
மழை இல்லாமல் பூமி இல்லை. மழை வந்ததும், அதை வணங்குவதும் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்து ஆட்டம் போடுவதும் சரிதான். அதே நேரம், நம் உடலையும் கவனித்துக்கொள்வது முக்கியம். மழைக் காலத்தில் சுகாதார சீர்க்கேடு காரணமாக வரும் தொல்லைகளும் அதிகம். ‘என்ன சாப்பிடலாம்...எதை சாப்பிடக் கூடாது... என்ன மாதிரி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்?’ என விளக்குகிறார், குழந்தைகள்நல மருத்துவர் பழனி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
*பெற்றோர்களிடம் சொல்லி, வீட்டுத் நீர்த்தொட்டியை மழைக் காலத்துக்கு முன்னரே சுத்தம் செய்து மூடுங்கள்.
*மாடியிலும், வீட்டைச் சுற்றியும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள, பெற்றோர்களுக்கு உதவுங்கள்.
* மழையினால் தேங்கும் கழிவுநீரில் நோய்த்தொற்றுக்கள் உருவாவதால், அவற்றில் கால் வைத்து விளையாடாதீர்கள்.

* வெளியில் சென்று வந்தபின், கை, கால் மற்றும் முகத்தை மிதமான வெந்நீரில் கழுவுங்கள்.
* நன்கு காய்ந்த, தூய்மையான ஆடைகளையே உடுத்துங்கள்.
* மழை சமயத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், 200 மில்லி தண்ணீரில் 1 ஸ்பூன் உப்பும் 1/2 ஸ்பூன் சா்க்கரையும் சோ்த்துக் குடிக்கலாம்.

*மழையில் நனைவது குஷியாக இருக்கலாம். ஆனால், சிலருக்கு உடனடியாக காய்ச்சலை உண்டாக்கிவிடும். எனவே, மழை பெய்யும்போது குடை அல்லது ரெயின்கோட் பயன்படுத்துங்கள்.
*வானிலை மாற்றத்தின் காரணமாக வரும் ‘வாடைக்காற்று’ வீசும்போது, அதிகம் வெளியில் செல்லாதீர்கள்.

*தூங்கும்போது கொசுவலை கட்டி, அதில் உறங்குங்கள்.
*பள்ளியில் உணவு உண்ணும்போது, உண்ணும் உணவு மற்றும் நீரை, அதிக நேரம் திறந்துவைக்காதீர்கள்.

*நன்கு சுத்திகரிக்கப்பட்ட வெந்நீரை இடைவேளை நேரங்களில் குடிக்கவும்.
*குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் உணவுகளையும், பழைய உணவுகளையும் உண்ணாதீர்கள்.

*காய்ச்சல் வந்தால், வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து நெற்றியில் வைக்கலாம்.
*தலைவலி மற்றும் நெஞ்சு சளி, மூக்கடைப்பு இருந்தால் மாத்திரைகளைத் தவிர்த்து, நீராவியில் சிகிச்சை எடுப்பது நல்லது.
*காய்ச்சல் நேரங்களில், குறைந்த அளவு வெந்நீரில் குளித்தால் போதும்.
*கைகுட்டை, லஞ்ச் டவல் ஆகியவற்றை தினமும் மாற்றி பயன்படுத்துங்கள்.
எஸ்.டேவிட் ஆரோக்கிய செல்வி, ஓவியங்கள்: பிள்ளை