Published:Updated:

FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு
பிரீமியம் ஸ்டோரி
FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு

FOREIGN சரக்கு

Published:Updated:
FOREIGN சரக்கு
பிரீமியம் ஸ்டோரி
FOREIGN சரக்கு
FOREIGN சரக்கு

ஹாலிவுட் பார்பி பொம்மை சார்லீஸ் தெரான் சமீபத்தில் நடித்த வீடியோதான் இந்தவார ஹாட் டாபிக். ஒரு பெர்ஃப்யூம் நிறுவனத்திற்காகக் கடற்கரைத் தீவில் சார்லீஸ் பேசுவது போல இருக்கும் அந்த வீடியோ நறுக் சுருக் வசனங்களுக்காக லைக்ஸ் குவித்து வருகிறது. சும்மா இல்லை. கோல்டன் நிற டிரெஸ்ஸில் மஞ்சள் வெயில் மாலையில் தங்க நிற முடியைக் கோதிக்கொண்டு சார்லீஸ் நடக்கும் அந்த ஸ்டைல்... ஹப்ப்பா! சும்மா ஜொலிக்கிறார். #வாசனை வருதே... வாசனை வருதே!

FOREIGN சரக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹாலிவுட்டில் ஃபிட்னஸ் ஃப்ரீக்குகள் ஏகப்பட்ட பேர் உண்டு. அதில் முக்கியமானவர் நடிகை கேட் ஹட்சன். `எப்படி முதல் படத்துல இருந்து அப்படியே இருக்கீங்க' என இவரிடம் சிலர் கேட்க, `வேண்டாவெறுப்பாய் எக்சர்ஸைஸ் செஞ்சா, ரிசல்ட் கிடைக்காது. நிஜமாவே அக்கறை இருக்கணும்' என கருத்து முத்து உதிர்த்திருக்கிறார். `கஜினி' சூர்யாவின் பன்ச் சாயலில் இருக்கும் இந்த டயலாக் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரல். #அக்கரை அக்கறை

FOREIGN சரக்கு

`சில ஆண்டுகளுக்கு முன் என் சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தேன். நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர்ஹிட் ஆனதால் லேசாகத் தலைக்கனம் வந்தது. இதைப் பார்த்த என் தந்தை, `இப்போ நீ என்ன கிழிச்சுட்டேன்னு இவ்ளோ பந்தா பண்ற' என ஓப்பனாகக் கேட்டார். முதலில் அவர் மேல் கோபம் வந்தாலும் நிதானமாக யோசித்துப் பார்த்ததில் உண்மை புரிந்தது. அதிலிருந்து இதெல்லாம் மாயை எனப் பிரித்துப் பார்க்கப் பழகிவிட்டேன்' என மனம் திறந்திருக்கிறார் ஹாலிவுட் நடிகை ஜிவ்னித் பால்ட்ரோ. #ஓப்பன் ஸ்டேட்மென்ட்!

FOREIGN சரக்கு

ஹாலிவுட் ரசிகர்கள் நடிகை சைலீன் வுட்லீயைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். அங்கே ஒரு எண்ணெய் நிறுவனம் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க, அதைக் கடுமையாகத் திட்டியதுடன் போராட்டத்திலும் குதித்தார் சைலீன். இதற்காக போலீஸ் அவரைக் கைது செய்ய, நெட்டிசன்கள் அவருக்கு ஏகபோக ஆதரவு அளித்தனர். `என்ன ஆனாலும் சரி, பின் வாங்கப்போவதில்லை' என ரிலீஸான பின் அறிவித்திருக்கிறார் இந்தத் தைரியலட்சுமி. #துணிச்சல் நாயகி!

- போதைப்பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism