ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டதுதான் கடந்த வார ஷாக். பாரீஸில் அவர் தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையன் துப்பாக்கி வைத்து மிரட்டி கிம்மின் நகைகளைக் கொள்ளையடித்துச் செல்ல, பற்றிக்கொண்டது தீ. தேடுதல் வேட்டையில் போலீஸார் மும்முரமாக இருக்க, இன்னும் ஷாக்கில் இருந்து மீளவில்லை கிம். அவரை கவுன்சிலிங்கிற்கு அழைத்துச் சென்று வருகிறார் கணவர் வெஸ்ட். `நீங்க காயமில்லாம தப்பிச்சதே போதும்' என ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள் ரசிகர்கள். #போன உசுரு வந்துருச்சே...

நட்சத்திர ஜோடியான பென் அஃப்லெக்கும் ஜெனிஃபர் கார்னரும் சில மாதங்களுக்கு முன்தான் பிரிந்தார்கள். சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர், `இப்போது நீங்கள் சிங்கிள்தானா' என ஜெனிஃபரிடம் கேட்க `இல்லை. பிராட் பிட்டோடு டேட்டிங் போய்க்கொண்டு இருக்கிறேன்' என சிரித்துக்கொண்டே கொளுத்திப் போட்டிருக்கிறார். அவர் விளையாட்டாகத்தான் சொன்னாரென்றாலும் பிராட் பிட் - ஏஞ்சலீனா விவாகரத்து விவகாரம் தீப்பிடித்து எரியும்போது இந்த நக்கல்கள் எல்லாம் தேவையா எனவும் குரல்கள் எழுகின்றன. #எவ்வளவோ பண்ணிட்டோம்!

வெரைட்டி வெரைட்டியாய் நடித்து கெத்து காட்டுவதில் ஹாலிவுட் நடிகை எமிலி பிளன்ட், கில்லி. சமீபத்தில் வெளியான அவரின் 'தி கேர்ள் ஆன் தி ட்ரைன்' படத்தில் செமையாக நடித்திருக்கிறார் எனப் பாராட்டுகள் குவிகின்றன. கடந்த தலைமுறையின் தலைசிறந்த நடிகையான மெரில் ஸ்ட்ரீப்பை நினைவுப் படுத்துகிறார் என விமர்சகர்கள் ஓப்பனாகச் சொல்ல, அம்மணி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிகிறது. க்யூட் சிரிப்போடு அதைப் பணிவாக மறுக்கிறார் எமிலி. #தன்னடக்கமே தலை காக்கும்!

சோஷியல் மீடியாவின் விமர்சன ராக்கெட்டில் இருந்து பிரபலங்களும் தப்ப முடியாது. லேட்டஸ்ட்டாக நெட்டிசன்களிடம் சிக்கி வறுபடுபவர் பிரபல அமெரிக்க மாடலான க்றிஸி டெய்ஹன். சமூக வலைதளங்களில் பயங்கர ஆக்டிவ்வாக கருத்துகளைப் பதிவார் க்றிஸி. உடனே தாவி வந்து திட்டுவார்கள் நெட்டிசன்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த க்றிஸி இப்போது தன் சோஷியல் மீடியா கணக்கை பிரைவேட் மோடுக்கு மாற்றிவிட்டார். 'இவ்வளவு நெகட்டிவ் எனர்ஜியை என் உடலும் மனதும் தாங்காது' என்பது க்றிஸியின் விளக்கம்.
#என்னப்பா... இப்படி பண்றீங்களேப்பா!

- போதைப்பாண்டி