Published:Updated:

தாத்தா பாட்டி எங்க செல்லம்!

தாத்தா பாட்டி எங்க செல்லம்!
பிரீமியம் ஸ்டோரி
தாத்தா பாட்டி எங்க செல்லம்!

தாத்தா பாட்டி எங்க செல்லம்!

தாத்தா பாட்டி எங்க செல்லம்!

தாத்தா பாட்டி எங்க செல்லம்!

Published:Updated:
தாத்தா பாட்டி எங்க செல்லம்!
பிரீமியம் ஸ்டோரி
தாத்தா பாட்டி எங்க செல்லம்!

தாத்தா, பாட்டி இருக்கிற வீடு எப்பவுமே ஜாலியா இருக்கும். ஏன்னா, நம்மோடு பழகும்போது அவங்களும் குழந்தைகளாக, நண்பர்களாக மாறிடுவாங்க. கதைகள் சொல்றது, சாப்பாடு ஊட்டிவிடுறது, சேர்ந்து விளையாடுறது என இந்தப் பெரிய நண்பர்கள் எப்பவும் ஸ்பெஷல்தான். அப்படி தங்களுடைய பெரிய நண்பர்களான தாத்தா, பாட்டி பற்றி சிலர் சொல்றாங்க. கூடவே, வயசானவங்களை எப்படி கவனிச்சுக்கணும்னு சில டிப்ஸ் கொடுக்கறாங்க.

தாத்தா: ஆனந்தன்
பாட்டி: செந்தமிழ்ச்செல்வி
பேத்தி: ஜாய்ஸ் சிஜோன்  
   

‘‘தாத்தாதான் என்னையும் தம்பியையும் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போவாங்க. வீட்டுலயும் ஸ்கூல்லயும் தாத்தாதான் சாப்பாடு ஊட்டிவிடுவாங்க. அம்மம்மா செஞ்சுக் கொடுக்கும் பலகாரங்கள் ரொம்ப டேஸ்ட்டா  இருக்கும். சாயந்திரத்துல தாத்தா, பாட்டியோடு சேர்ந்து மாடியில் விளையாடுறது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது என ஜாலியா இருப்போம். அந்த நேரம்தான் எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச நேரம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாத்தா பாட்டி எங்க செல்லம்!

கவனிங்க ஃப்ரெண்ட்ஸ்: வயசானவங்களுக்கு தூக்கம் சீக்கிரம் வராது. அதனால், டி.வி-யை சத்தமாக வெச்சு, வர்ற கொஞ்சத் தூக்கத்தையும் விரட்டிடாதீங்க. அமைதியான சூழ்நிலையை அவங்களுக்கு உருவாக்கிக் கொடுங்க.   

தாத்தா: கிருஷ்ணமூர்த்தி
பாட்டி: ரதிதேவி
பேத்தி: ஆர்.தன்யா


“காலைல அஞ்சு மணிக்கு சாமிப் பாட்டைப் போட்டு, எங்களை எழுப்புறது பாட்டிதான். குளிக்கவெச்சு, சாப்பிடவெச்சு, ஸ்கூலுக்குக் கிளம்புறதுல இருந்து நைட் தூங்கப்போறது வரைக்கும் எல்லாமே எங்க பாட்டிதான்.  பாட்டியோடு சேர்ந்து பாத்திரம் கழுவுறது, துணிகளை மடிக்கிறதுனு கதை பேசிக்கிட்டே செய்வோம். எங்க தாத்தா ஷேர் ஆட்டோ ஓட்டுறார். அவர் வண்டியைக் கழுவுறதுக்கு தண்ணீர் பிடிச்சு வந்து கொடுப்போம். அவரோடு ஜாலியா வண்டியில் போவோம். எங்களோடு கிரிக்கெட் விளையாடுவார். ராத்திரியில் தாத்தா, பாட்டி பக்கத்துல யார் படுக்கிறதுனு எங்களுக்குள்ளே பெரிய போட்டியே நடக்கும். பாட்டியோட கால் வலிக்கு தைலம் தேய்ச்சு விடுறது, தாத்தா வாயில் மாத்திரையை யார் போடுறதுனு எல்லாத்துக்கும் போட்டிதான். அவங்க ஏதாவது விசேஷத்துக்கு ஒருநாள் ஊருக்குப் போனாலும் நாங்க ரொம்பவே மிஸ் பண்ணுவோம்.’’      

தாத்தா பாட்டி எங்க செல்லம்!கவனிங்க ஃப்ரெண்ட்ஸ்:
வயசானவங்களுக்கு லேசா அடிபட்டாலும் குணமாவது கஷ்டம்.  ஏன்னா, அவங்களோட எலும்புகள் தேய்ஞ்சு லேசாக இருக்குமாம். அதனால், வீட்டில் அவர்கள் நடக்கும் இடங்களில் தண்ணீர் சிந்தாமல் பார்த்துக்கங்க. நம்மளை மாதிரி அவங்களால சட்டுனு பேலன்ஸ் பண்ண முடியாது. கொஞ்சம் தண்ணீர் இருந்தாலும் வழுக்கிடும். அதனால், தரையைச் சுத்தமா வெச்சுக்கங்க. அதே மாதிரி பாத்ரூமில் கவனமா இருக்கணும். நீங்க குளிச்சுட்டு வரும்போது, சோப்பு வழுவழுப்பு இல்லாம, தரையை தண்ணீர் விட்டு நல்லா கழுவிட்டு வெளியே வாங்க.   

தாத்தா: பாலசுப்ரமணி
பாட்டி: பானுமதி
பேத்தி: பெலிசியா

“எங்க தாத்தா எங்களுக்கு நிறைய கதைகள் சொல்வார். ஒவ்வொரு கதையும் வித்தியாசமா இருக்கும். சில நேரம், ராத்திரியில சாப்பிட்டு முடிச்ச பிறகும் ஓடிப்பிடிச்சு விளையாடுவோம். அதனால், நடுராத்திரியில  பசிக்கும். அப்போ, பாட்டிதான் ஏதாவது செஞ்சு கொடுப்பாங்க. தெரியாம தப்பு செஞ்சுடும்போது, அப்பா, அம்மாகிட்டே இருந்து அடி வாங்காம எங்களை எஸ்கேப் பண்ணிவிடுவாங்க. தலைவலி, காய்ச்சல்னா வீட்டு வைத்தியம் செய்வாங்க.’’                      

கவனிங்க ஃப்ரெண்ட்ஸ்: தாத்தா, பாட்டிகளுக்கு ராத்திரியில் அதிகம் எழுந்து செல்லும் சிரமம் இருக்கக் கூடாது. அவங்களுக்குப் பக்கத்தில் தண்ணீர் பாட்டில், டார்ச் லைட் எல்லாம் இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க. அவங்களுக்கு அடிக்கடி மறதி ஏற்படலாம். அதனால், இதை எல்லாம் நாமதான் செய்துகொடுக்கணும்.’’   

தாத்தா பாட்டி எங்க செல்லம்!

தாத்தா: பி.சுந்தர்ராஜன்
பாட்டி: தனலட்சுமி
பேரன்: ஏகலைவன்

“தாத்தாவும் பாட்டியும்தான் எங்களோட ஆபீஸர்ஸ். ஸ்கூலுக்குக் கிளம்புற அவசரத்துல நாங்க அங்கேயும் இங்கேயும் பறந்துட்டு இருப்போம்.  ‘ஹோம்வொர்க் நோட்டு எடுத்துக்கிட்டீங்களா?  ஜியோமெட்ரி பாக்ஸ் இருக்கா?’னு கேட்டுக் கேட்டு செய்றது தாத்தாதான்.  கர்ச்சீஃப், லஞ்ச் டவல் என எல்லாம் மறக்காமக் கொடுக்கிறது பாட்டிதான். இதை எல்லாம் மறந்துட்டு ஸ்கூலுக்கு வந்து, பனிஷ்மென்ட் வாங்கும் ஃப்ரெண்ட்ஸைப் பார்க்கிறப்போதான் தாத்தா, பாட்டி அருமை புரியும்.  மனசுக்குள்ளே ‘தேங்ஸ்’ சொல்லுவோம்.’’

தாத்தா பாட்டி எங்க செல்லம்!

கே.ஆர்.ராஜமாணிக்கம்
படங்கள்: ப.சரவணகுமார்
அ.குரூஸ்தனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism