Published:Updated:

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

ஆஃப் த ரெக்கார்டு!

Published:Updated:
ஆஃப் த ரெக்கார்டு!
பிரீமியம் ஸ்டோரி
ஆஃப் த ரெக்கார்டு!
ஆஃப் த ரெக்கார்டு!

• சித்தியுடன் சண்டை போட்டிருந்த ‘கடைத்தெரு’ நடிகை அவர் தன்னைப் விட்டுப் போனபிறகு தன் மார்க்கெட் அதள பாதாளத்திற்குப் போனதை உணர்ந்து, மீண்டும் உறவை இணைக்கத் தூது விட்டிருக்கிறாராம்.

• போட்டி என்றால் முதல் ஆளாக நிற்கும் ‘சண்டக் கோழி’ நடிகர் தன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்தார். இடையில் ‘பளிச்’ நடிகை சரியாக படப்பிடிப்புக்கு வராததால் சொதப்ப, ‘கிராஃபிக்ஸ்’னாலதான் லேட் எனக் காரணம் சொல்லி, போட்டியிலிருந்து விலகிவிட்டார் கோழி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• கடைசிச் சுற்றில் வெற்றி பெற்ற ‘தவ’ நடிகரைத் தேடிப் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் தயாரிப்பாளர் ஒருவர் தன் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நீங்க நடிக்கணும் எனக் கேட்க, இரண்டு நாளைக்கு இரண்டு கோடி சம்பளம் கேட்டாராம்!

• ‘ரௌடி’ நடிகரை `அண்ணன்' என உரிமையோடு அழைத்த ‘மீன்’ நடிகர் சமீபத்தில் ஒரு கோடி மதிப்பில் வந்த போன் விளம்பர வாய்ப்பைக் குறுக்கு வழியில் தட்டிப் பறித்துவிட்டாராம். இதைக் கேள்விப்பட்ட அண்ணன் அப்செட்!

• இங்கிலீஷ் பலகாரம் இயக்கிய ‘பெண்’ படம் படுதோல்வி அடைந்ததால் அவரின் அடுத்த படத்தில் நடிக்க ஹீரோ ஆர்வம் காட்டவில்லையாம். இதனால் முழுத் திரைக்கதையையும் முடித்துவிட்டுத்தான் படத்தைத் துவக்குவேன் எனச் சொல்லி அமெரிக்காவுக்குப் பறந்துவிட்டார்.

• `கவுண்டிங்' படத்தின் படுதோல்விக்குப் பிறகு ரொம்பவே அமைதியாக முழு ஒத்துழைப்பு கொடுத்து ‘டபுள் ஃபேஷ்’ படத்தில் நடித்தாராம் ‘மதுபான’ நடிகர். தற்போது ‘டபுள்’ படம் வெற்றியால் அடுத்த பட தயாரிப்பாளரிடம் ஏகப்பட்ட கண்டிஷன் போடுகிறாராம்.

• எந்தப் பிரச்சினைக்கும் போகக்கூடாது என்றுதான் நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. ரசிகர்களுக்கும், ரசிகர்களாலும் பிரச்னைகள் வரக்கூடாது என்றுதான் மன்றங்களையும் கலைத்தார் ‘நடை' நடிகர். அப்படி இருந்தும் அடுத்த முதல்வர் இவர்தான் என யாரோ பரப்பி வருவதால் மனம் நொந்து நடக்கிறாராம், நடை நடிகர்.

• காமெடி ஹீரோவின் சமீபத்திய படம் பெரும் வெற்றி பெற்றதில் ‘பிரகாச’ நடிகர் ரொம்பவே கலங்கிப் போய்விட்டாராம். தன்னை வசூலில் முந்திவிட்டதால், தன் அடுத்த படம் வெற்றி பெற்றே ஆகணும் என வெறியோடு இருக்கிறாராம்.