``என்னடி, ஆயுத பூஜை லீவுல ‘ரெமோ’ பார்த்தீங்கள்ல... படம் எப்படி''
``அட போங்கப்பா... ஐ’ம் டிஸப்பாயின்டட். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் லவ் பண்றதை, டார்கெட் ஃபிக்ஸ் அச்சீவ் பண்ற மாதிரி காட்டி நியாயம் பேசுறதை தொடரப் போறாங்களோ?''
``விடும்மா, விடும்மா! சினிமாவுக்காக நீ ஆங்ரி பேர்ட் ஆகாத!''
``அதைவிடு இனியா... இங்க பாரேன் அனு ஸ்கூட்டரை! டூவீலரை ஒரு லாரி தண்ணியில கழுவியிருக்கா போல!”

``டூவீலர் வாங்கி முழுசா ரெண்டு வருஷம்கூட ஆகல. அதுக்குள்ள வண்டி கண்டிஷன் இல்லாமப் போயிடுச்சு. அதனால சர்வீஸ் சென்டர்ல விட்டேன்.’’
‘`அதான் வாட்டர் வாஷ் பண்ணிக் கொடுத்திருக்காங்களா?”
‘`வாட்டர் வாஷ் எல்லாம் ஓ.கே. அப்புறம் என்னாச்சுனு கேளு. வண்டியில அதை மாத்தணும், இதை மாத்தணும்னு எக்கச்சக்க லிஸ்ட் கொடுத்தாங்க. வண்டி கண்டிஷனுக்கு வந்தா சரினு நானும் ஏத்துக்கிட்டேன். ஆனா, எதுவுமே சரி பண்ணாம 3,300 ரூபாய் பில் போட்டுட்டாங்க!”
``சொல்லு நெக்ஸ்ட்!”
``இங்க என்ன கதையா சொல்றாங்க? அப்புறமென்ன... ‘கண்ணாடியை மாத்துனா வண்டி ஓடுமா ஜீவா' மாதிரி ஆயிடுச்சு என் நிலைமை!”
‘`லூஸா நீ? வண்டியை டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்க்காம எதுக்கு பில் கட்டினே?”
‘`அட... பில் கட்டின பிறகுதான்டி வண்டியை டிஸ்சார்ஜ் பண்ணினாங்க.”
‘`சரி எப்படியோ ஸ்கூட்டர்தான் ஜம்முன்னு ரெடியாகிடுச்சே... தீபாவளிக்கு டிரெஸ் எடுக்க எப்ப போகலாம்?”
‘`எங்க அப்பா ஆபீஸ்ல இருந்து வரவே நைட் 10 மணி ஆயிடுது. அவர்கிட்ட கேட்டுட்டு நாளைக்கு சொல்றேன்பா...”
‘`ஆமா, ஆபீஸ் வொர்க் 6 மணிக்கெல்லாம் முடியாதா?’’
‘`பேருக்குதான் 6 மணி. ஆனா, எப்பயாச்சும் தான் அவரை வீட்ல 7 மணிக்குப் பார்க்க முடியும்.’’
‘`டோன்ட் வொரி... அங்கிளுக்கு ஒரு ஆர்ட்டிகிள் ஷேர் பண்றேன். அதுல இருக்குற 3 ஆப்ஸை அவர் டவுன்லோடு பண்ணிக்கிட்டா போதும்... வேலையச் சீக்கிரம் முடிக்க அவருக்கு ஐடியா கிடைக்கும்.”
‘`ஆதிரா, நீ ஏன் உயிரோட இருக்கணும்னு ஆசைப்படுற?”
‘`நீ ஏன் இப்டி டக்குனு குண்டை தூக்கிப் போட்ட மாதிரி கேள்வி கேக்குற?’’
‘`சீரியஸா பேசிட்டு இருந்தீங்களா, அதான் டைவர்ட் பண்ணலாமேனு...”
‘`இனியா, நீ ஜோக்குக்கு கேட்டாலும் நிஜமாவே அப்படி ஒரு கேள்வியை அடிப்படையா வெச்சு ஒரு ஆர்ட்டிகிள் படிச்சேன். ஒவ்வொருத்தருக்கும் இந்த உலகத்துல ஏதாவது பிடிச்சிருக்கும். அதுக்காகத்தான் வாழணும்னு ஆசைப்படுவாங்க, நமக்கென்ன பிடிக்கும்னு நாம நம்மள செக் பண்ணிக்க ஒரு ஆர்ட்டிகிள் என்கிட்ட இருக்கு. அனுப்புறேன்... சியர்ஸ் கேர்ள்ஸ்!”
‘`ஸ்பிலிட், ப்ளோட்ஸ், அஸ்ககாங், சண்டே, குக்கீ சண்ட்விச், ஹாலோ ஹாலோ, மட்சா ஐஸ்க்ரீம், பாப்சிகிள்ஸ்...’’
‘`ஏய்... உன்ன ஆர்டிகிள் படிக்கச் சொன்னா நீ என்ன என்னன்னமோ உளறிட்டு இருக்க?”
‘`ஹாஹா... இதெல்லாம் ஐஸ்க்ரீம் வெரைட்டியாம். அதான் படிச்சுப் பலன் அடையுறேன்!”
‘`ஷேர் பண்ணினா நாங்களும் பார்ப்போம் பக்கி!”
‘`எதுக்கு? அப்புறம் இஷ்டத்துக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு வெயிட் போட்டுடுவீங்க மக்களே...’’
‘`ஒரு நாளைக்கு யார் யாருக்கு எவ்ளோ கலோரிகள் தேவைனு என்கிட்டயும் ஒரு ஆர்ட்டிகிள் இருக்கு மச்சி. நியாயமா பார்த்தா உன் வயசுக்கும் வெயிட்டுக்கும் நீதான் கலோரி கன்ட்ரோல்ல இருக்கணும் ஆதிரா.’’
‘`சரீய்... சரீய்... இந்த சீக்ரெட் நமக்குள்ளேயே இருக்கட்டும்!”
- கச்சேரி களைகட்டும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணைய தள முகவரியை தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

6 மணிக்கே வீட்டுக்குக் கிளம்ப ஐடியா கொடுக்கும் ஆப்ஸ்!
http://bit.ly/2d9hSbi

நீங்க எதுக்காக வாழணும்னு ஆசைப் படுறீங்க? தெரிஞ்சிக்கலாமே!
http://bit.ly/2dmAu69

ஸ்பிலிட், அஸ்ககாங், செண்டல்..இதெல்லாம் என்ன தெரியுமா?
http://bit.ly/2dOLa0r

யாருக்கு எவ்ளோ கலோரி வேணும்? இதைப் படிக்கலாமே!
http://bit.ly/2dYWEKQ