின்னு விசிறிவிட்டு வந்துட்டேன். இந்தமுறையும் அவங்கதான் ஆட்சி அமைச்சுருக்காங்க. எப்படியாச்சும் அவங்களை நேரில் சந்தித்து விசிறி, முருகனின் அருள் காற்றைப் பெற வைக்கணும். இந்திய பிரதமர் மோடிக்கும் விசிறி விடணும்.

அதேபோல, இன்னைக்கு தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனையும் ‘குடி'மகனாக்கும் டாஸ்மாக்குகளை மூடணும், மதுவிலக்கைக் கொண்டுவரணும்னு சொல்லி ஒரு வருடத்திற்கு முன்பு மதுபோதைக்கு எதிரான மக்கள் இயக்கங்கள் சார்பாக 100 நாள் நடைபயணம் போனோம். ஆனால், முருகப்பெருமான், `எல்லா பிரச்னைக்கும் காரணம் மனிதனின் வாய்தான். மனிதனின் குடி கெடுக்கும் குடிக்கும் வாய்தான் வழி. எனவே மௌனவிரதம் இரு. மதுவிலக்கு பிறக்கும்’னு பணித்தார். அதான், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மௌனவிரதம் இருக்கிறேன். முருகப்பெருமான் தான் சொன்னபடியே முதல்வரை இயக்கி, படிப்படியாக மதுவிலக்கு வர காரணமாக இருந்திருக்கிறார். முருகனை வணங்குங்கள். முக்காலமும் சிறக்கும். இதுதான் இந்த உலகத்திற்கு முருகன் சார்பாக இந்த முருகன் வழங்கும் அறிவுரை. அருளுரை” என்று பேப்பரில் ஃபுல் ஸ்டாப் வைத்திருந்தார்.

சிலிர்க்குதே சாமீ!

- தஞ்சை துரை.வேம்பையன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism