‘பான்’ விற்கும் பாண்ட்!

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் எத்தனை பேர் நடித்திருந்தாலும், தனது கம்பீரத் தோற்றத்தால் பலரின் மனத்தில் இடம்பிடித்தவர் பியர்ஸ் பிராஸ்னன். வயசானாலும் ஸ்டைல் இன்னும் அவரை விட்டுப் போகவில்லை என்றே சொல்லவேண்டும். இவர் புதிதாக நடித்துள்ள ‘பான்’ விளம்பரம் ஒன்று வெளியாகி இவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விளம்பரத்தில் வயதான தோற்றத்தில் தனது பிரத்தியேக பாண்ட் லுக்கில் தோன்றினாலும், ‘பான்’ விளம்பரத்தில் நடித்ததன் மூலம் பிராஸ்னன் மீதான பிம்பம் ரசிகர்களிடையே சுக்குநூறாகியுள்ளது. #Piercebrosnan பெயர் கடந்த வாரம் முழுவதும் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது. அவசரப்பட்டுட்டியே கொமாரு!

எந்திரன் 2.0

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் என மெகா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகிவருகிறது எந்திரன் 2.0 திரைப்படம். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதால், இப்போதே பாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரம் வெளியிட்டார். சிறிது நேரத்தில் #Superstar டேக்கில் வைரலான இந்தப் புகைப்படம், அதன்பின் மீடியா வட்டாரங்களில் செய்தியானது. வந்துட்டேன்னு சொல்லு!

நம்பர் 1 இந்தியா!

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. இதனைத் தொடர்ந்து ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி, பாகிஸ்தானைப் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 500-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி, தரவரிசையில் முதலிடம் எனத் தொடர்ந்து சாதனை படைத்து வருவதால் விராட் கோலி மட்டுமன்றி இந்திய ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர். ரசிகர்கள் உற்சாகப் பொங்கல் வைத்ததில் #IndiaNo1 #INDvNZ போன்ற டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்தது. எங்க ஏரியா உள்ள வராதே!

வித்தியாச விழிப்புணர்வு!

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவது, அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவித்தது, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி மசூத் ஆசாரை ஆதரித்தது என நமது அண்டை நாடான சீனா, தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. பொறுமையிழந்த நெட்டிசன்ஸ் #boycottchinaproduct என்ற டேக்கில், சீனப்பட்டாசு உள்பட எந்த சீனப்பொருட்களையும் வாங்காமல் தவிர்த்து அந்நாட்டிற்குத் தக்க பதிலடி தரவேண்டுமென ட்விட்டரில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த டேக் அதிரி புதிரி ஹிட் அடித்து பலரையும் ‘அட!’ போட வைத்துள்ளது.

மக்கள் கலைஞன்!

நகைச்சுவை நாயகன் வடிவேலுவின் பிறந்தநாளாக அக்டோபர் 10ம் தேதியை இணையமே தவறுதலாகக் கொண்டாடியது. ஆனால் செப்டம்பர் 12-ம் தேதிதான் அவரது உண்மையான பிறந்தநாளாம்! விக்கிப்பீடியாவின் புண்ணியத்தால் பிறந்தநாளை (?) ரசிகர்கள் லேட்டாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். நெட்டிசன்களும், மீம் கிரியேட்டர்களும் சோஷியல் மீடியாவில் திருவிழாவாகக் கொண்டாடித் தீர்த்தனர். #vadivelu #HappyBirthdayVadivelu #vadiveluforlife போன்ற டேக்குகள் இந்திய அளவில் கலக்கின. வாழ்த்துகள் வைகைப்புயல்!

விரைவில் ஷரபோவா!

ரஷ்யாவைச் சேர்ந்த அழகுப்பதுமை மரியா ஷரபோவா டென்னிஸ் ஆடும் அழகைப் பார்ப்பதற்காகவே பலரது வீட்டிலும் ரிமோட்கு சண்டை நடக்கும். இவர் ஊக்கமருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியது தெரியவந்ததால் 2 வருடங்கள் இடைக்காலத் தடைவிதித்து பலரது சாபத்தையும் வாங்கிக் கட்டிக்கொண்டது சர்வதேச டென்னிஸ் சம்மேளனம். இதை எதிர்த்து ஷரபோவா மேல்முறையீடு செய்ததில் தற்போது தடைக்காலம் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டிருக்கும்போது தடைக்காலத்தை ஏன் குறைக்க வேண்டும் என விமர்சனங்களும் குவிந்தன. எது எப்படியோ... #Sharapova பெயர் உலக ட்ரெண்ட்டில் முதலிடத்தைப் பிடித்தது. நீ வா சுருதி!

கூகுள்டா!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்குப் போட்டியாக, கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எந்த அளவுக்குப் போட்டியென்றால்... ஆப்பிளின் ‘சிரி’க்குப் பதில், இதில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி கொடுக்கும் அளவிற்கு! கூகுள் பிக்ஸல் மற்றும் பிக்ஸல் எக்ஸல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இரு மாடல்கள் விரைவில் சந்தைக்கு வரவிருக்கின்றன. இதன் அறிமுகவிழா நடந்துகொண்டிருக்கும்போதே ட்விட்டரில் #GoogleEvent டேக்கில் இதுபற்றிய அப்டேட்கள் கலக்கியதில் ட்ரெண்ட்டில் இடம்பிடித்தது. எல்லாம் சரி, இந்த பிக்ஸல் போனோட தொடக்க விலை எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் ரூ.57,000 தான்! ஆத்தி!

- ட்ரெண்டிங் பாண்டி