Published:Updated:

உற்சாகம் தரும் உடற்பயிற்சி! - விஷ்ணு விஷால்

உற்சாகம் தரும் உடற்பயிற்சி! - விஷ்ணு விஷால்
பிரீமியம் ஸ்டோரி
உற்சாகம் தரும் உடற்பயிற்சி! - விஷ்ணு விஷால்

உற்சாகம் தரும் உடற்பயிற்சி! - விஷ்ணு விஷால்

உற்சாகம் தரும் உடற்பயிற்சி! - விஷ்ணு விஷால்

உற்சாகம் தரும் உடற்பயிற்சி! - விஷ்ணு விஷால்

Published:Updated:
உற்சாகம் தரும் உடற்பயிற்சி! - விஷ்ணு விஷால்
பிரீமியம் ஸ்டோரி
உற்சாகம் தரும் உடற்பயிற்சி! - விஷ்ணு விஷால்
உற்சாகம் தரும் உடற்பயிற்சி! - விஷ்ணு விஷால்

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தமிழக அணிக்காக முழுநேர கிரிக்கெட் வீரர் அவதாரம்; திரையில் இளம் இயக்குநர்களுடன் கூட்டணி சேர்ந்து சிக்ஸர் அடிக்கும் ‘தில்’ நடிகர்; செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகளின் பங்கேற்பாளர்... எனக் கச்சிதமாக ஃபிட்டான உடல்வாகுடன் வலம்வருபவர் விஷ்ணு விஷால். அவரது ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸைப் பகிர்ந்துகொள்கிறார் இங்கே...

``முழுமூச்சா கிரிக்கெட் விளையாடும்போது, ரன்னிங் செல்வேன். அதுதான், என் ஃபிட்னெஸுக்கு காரணமாயிருந்தது. இப்போது, நடிகனாக ஆனதற்குப் பிறகு, ஷட்டில்காக் விளையாடக் கற்றுக்கொண்டேன்; தினமும் ஒரு மணிநேரம் விளையாடுவேன். என்னுடைய நண்பர் நடிகர் ஆர்யா, சைக்கிளிங் பண்ணச் சொல்லி அட்வைஸ் செய்தார். அதனால, இப்போ சைக்கிளிங்கும் செய்றேன். ஷூட்டிங் இருக்கிற நாட்கள்லகூட, காலையில் 5.30 மணிக்கெல்லாம் எழுந்து, தங்கியிருக்கிற இடத்துல இருந்து  சைக்கிளிலேயே, ஷூட்டிங் ஸ்பாட் போயிடுவேன்.

டயட் ஃபாலோ பண்றது இல்லை. நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது, சந்தோஷமாக சாப்பிடத்தானே? அதனால, சாப்பிடணும்னு தோணிச்சுனா, நன்றாக  சாப்பிடுவேன். அரிசி சாதமும், சாக்லேட் பிரவுனி ஐஸ் க்ரீமும்தான் என்னோட ஃபேவரிட். அதேநேரம், குளிர்பானங்களைத் தொடமாட்டேன்.

படத்தின் கதைக்கேற்ப உடல் ஃபிட்டா இருக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னால், அதற்கு ஏற்றதுபோல டயட்டை மாற்றிக்கொள்வேன். வொர்க்அவுட்டும் திட்டமிட்டு செய்வேன்.

தினசரி டைம் டேபிள்

காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ் அருந்துவேன். உடல் பருமன் பிரச்னையில் இருந்து தப்பிக்க, ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஜிம் பயிற்சி செய்வேன். லைட்வெயிட்  வொர்க்அவுட்ஸ் மட்டும் தொடர்ந்து செய்வேன். இதனால், சிறிது காலத்துக்கு உடலில் பெரிதாக சதை போடாது. 

சீசனுக்கு ஏற்றதுபோல், கிடைக்கும் பழங்கள் எல்லாவற்றையும் டேஸ்ட் செய்வேன். தினமும் காலை 8.30க்குள்ளும், மதியம் 2 மணிக்குள்ளும், இரவு 8.30 மணிக்குள்ளும் சாப்பிட்டுவிடுவேன். இரவில் 8.30க்குப் பிறகு பெரும்பாலும் எதையும் சாப்பிடமாட்டேன்.  நைட் ஷூட்டிங் இருந்தால், டின்னராக கேரட் சாலட் சாப்பிடுவேன். இது நான் ஸ்ட்ரிக்டாக ஃபாலோ செய்யும் டயட் ரூல். மற்ற உணவுகளைச் சாப்பிடமாட்டேன் என்று இல்லை. பிரியாணி என்றால் எனக்கு உயிர். அதிலும் என் நண்பர்கள் ஆர்யா, விஷால், விக்ராந்த்கூட ஜாலியா அரட்டை அடிச்சுக்கிட்டே பிரியாணி சாப்பிடும்போது, ஒட்டுமொத்த ஸ்ட்ரெஸும் காணாமல் போயிடும்.

8 மணி நேர தூக்கம்

சாமான்ய மக்களின் வாழ்க்கையைப் போன்றதுதான் என்னுடைய வாழ்வும். ஒரு நடிகன் என்பதற்காக, ரொம்ப ஸ்பெஷல் கவனிப்பு எல்லாம் இருக்காது. வாரத்துக்கு ஒரு தடவை, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பேன். ஒருவனுடைய ஓய்வுதான், அவனோட முகத்தில் தெரியும் புத்துணர்ச்சிக்கு முக்கியக் காரணம். அதனால், தினமும் 8 மணி நேரம் கண்டிப்பாகத் துங்குவேன். என் முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்க போதுமான அளவு தூங்குவதுதான் காரணம்.

ஒரு வேலையை செய்வதற்கும், தினசரி உடற்பயிற்சி செய்துவிட்டு வேலை செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உடற்பயிற்சி செய்துவிட்டு, ஷூட்டிங் செல்லும்போது, அந்த நாள் முழுவதும் புத்துணர்வாக இருப்பதுபோல உணர்வேன். உடலும் மனமும் ஃபிரஷ்ஷாக இருப்பதால், நடிப்பில் நன்கு கவனம் செலுத்தத் தோன்றும். ஃபர்ஸ்ட் ஷாட்டிலேயே, டேக் ஓ.கே ஆகும் அளவுக்கு அது என்னை தயார் செய்கிறது.  டயட்டும் தூக்கமும் ஃபிரேமில் என் முகம் அழகாக வர உதவுகின்றன. ஆரோக்கியத்திற்கும்! ஒவ்வொருவரும் உற்சாகமாக வேலை செய்ய வேண்டும் என்றால், தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம்”  என டிப்ஸ் தருகிறார் விஷ்ணு விஷால்.

நமக்குத்தான் பிரியாணி ஞாபகத்துக்கு வந்து லேசாக பயமுறுத்துகிறது!

- ம.மாரிமுத்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism