Published:Updated:

டெத் ரேஸ் போலாமா?

டெத் ரேஸ் போலாமா?
பிரீமியம் ஸ்டோரி
டெத் ரேஸ் போலாமா?

டெத் ரேஸ் போலாமா?

டெத் ரேஸ் போலாமா?

டெத் ரேஸ் போலாமா?

Published:Updated:
டெத் ரேஸ் போலாமா?
பிரீமியம் ஸ்டோரி
டெத் ரேஸ் போலாமா?
டெத் ரேஸ் போலாமா?

சாதாரண ரோட்டில் நாம் பைக்கில் க்ராஸ் பண்ணும்போதே லேசா எமதர்மன் எட்டிப் பார்ப்பார்! அமெரிக்காவைச் சேர்ந்த கென் பிளாக், எமதர்மன் கூடவே போய் விளையாடிவிட்டு வருகிறார். புரியலையா? கார் ஸ்டன்ட்தான் பாஸ்.

அமெரிக்காவின் பிரபல ஸ்நாக்ஸ் வகையான ‘டோநட்’ தெரியும்தானே உங்களுக்கு? டோநட் செய்வதில் செம எக்ஸ்பெர்ட் - கென் பிளாக். நீங்கள் நினைப்பது போல், இது சாப்பிடும் டோநட் அல்ல; இவர் டோநட் செய்வதும் பேக்கரியிலோ அவனிலோ அல்ல. ஒரு 4 வீல் டிரைவ் கார் இருந்தால் போதும்... ‘வ்வ்ர்ர்ரூம்... வ்வ்ர்ர்ரூம்’ என தரையில் 360 டிகிரியில் சுழன்று அம்சமாக டோநட் மாதிரியே செய்து அசத்தி விடுவார் கென் பிளாக். சிம்பிளா சொல்றேன் பாஸ் - காதலன் படத்தில் பிரபுதேவா, நக்மாவோட உருவத்தை காலாலேயே வரைவார் இல்லையா, அதே டைப்பில் ஒரு 4 வீல் டிரைவ் காரைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்கிறார் கென் பிளாக். அதுக்காக நக்மா படம் வரையுவாரானு கேட்டீங்கன்னா, பிச்சு... பிச்சு!

நேரான பாதையில் கார் ஓட்டும்போதே யார் மேலயாவது இடிச்சு, 70-கள் ஸ்டைலில் திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் டிரைவர்களுக்கு மத்தியில், ‘கரணம் தப்பினால் மரணம்’ வகை ஸ்டன்ட்களை எந்தவித பிசகும் இல்லாமல், எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்து காட்டுவது கென் பிளாக்கின் ஸ்டைல்.

டெத் ரேஸ் போலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காரின் பின்சக்கரங்களை வெறும் 10 மிமீ கேப்பில் வைத்து ஏரியில் விழாமல் பாலத்தின் விளிம்பில் யு-டர்ன் அடிப்பது, விமானத்துக்குக் கீழேயே போய், மகளை அப்பா ஸ்கூல்ல டிராப் பண்றது மாதிரி ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகும் வரைக்கும் கூடவே போவது, இரண்டு பாலங்கள் மூடப் போகும் கடைசி நொடியில் காரைச் செலுத்துவது, ரயில் வரும்போது ரயில்வே டிராக்கில் மயிரிழையில் அசால்ட்டாக காற்றில் பறந்து திரும்புவது, இரண்டு சக்கரங்களை வைத்து மெயின் ரோட்டில் போவது, காரில் வீலிங் பண்ணுவது, ‘ஆம்பளை’ விஷால் மாதிரி ஆகாயத்தில் பறப்பது போன்றவற்றை நிஜத்தில் பண்ணிக் காட்டுகிறார். இப்படி ரிஸ்க் எடுப்பதெல்லாம் கென் பிளாக்குக்கு பிஸ்கோத்து விஷயம். ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ பட யூனிட், கார் ஸ்டன்ட்களுக்கு முதலில் வந்து நின்ற இடம் கென் பிளாக்கின் ஜிம்கானா விளையாட்டு மைதானத்துக்குத்தான். ‘ஸாரி... கென் அவுட்...’ என்று வெளியே போர்டு வைத்து, மறைமுகமாக `கெட் அவுட்' சொல்லிவிட்டாராம்.

‘டெத் ரேஸ்’ எனும் ஹாலிவுட் படத்தில் உயிரைப் பணயம் வைத்து ரேஸ் நடத்தி, அதற்கு ஒரு வெப்சைட் ஆரம்பித்து மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை வர வைப்பார்களே... அதேபோல்தான் கென் பிளாக்கின்http://www.hooniganracing.com/blog/gymkhana/ என்னும் வெப்சைட்டுக்கு இப்போது 10 மில்லியன் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். கென்னின் ஸ்டன்ட்களைக் கேள்விப்பட்டு தினம் தினம் இந்த வெப்சைட்டுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள்.

டெத் ரேஸ் போலாமா?

‘‘புரூஸ்லீ ஒரு நாளைக்கு எப்படி 20 மணி நேரம் பயிற்சி எடுத்தாரோ, அதுபோல்தான் நானும்! ஒரு நாளைக்கு எனக்குத் தூக்கமே 3 முதல் 4 மணி நேரம்தான். மிச்ச எல்லா நேரங்களிலும் கார் ஓட்டும் பயிற்சிதான். டயர்கள் எந்த இடத்தில் முடியும், பானெட் எங்கே உரசும் போன்றவற்றை எல்லாம் கனகச்சிதமாகப் படிக்க வேண்டும். கார் ஓட்டும்போது கவனத்தை எங்கேயும் சிதறவிடக் கூடாது!’’ என்று சொல்லும் கென் பிளாக்கின் காயின் ஸ்டன்ட்தான் செம ஹைலைட். அதாவது, ஒரு கோனின் மேலுள்ள நாணயத்தை, சரியாக தனது காரின் பின் டயர்கள் கொண்டு சிதற விட்டதெல்லாம்... சான்ஸே இல்லை ரகம்!

கேமிரா ஆங்கிளுக்காக எத்தனை டேக்குகள் வேண்டுமானாலும் முகம் சுளிக்காமல் மறுபடியும் உயிர் பயமில்லாமல் ரீப்பீட் செய்வாராம் கென். ஃபோர்டு ஃபோகஸ், ஃபோர்டு ஃபியஸ்டா, மஸ்டாங் போன்ற கார்களில்தான் பெரும்பான்மையாக இவரது ஸ்டன்ட் அமைந்திருக்கின்றன. ஃபார்முலா-1 கார்களுக்கு இணையாக இருக்கும் இந்த காரின் ஸ்டீயரிங் வீல் விலை மட்டும் 8 முதல் 10 லட்ச ரூபாயாம்!

அடப் போங்க பாஸ்... முதல்ல 50,000 ரூபாய் பைக்கை ஒழுங்கா ஓட்டக் கத்துக்கிறோம்!

- அருப்புக்கோட்டை தமிழ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism