Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

Published:Updated:
ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
ஹா[லிவு]ட் டைரி

ந்தவார ஹாட் பக்கங்களுக்குச் சொந்தக்காரர் `இன்டர்ஸ்டெல்லார்', `மார்ஷியன்', `ஜீரோ டார்க் தர்ட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்த ஜெஸ்ஸிகா செஸ்டைன்.

ஹா[லிவு]ட் டைரி

* சிறு வயதிலேயே ஜெஸ்ஸிகாவின் பெற்றோர் கருத்து வேறுபாட்டால் பிரிய, வளர்ப்புத் தந்தைதான் ஜெஸ்ஸிகாவுக்கு எல்லாமுமாக இருந்தார். அதனாலேயே அவரை அவ்வளவு பிடிக்கும் ஜெஸ்ஸிகாவுக்கு! #அமெரிக்கத் தங்கமீன்.

* ஷேக்ஸ்பியரின் அதிதீவிர ரசிகை. ஸ்கூலுக்கு மட்டம் போட்டுவிட்டு நாடகங்களில் நடிக்கப் போய்விடுவார். அப்படி வந்ததுதான் இந்தக் கலை ஆர்வம். #நாடகக் காதலி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹா[லிவு]ட் டைரி

* `அயர்ன் மேன் 3', `ஆப்லிவியன்', `டயானா' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டு கால்ஷீட் பிரச்னைகளால் விலகினார். #ஜஸ்ட் மிஸ்!

* பெண்ணியச் செயற்பாட்டாளர். `ஹாலிவுட், சம்பள விவகாரத்தில் பெண்களை ஏமாற்றுகிறது' எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். #தில்லு பேபி!

ஹா[லிவு]ட் டைரி

* இவர் முக்கிய கேரக்டரில் நடித்த `மாமா', `ஜீரோ டார்க் தர்ட்டி' இரண்டு படங்களும் ஒரே வாரம் ரிலீஸாகி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தன. இப்படி லீடு ரோலில் ஒரு பெண் நடித்து இரண்டு படங்கள் ஹிட் அடிப்பது ஹாலிவுட் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை #கலெக்‌ஷன் கில்லி.

*
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அல் பசினோவுக்கு இவரின் நடிப்பு ரொம்பப் பிடிக்கும். அவரே பல இயக்குநர்களிடம் இவரை சிபாரிசு செய்திருக்கிறார். #சம்திங் சம்திங்!

ஹா[லிவு]ட் டைரி

* உலகின் செக்ஸியான சிரிப்பழகி, உலகின் செக்ஸியான வெஜிடேரியன், உலகின் செக்ஸியான பெண் என எக்கச்சக்க பெருமைகளுக்குச் சொந்தக்காரர். #அவ்ளோ அழகு!

* பெர்ஷனல் வாழ்க்கையின் மீது மீடியா வெளிச்சம் படவேகூடாது என்பதில் கறாராக இருப்பார். ரெட் கார்ப்பெட்டில் கூட ஜோடியாக நடப்பதில்லை. #ஸ்ட்ரிக்ட் பியூட்டி!

- ஃபாலோயர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism