Published:Updated:

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!
பிரீமியம் ஸ்டோரி
பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

Published:Updated:
பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!
பிரீமியம் ஸ்டோரி
பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

வ்வொரு நாடும் மொழி, கலாசாரம், உணவு, உடை எனப் பல விஷயங்களில் வேறுபடலாம். ஆனால், சுட்டிகளின் சேட்டைகளும் அவர்களின் கற்பனை உலகின் கொண்டாட்டங்களும் மாறாதது. ஹாரி பாட்டரின் ஜே.கே.ரெளலிங் போல உலகம் முழுக்க எத்தனையோ குழந்தை எழுத்தாளர்கள், கற்பனை உலகை கொண்டாட்டமாக்கி வருகிறார்கள்.  இப்போது, வெவ்வேறு நாடுகளில் பட்டையைக் கிளப்பும் சுட்டிகளுக்கான எழுத்தாளர்கள் இவர்கள்தான்...

சீனா

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

நூடுல்ஸுக்கு பெயர் பெற்ற சீனாவின்,  குழந்தைகள் எழுத்தாளர்களில் முக்கியமானவர், காவ் வென்சுவேன் (Cao Wenxuan). சீனாவின் பீகிங் யுனிவர்சிட்டியில் பேராசிரியர். இவர் எழுதிய ‘பிரெளவுன்ஸ் அண்ட் சன்ஃபிளவர்’ (Bronze and Sunflower) நாவல், சீனச் சுட்டிகளையும் கடந்து உலக ஹிட்!

சீனாவின் டமாய்டி கிராமத்தில் வசிக்கும் 7 வயது, சன்ஃபிளவருக்கு பெற்றோர் கிடையாது. அதே கிராமத்தில் ஒரு நல்லவரின் வீட்டில் வளர்ந்து வருகிறாள். அந்த வீட்டுக் குட்டிப் பையன் பிரெளன்ஸ். அவனால் பேச முடியாது. அவனுடைய நண்பன், ஓர் எருமை மாடு. இவர்களோடு நட்பாகிறாள் சன்ஃபிளவர். ஊரில் ஏற்படும் வெள்ளம், பஞ்சம் போன்ற பிரச்னைகளோடு, குடும்ப வறுமையை எப்படி கடக்கிறார்கள் என்பதுதான் கதை.

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!காவ் எழுதிய பல கதைகள் சீனாவின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. 14 வயது சிறுவன் கதையைச் சொல்லும் ‘தி ஸ்ட்ரா ஹவுஸ்’ (The Straw House), ஒரு குட்டிக் குதிரையை மையப்படுத்தும் ‘சியர்’ (Sear), காமிக்ஸ் கதைகளான, ‘தி ஃபெதர்’ (The Feather) மற்றும் பேர்டு போட் (Bird Boat) என ஏகப்பட்ட கதைகளை எழுதி இருக்கிறார்.

“நாம் அணியும் உடைகளின் வடிவங்கள் மாறலாம். ஆனால், உடைகள் மாறுவது இல்லை. குழந்தைகளுக்குக் கற்பனைக் கதைகளோடு, நம் வரலாற்றையும் சொல்லித்தருவது அவசியம்’’ என்கிற காவ், குழந்தை இலக்கியத்துக்காக வழங்கப்படும் ‘லிட்டில் நோபல்’ பரிசை வென்றிருக்கிறார். நோபல் பரிசுக்கு இணையான இந்த விருதைப் பெற்ற முதல் சீனர் இவர்தான்.

பிரான்ஸ்

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

ரோக்கிய உணவுகளான காய்கறி, கீரை, பழங்களை விரும்பி உண்ணும் குழந்தைகள் அதிகமாக இருப்பது பிரான்ஸில்தான் என்கிறது ஓர் ஆய்வு. அப்படியான பிரான்ஸ் சுட்டிகளின்  ஃபேவரைட்,  ‘பொமிலோ’.

ரோமானியா நாட்டில் இருந்து 10 வயதில் பிரான்ஸுக்கு வந்தவர், ரமோனா பேடஸ்கியூ (Ramona Badescu). அவரது முதல் நாவல், ‘பொமிலோ தி கார்டன் எலிபென்ட்’ (Pomelo the Garden Elephant). பிங்க் நிறத்தில், நீளமான தும்பிக்கையோடு இருக்கும் குட்டியூண்டு யானை. வெளி உலகம் தெரியாத பொமிலோ மேற்கொள்ளும் பயணங்களே கதை. இந்த சீரிஸில், 11 கதைகள் வெளியாகியுள்ளன. ஒரு முயலின் காமெடி கலாட்டக்களை சொல்லும் ‘பிக் ரேபிட்ஸ் பேட் மூட்’ (Big Rabbits Bad Mood) நாவலும் வைரல் ஹிட்!

ரஷ்யா

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

ஷ்யாவின் இரண்டு தலைமுறை குழந்தைகளுக்கும் தெரிந்த பெயர், எட்வார்டு உஸ்பென்ஸ்கி (Eduard Uspensky). ஃபியோடர் 6 வயது பையன். எப்போதும் சீரியஸாகவே இருப்பதால், அவனை எல்லோரும் அங்கிள் ஃபியோடார் என்பார்கள். ஒருநாள் பூனையோடு வருகிறவனை வீட்டில் திட்டுகிறார்கள். கோபித்துக்கொண்டு தன் நாயுடன் ஒரு வித்தியாசமான கிராமத்துக்குச் செல்கிறான் ஃபியோடர். அங்கே சந்திக்கும் விசித்திர அனுபவங்களே ‘அங்கிள் ஃபியோடார், ஹிஸ் டாக், ஹிஸ் கேட்’ (Uncle Fyodor, His Dog, His Cat).

முதலையின் கதை பேசும் ‘குரரோகோடைல் ஜீனா அண்டு ஹிஸ் ஃப்ரெண்ட்ஸ் (Crocodile Gena and His Friends) உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான டி.வி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார் இந்த 78 வயது சுறுசுறு சுட்டி படைப்பாளர்.

ஸ்பெயின்

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

ஸ்பெயின் நாட்டின் ஃபேவரைட் எழுத்தாளர், லாரா கலிகோ கார்ஷியா (Laura Gallego Garcia). இவரின் முதல் நாவலான ‘தி இதுன்ஸ் மெமரீஸ்’ (The Iduns Memories) மூன்று பாகங்கள். இதுன் என்பது, மூன்று சூரியன், மூன்று சந்திரன். ட்ராகன்கள், யூனிகார்ன் எனப் பல விசித்திர உயிரினங்கள் இருக்கும் ஃபேண்டஸி உலகம். அங்கே நடக்கும் சாகசங்களே கதை.

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

தன் சித்தியின் உயிரைக் காக்க 12 மணி நேரத்தில் ஒரு கடிகாரத்தைக் கண்டுபிடிக்கும் சிறுவனின் ‘தி கலெக்டர் ஆஃப் எக்ஸ்ட்ரார்டினரி கிளாக்ஸ்’ (The Collector of Extraordinary Clocks), காடுகளின் கதை சொல்லும் ‘வேர் தி ட்ரீஸ் சிங்’ (Where the Trees Sing) மற்றும் ‘டூ கேண்டல்ஸ் ஃபார் டெவில்’ (Two Candles for Devil) என 25-க்கும் அதிகமான நாவல்களை எழுதியுள்ளார்.

“என் முதல் நாவலை 11 வயதில் எழுதினேன். 18 வயதுக்குள் 11 நாவல்களை எழுதினேன். ஆனால்,  எதுவுமே வெளியாகவில்லை. எழுத வேண்டும் என்றால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுங்கள். பயப்படாதீர்கள். வெற்றிக்கு குறுக்கு வழிகள் கிடையாது” என, எழுதும் ஆசைகொண்டவர்களை ஊக்கப்படுத்துகிறார்  லாரா.

ஜப்பான்

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

ரு போர் வீராங்கனை,  இளவரசனை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறாள். இளவரசன் ஒரே இடத்தில்  இருந்தால், அவன் உயிருக்கு ஆபத்து. எனவே, இருவரும் சேர்ந்து பயணம் மேற்கொள்கிறார்கள். பயணத்தில் அவர்கள் சந்திக்கும் அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது, ‘மார்பிடோ: கார்டியன் ஆஃப் ஸ்பிரிட்’ (MORBITO: Guardian of Spirit). இதை எழுதியவர், ஜப்பானின் பிரபல குழந்தைகள் எழுத்தாளர், நஹோகோ யுஹாஷி (Nahoko Uehashi).

பட்டையைக் கிளப்பும் படைப்பாளிகள்!

மார்பிடோ வரிசையில் இதுவரை 10 நாவல்கள் வெளிவந்துள்ளன. இவை கார்ட்டூன்களாகவும், ஆடியோ சீரியல்களாவும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், ஆஸ்திரேலிய பூர்வகுடிகளின் வாழ்வைப் பதிவுசெய்யும் ‘தி பேக்யார்ட் அபாரிஜின்ஸ்’ (The Backyard Aborigines) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். குழந்தைகள் எழுத்துக்காக வழங்கப்படும் ‘அமெரிக்கன் லைப்ரரி அசோஸியேஷன் விருது’ உட்பட பல உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

- இரா.கலைச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism