Published:Updated:

டெக்மோரா

டெக்மோரா
பிரீமியம் ஸ்டோரி
டெக்மோரா

டெக்மோரா

டெக்மோரா

டெக்மோரா

Published:Updated:
டெக்மோரா
பிரீமியம் ஸ்டோரி
டெக்மோரா

`ஆள்பாதி ஆப்ஸ்பாதி'யை வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, வாராவாரம் அறிமுகமாகும் `டெக்னாலஜிகளை' இங்கே இறக்கிவைக்கிறோம். இந்தவார டெக்னாலஜியில், `கூகுள் அலோ' எனப்படும் அப்ளிகேஷன் உங்களுக்காக!

டெக்மோரா

வாட்ஸ்-அப், மெசெஞ்சர், டெலிகிராம் போன்ற மெசேஜிங் ஆப்ஸ்களுக்குப் போட்டியாக `அலோ' என்னும் புதிய ஆப்ஸை வெளியிட்டுள்ளது கூகுள். மற்றவற்றில் இருக்கும் எல்லா வசதிகளுடன், புதிய வசதிகளும் `அலோ'வில் பளிச்சிட, விரைவில் வாட்ஸ்-அப்பை ஓரங்கட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இரண்டிலும் அலோவைப் பயன்படுத்த முடியும். வாட்ஸ்-அப் போலவே நமது மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அலோவைப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட் சாட்டிங், வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர், எமோஜி... என எல்லா வசதிகளும் இதிலும் உண்டு. ஆனால், வாட்ஸ்-அப்பில் இருப்பதுபோல கால் செய்யும் வசதியோ, டாக்குமென்ட்டை அனுப்பும் வசதியோ இதில் இல்லை.

கூகுள் அலோவின் சிறப்பம்சம் கூகுள் அசிஸ்டன்ட் எனப்படும் விர்ச்சுவல் அசிஸ்டன்ட். விளக்கைத் தேய்த்தால் வரும் பூதம் போல, கூகுள் அசிஸ்டன்ட்டிடம் @google என எதனைக் கேட்டாலும் பதிலுடன் ஆஜராகிவிடுகிறது. கூகுள் மேப்ஸ், செய்திகள், விக்கிப்பீடியா எனப் பல வசதிகளை கூகுள் அலோவிற்கு உள்ளேயே நம்மால் பயன்படுத்த முடியும். தற்போது எப்படி கூகுள் நவ், கூகுளின் எல்லா சேவைகளையும் ஒருங்கிணைத்து நமக்கு உதவுகிறதோ, அதைப்போல அலோவும் கூகுளின் எல்லா சேவைகளையும் பயன்படுத்திக்கொள்கிறது.

மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால், பயன்படுத்துவது நல்ல அனுபவம். நண்பர்களுடன் சாட்டிங் செய்யாதபோதுகூட, கூகுள் அசிஸ்டன்ட்டிடம் ஜாலியாக மொக்கை போடலாம். நண்பர்களுடன் சாட்டிங் செய்யும் போது, அவர்களின் மெசேஜில் இருக்கும் வார்த்தைகளை வைத்தே, செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, அலோவே ரிப்ளை செய்வதற்கான ஆப்ஷன்களை வழங்குகிறது. இதனால் எல்லா மெசேஜ்களுக்கும் ரிப்ளை செய்ய, நாம் விரல்களால் தட்டிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. (இந்த வசதி இங்கிலீஷுக்கு மட்டும்தான். தங்கிலீஷில் அடிப்பவர்களுக்கு அல்ல).

வாட்ஸ்-அப்பில் மெசேஜ்களின் எழுத்துருக்கள், எமோஜிக்களின் அளவு அனைத்தும் ஒரே மாதிரி மட்டுமே இருக்கும். ஆனால், அலோவில் எமோஜி மற்றும் டெக்ஸ்ட் அளவை நமது விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்றபடி மாற்றிக்கொள்ளமுடியும். குரூப் சாட்டில் முக்கியமான விஷயங்களைச் சொல்லும்போது, எழுத்துகளின் அளவையும், எமோஜிக்களின் அளவையும் பெரிதாக அல்லது சிறிதாக மாற்றிக்கொள்ளலாம்.

இப்படிப் பல விஷயங்களால், `வாட்ஸ்-அப்புக்கும் மேலே' எனத் தனித்துத் தெரிகிறது இந்த `கூகுள்-அலோ', விரைவில் இது எல்லோருடைய மொபைலிலும் இடம்பெறலாம்!

- டெக்கி கய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism