சோவியத் யூனியனில் இருந்து 1991-ம் ஆண்டு உடைபட்ட நாடுகளில் துர்க்மேனிஸ்தானும் ஒன்று. 50 லட்சம் பேர் மக்கள் தொகையுடைய இந்த நாட்டில் இயற்கை எரிவாயுதான் முதன்மையான பொருளாதாரத்துக்கான ஆதாரம். ஆண்டுதோறும் 70 பில்லியன் டாலர் அளவிலான இயற்கை எரிவாயு இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இந்நாட்டின் பெயர் பன்னாட்டுச் செய்திகளில் ஒரு விஷயத்திற்காக அடிபடுகிறது. அந்த நாட்டின் தலைநகரான அஷ்காபாத்தில்(அனுஷ்காபாத் இல்லை பாஸ்!) புதிய பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வல்லூறு வடிவில், இந்திய மதிப்பில் சுமார் 15,400 கோடி ரூபாய் செலவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அம்மாடியோவ்!

ஒருமணி நேரத்தில் 1,600 பேரைக் கையாளக்கூடிய அளவுக்கு இதன் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் என்ன விசித்திரமென்றால் கடந்த 2015-ம் ஆண்டு இந்நாட்டிற்கு வந்த மொத்தப் பயணிகளின் எண்ணிக்கையே 1,05,000 பேர்தான். அதாவது சராசரியாக ஒருமணி நேரத்திற்கு மொத்தம் 12 பேர்.

அப்புறம் ஏன்யா 1,600 பேரைக் கையாள்ற அளவுக்குப் பெரிசா கட்டியிருக்கீங்கனு நாம வேணும்னா கேள்வி கேட்கலாம். ஆனா இங்கே உள்ள மக்கள் இதைக் கேட்க முடியாது. ஏன்னா அங்கே எல்லாமே அப்படித்தான். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த மற்ற நாடுகளைப் போலவே, இங்கும் ஊழல் மலிந்து காணப்படுவதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. மறுபடியும் ட்ரிப் போக மோடி இந்நேரம் பிளானைப் போட்டடிருப்பாரே!

- ராஜபாளையம் கருப்பு