திருமணம், ரிசப்ஷன் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பெண் பிள்ளைகள் பட்டுப் புடவை கட்டிக்கொண்டு பாரம்பரிய முறைப்படி போக வேண்டும் என்பது, வீட்டுப் பெரியவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால், கல்லூரி மாணவிகள் தங்கள் தோழிகளின் திருமணம், ரிசப்ஷன் போன்ற விசேஷங்களுக்குச் செல்லும்போது சிம்பிளாக, அதேசமயம் மிடுக்காகப் போக ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட மேக்கப்பைத்தான் இங்கே மீனாட்சிக்குப் போட்டிருக்கிறோம்.

மீனாட்சியின் மேக்கப்பை பார்ப்பதற்கு முன், அவருடைய கெட்-அப்பைப் பாருங்கள். அவர் அணிந்திருப்பது பட்டுப்புடவை இல்லை. டிசைனர் சாரி. சக தோழியின் திருமணத்துக்குச் செல்லும்போது, எல்லா நகைகளையும் போட்டுக் கொண்டு போவதை கல்லூரிப் பெண்கள் விரும்புவதில்லை. அதனால் மீனாட்சியின் டிசைனர் சாரியில் காணப்படும் முந்தானையில் இருக்கும் சில்வர் நிறத்துடன் இயைந்துபோகும் நெக்லெஸ்தான், அவர் அணிந்திருக்கிறார். அடுத்ததாக, அவர் அணிந்திருக்கும் சின்ன ஸ்லீவ் வைத்த பிளவுஸைக் கவனியுங்கள். இப்படிச் சின்ன ஸ்லீவ் வைத்த பிளவுஸ் அணியும்போது, கைகளில் வளையல் அணியத் தேவையில்லை. இதுவே முக்கால் ஸ்லீவ் வைத்த பிளவுஸ் போட்டால், நிச்சயம் வளையல் அணியவேண்டும்.

நெற்றியில் இருக்கும் பொட்டுகூட, புடவையில் இருக்கும் ஸ்டோனைப் போலவே, அதே நிறத்தில் சின்னதாக வைத்திருப்பதையும் கவனியுங்கள். பொதுவாக திருமணத்துக்குச் செல்கிறவர்கள், முந்தானையில் ப்ளீட்ஸ் வைத்துத்தான் அணிவார்கள். பட்டுப்புடவையாக இருந்தாலும், டிசைனர் சாரியாக இருந்தாலும், அப்படி அணியும்போது ஏறக்குறைய ஒரு 'டீச்சர் லுக்’ அல்லது ஆபீஸ் போகும் பெண்ணின் லுக் வந்துவிடும். அதுவே முந்தானையை ப்ளீட்ஸ் வைக்காமல் ஃப்ரீயாக விட்டால்..., அதை அட்ஜெஸ்ட் செய்வது, சரிய விடுவது, கையில் வைத்து விளையாடுவது... என்று டீன் பெண்கள் எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள். இந்த ஆக்ஷன் அவர்களுக்கு ஒரு துறுதுறு லுக்கை கொடுக்கும். இந்த தோற்றத்துக்கு, முடியை நன்றாக பிரஷ் செய்து, ஃப்ரி ஃப்ளோவாக விடுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

'இப்படி ஒரு லுக்தான் வேண்டும்' என்று மீனாட்சி முடிவு செய்துவிட்டதால், அவருக்கு கிராண்டாக மேக்கப் போடுவது பொருத்தமாக இருக்காது. சில சோப் விளம்பரங்களில் தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு பாத்ரூமிலிருந்து வரும் மாடல்களை கவனித்திருக்கிறீர்களா...? பார்வைக்கு அவர்கள் மேக்கப்பே போடாமல் இருப்பது மாதிரி தெரியும். உற்றுக் கவனித்தால் மேக்கப் தெரியும். இவருக்கு அப்படி ஒரு மேக்கப்தான் போட்டிருக்கிறோம்.

மீனாட்சிக்கு கிளன்ஸிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங் செய்த பிறகு, ஃபவுண்டேஷனை 'நோ மேக்கப்’ என்கிற ஸ்டைலில் போட்டிருக் கிறோம். மேக்கப்புக்கு முன்பு எடுத்த போட்டோ, மேக்கப்புக்குப் பிறகு எடுத்த போட் டோவில் இருக்கும் வித்தியாசத்தை உங்க ளால் பார்க்க முடியும். காரணம், அவரது உண்மையான கலரைவிட இரண்டு ஷேட் லைட்டாகத் தேர்ந்தெடுத்து, ஃபவுண்டேஷன் போட்டிருக்கிறோம். ஃபவுண்டே ஷனை ஃபிக்ஸ் செய்ய பயன்படுத்தியதும் ட்ரான்ஸ்லூஸன்ட் வொயிட் பவுடர்தான்.

இந்த வகை மேக்கப்பில் கண்களுக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். மீனாட்சி அணிந்திருக்கும் சாரியின் கலரில் அவருக்கு பிங்க் நிறத்தில் ஐ ஷேடோ பேஸ் கொடுத்திருக்கிறோம். மீனாட்சியின் பிளவுஸ் பர்பிள் நிறம் என்பதால், அதே நிறத்தில் கண் இமைகளின் வெளிப்புற ஓரத்தில் ஐ ஷேடோ கொடுத்திருக்கிறோம். மீனாட்சியின் சாரி பார்டரில் சில்வர் நிறம் இருப்பதால், அதே சில்வர் நிறத்தை புருவத்துக்குக் கீழே இருக்கும் 'ப்ரோ போன்’-க்கு ஹைலைட்டாக கொடுத்திருக்கிறோம். மேக்கப்பை அடக்கி வாசிக்க வேண்டும் என்பதால்... கச்சிதமான ஆர்ட்டிஃபிஷியல் லேஷஸைப் பொருத்தி, அதற்கு மஸ்காரா கொடுத்திருக்கிறோம். மீனாட்சியின் புருவங்கள் த்ரெடிங் செய்யப்பட்டு சீராக இருந்தாலும், அதை 'ஐ பிரஷ்’ கொண்டு டார்க் செய்திருக்கிறோம். அதேபோல, பிளாக் ஐ லைனரைச் சுற்றி கிரே டச் கொடுக்கப்பட்டிருப்பதையும் கவனியுங்கள். கண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்... உதடுகளுக்கான லிப்ஸ்டிக்கை அடக்கமாகவே போடவேண்டும் என்பதால், 'பீச்’ கலரில் லிப்ஸ்டிக் கொடுத்திருக்கிறோம்.

'டிசைனர் சாரிகூட தேவையில்லை... ஸ்லீவ் லெஸ் டிசைனர் சுடிதாரே போதும் என்றால் எப்படி மேக்கப் போட்டுக் கொள்வது?’ என்று கேட்டு டிரெஸ் மாற்றி வந்த மீனாட்சிக்கு, அவரது புது டிரெஸ் கலருக்கு ஏற்றமாதிரி ஐ ஷேடோவின் கலரை மட்டும் மாற்றி, உதடுகளுக்கு பிங்க் கலரில் லிப்ஸ்டிக் போட்டோம். அதேபோல, சின்னதாக குறுக்கு வகிடு எடுத்திருப்பதையும், வகிடுக்குப் பின்னால் இருக்கும் அத்தனை முடியையும் பின்நோக்கி திருப்பிவிட்டு சீவியிருப்பதையும் கவனியுங்கள்! இப்படி உடைக்கு உடை மாறுபடும் சின்னச் சின்ன மாற்றங்களில் இருக்கிறது... மேக்கப் சீக்ரெட்!

- மிளிரும்...