Published:Updated:

இது ஐ-நாய் போன்!

இது ஐ-நாய் போன்!
பிரீமியம் ஸ்டோரி
இது ஐ-நாய் போன்!

இது ஐ-நாய் போன்!

இது ஐ-நாய் போன்!

இது ஐ-நாய் போன்!

Published:Updated:
இது ஐ-நாய் போன்!
பிரீமியம் ஸ்டோரி
இது ஐ-நாய் போன்!

ம் ஊரில் ஐ-போனை இன்னமும் எட்ட நின்னுதான் பார்க்குறோம். தவிர, ஐ-போன் வெச்சிருக்கிறவங்கமேல காரணமே இல்லாம கடுப்போட சுத்துறோம். இதுவும், எரியிற நெருப்புல எண்ணெயைக் கவுத்துற விஷயம்தான். நடந்தது இங்கே இல்லை பாஸ். சீனாவில்! (நல்லவேளை ஃபேஸ்புக் தப்பிச்சது!)

இது ஐ-நாய் போன்!

சீனாவில் `கோகோ' என்ற ஒரு நாய்க்கு அதோட முதலாளி ஐ-போன்7 மாடல் மொபைலைப் பரிசளித்திருக்கிறார். `அதுக்கு என்ன'ங்குறீங்களா?... ஒண்ணு இல்லை ரெண்டு இல்லை, மொத்தம் எட்டு மொபைல் போன்களை அந்த நாய்க்கு, ஸாரி... `கோகோ'விற்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். `ஒரு போன் வாங்கவே நாக்குத் தள்ளுதே... எட்டு எப்படிச் சாத்தியம்? யாருய்யா அவரு'னுதானே யோசிக்கிறீங்க?

அந்த நாயோட எஜமான் வேற யாருமில்லை. ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், உலகின் 20-வது பெரிய பணக்காரருமான வாங்ஜியான்லின் மகனான, 28 வயது வாங் சிகாங்! தனது நாய்மேல இருக்கிற பாசத்துல இப்படிப் பல பரிசுகள் கொடுத்து, பல பத்திரிகைகளின் தலையங்கங்களை நிரப்பியிருக்கிறார். இப்படி காஸ்ட்லியான பொருட்களைத் தனது நாய்க்குப் பரிசளிப்பது இவருக்கு ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே ஒரு சுபயோக சுபதினத்தில் நாயின் கால்களுக்கு 37,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஆப்பிள் வாட்சுகளைக் கட்டி அழகு பார்த்தவர்தான், இந்த வாங் சிகாங்!

அது சரி!

- திருவாடானை ஜெ.வி.பிரவீன்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism