Published:Updated:

எந்திரக்`கார'ன்!

எந்திரக்`கார'ன்!
பிரீமியம் ஸ்டோரி
எந்திரக்`கார'ன்!

எந்திரக்`கார'ன்!

எந்திரக்`கார'ன்!

எந்திரக்`கார'ன்!

Published:Updated:
எந்திரக்`கார'ன்!
பிரீமியம் ஸ்டோரி
எந்திரக்`கார'ன்!
எந்திரக்`கார'ன்!

நீங்க `டிரான்ஸ்ஃபார்மர்' படம் பார்த்திருக்கீங்களா? அதான் பாஸ்... காரை அப்படியே மெகாசைஸ் ரோபாவா உருமாற்றி அதை வெச்சு சண்டை போடுவாய்ங்களே! அதே படம்தான். அந்தப் படத்தில் வரும் கார்கள் ரோபோவா மாறும்போதும், பறக்கும்போதும், சண்டையின் போதும் `ச்சே நம்மகிட்ட இப்படி ஒரு கார் இருந்தால் நல்லாருக்கும்'னு ஆழ் மனசுல ஆசை றெக்கை கட்டிப் பறந்திருக்கும். ஆனால் அடுத்த நொடியே நிஜத்தில் இதெல்லாம் நடக்கவா போகுதுனு அந்தப் பட்டாம்பூச்சியைப் பறக்கவிடாமல் உள்ளே ஓரமா படுக்கப் போட்டிருப்போம். இனி நீங்க பட்டாம்பூச்சியைப் படுக்கப்போடத் தேவையில்லை, தாராளமாகப் பறக்கவிடலாம்.

எந்திரக்`கார'ன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துருக்கி நாட்டைச் சேர்ந்த `லெட்ரான்ஸ்' எனும் குழு, ஒரு சிவப்பு நிற பி.எம்.டபிள்யு காரைப் பெரிய சைஸ் ரோபோவாகவும் உருமாறுவது போல டிசைன் பண்ணி அசத்தியிருக்காங்க. முக்கியமான விஷயம் என்னன்னா, கார் ரோபாவாக மாறிய பின்பும் அதை நாம் ஓட்டமுடியும் என்பதுதான். அதுமட்டுமில்லாமல், இந்த ரோபாவின் கையையும், கைவிரல்களையும் அசைக்க வைக்க முடியும். இதற்காக, 16 பேர்கொண்ட `லெட்ரான்ஸ்' குழு கிட்டத்தட்ட எட்டு மாதங்களா ராப்பகலா உழைச்சிருக்கு. `சீக்கிரமே இந்த வேலையை ஆர்டரின் பெயரில் மொத்தமாகவும், சில்லறையாகவும் மற்றவர்களுக்கு செஞ்சு தரப்போறோம்'னு அறிவிச்சிருக்காங்க.

- ஒத்தக்கடை ப.சூரியராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism