Published:Updated:

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

Published:Updated:
சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

குழந்தைகளுடன் ஹோட்டலுக்குச் செல்லும்போது பல நேரங்களில் அவர்கள் சாப்பிடாமல் அடம்பிடித்து, எல்லோரையும் மூட்-அவுட் ஆக்குவார்கள். இதற்காகவே குழந்தைத்தனமாக யோசித்து, குழந்தைகள் விரும்பும் வகையில் அவர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரெஸ்டாரன்ட்களை நியூயார்க்கில் அமைத்திருக்கிறார்கள். அதாவது, ஓடிப்பிடிச்சு விளையாடாமல் குழந்தைகளைச் சாப்பிடவைக்கும் கிட்ஸ் ஹோட்டல்கள் இவை. வாங்க, என்னன்னு பார்ப்போம்!

மேக்ஸ் ப்ரென்னர் சாக்லேட் பார் :

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

இந்த ஹோட்டல் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது என்பதோடு, சாக்லேட்டுகளால் உருவாக்கப்பட்டது என்றும் சொல்லலாம். சாக்லேட் ஐஸ்க்ரீமில் ஆரம்பித்து சாக்லேட் சமோசா, சாக்லேட் பீட்சா, சாக்லேட் தோசை என அனைத்து வகையான சாக்லேட் பதார்த்தங்களும் இங்கே கிடைக்கும். #சாக்லேட் சாக்லேட் போலவே... லைஃபே டேஸ்ட்டு டேஸ்ட்டு டேஸ்ட்டுடா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெக்கில் அண்ட் ஹைட் க்ளப் :

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

இங்கே குழந்தைகள் சென்றதுமே திடுதிப்பென எங்கிருந்தாவது பயமுறுத்தும்படி வெளியே வரும் பணியாளர்கள் உணவு பரிமாறுகிறார்கள். அடுத்தமுறை அழைக்கும்போது வித்தியாசமான உருவத்தோடு இன்னொருவர் வெளியே வருவாராம். சாப்பிடப் போனவங்க எல்லோரும் பீதியில் உறைந்தபடியே வெளியே வருவதுதான் இந்த ஹோட்டலின் நோக்கமாம். பில்லைப் பார்த்தே பயத்தில் உறையும் ஹோட்டலும் இங்கே இருக்கே!

ஹார்டு ராக் கஃபே :

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

ஹோட்டலுக்கு வந்தோமா? இல்லை, இசைக் கச்சேரிக்கு வந்தோமா? என நாம் சந்தேகப்படும் அளவுக்கு ஹோட்டலின் எல்லாப் பக்கங்களிலும் பழங்கால இசைக் கருவிகள் முதல், நவீன இசைக் கருவிகள் வரை அத்தனையையும் அடுக்கி வைத்திருக்கிறார்கள். பாட்டு கிளாஸுக்குப் போகும் குழந்தைகளின் ஃபேவரைட் ஹோட்டலாம் இது. #பேசாம சாப்பிடுறியா... இல்லை பாட்டுப் பாடவா?

அமெரிக்கன் கேர்ள் கஃபே :

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

உங்கள் குழந்தையை வெகுவாகக் கவர, நாங்க இருக்கோம்' என நம்பிக்கையோடு அழைக்கிறது இந்த ரெஸ்டாரன்ட். குழந்தைகள் தங்களோடு எடுத்துவரும் டெடிபியர், நாய், பூனை பொம்மைகளைத் தனி இருக்கையில் அமரவைப்பது, அதற்கும் சூப் கொடுப்பது என விழுந்து விழுந்து கவனிப்பார்களாம். #கொடுக்கிறது சரிய்ய்யா... அது குடிக்குமா?

நின்ஜா கஃபே :

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

நியூயார்க்கில் இருக்கும் நின்ஜா கஃபே ரெஸ்டாரன்டிற்குள் நுழையும்போதே, ஜப்பானின் பழமையான ஏதோவொரு நின்ஜா கிராமத்திற்குள் நுழைந்ததுபோல் உணரத் தொடங்கிவிடுவோம். குழந்தைகளுக்கு ஒரு கேம் உலகிற்குள் நுழைந்தது போன்ற உணர்வைக் கொடுக்கும் இந்த ஹோட்டலில் சாப்பிட பல நாட்களுக்கு முன்பே புக் செய்ய வேண்டுமாம். #அவ்வ்வ்!

ப்ளானெட் ஹாலிவுட் :

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

ஹாலிவுட் படங்களில் வந்த பிரபலமான கதாபாத்திரங்களை ஹோட்டலின் மூலை முடுக்குகள், சந்து பொந்துகள் என எல்லா இடங்களிலும் அடுக்கி வைத்திருப்பார்கள். குழந்தைகளும் மிக்கி மவுசுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தபடியே டின்னர் சாப்பிடலாம். #டின்னர் வித் ஸ்பைடர்மேன்னு ஸ்டேட்டஸும் போடலாம்ல?

க்ரம்ப்பி கிட்ஸ் :

சின்னப்பசங்களுக்கு இது பிடிக்கும்!

இந்த ஹோட்டலின் மெனு கார்டில் `எனக்குப் பசிக்கலை. எதுவும் வேணாம்' என்ற, குழந்தைகளைக் குஷிப்படுத்தும் ஆப்ஷன் இருக்கிறது. ஆனால், அந்தப் பெயருக்கும் ஒரு டிஷ்ஷை ஆர்டர் போட்டு வாய்க்கு முன்னால் கொண்டுவந்து நீட்டுகிறார்கள் என்பதுதான், குழந்தைகள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! #இதுக்கு எங்க அம்மாவே பரவாயில்லை!

- கொட்டாம்பட்டி விக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism